Sunday, December 24, 2017

மீன்பிடித் தொழில் விவசாயத்தைப் போல கடந்த 25 ஆண்டுகளாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

மீன்பிடித் தொழில் விவசாயத்தைப் போல கடந்த 25 ஆண்டுகளாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை

என்ற மீனவர் நிலை.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழகத்தின் கடலோர மீனவர்கள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம். பாதுகாப்பான நவீன படகுகள் கிடையாது. பல மீனவர்கள் இரவல் படகுகளை வாங்கிக்கொண்டு தான் மீன் பிடிக்கவே செல்கின்றனர். திசைகாட்டி இல்லாமல் திசை தெரியாமல் திண்டாடுகின்றதொரு சூழல். 

இயற்கைச் சீற்றங்களின் முன்னெச்சரிக்கைத் தகவல்களும் முழுமையாக மீனவர்களிடம் சென்றடைவது இல்லை. பிற படகுகளை அடையாளம் காண்பதற்காக விளக்குகளை வைத்தால் சிலநேரங்களில் அந்த விளக்குகள் எரிவதுமில்லை. செல்போன்களில் 30 நாட்டிக்கல் மைல்கள் வரை தான் தொடர்பு கொள்ள முடியும். இப்படியான பிரச்சனைகளை கவனிக்க மத்திய அரசின் தனி அமைச்சகம் வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் அதற்கான நடவடிக்கைகள் இல்லை. கடலையே வாழ்வாதாராமாகக் கொண்டு மீன்பிடித்தொழில் என்பது நிச்சயமற்ற சூழல் தான்.

தூண்டில் வளைவு கடல் அலையில் வேகத்தால் காணாமல் போகிறது. கடல் அரிப்பும் அதிகரித்து வருகின்றது. இந்த தூண்டில் வளைவு பிரச்சனை குறிப்பாக வடசென்னையில் எண்ணூர், திருவொற்றியூர் பாரதி நகரில் இருந்து காசிமேடு வரை கடல் அலையின் வேகத்தால் சரிந்துவிடுகின்றன. இப்படியான சூழலில் அரசும் பார்த்தும் பார்க்காமலும் இருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

24-12-2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...