Saturday, December 16, 2017

மானாவாரி கரிசல்காட்டு விவசாயிகளின் நிலை

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மானாவரி பயிர்களான நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயிர், குதிரை வாலி, கம்பு, மக்காச் சோளம், பருத்தி போன்றவை பயிரிடுவதுண்டு. காலப்போக்கில் இந்த பயிர் நிலையெல்லாம் சுருங்கி குறைவான சாகுபடியே விவசாயிகள் தற்போது செய்கின்றனர். இதன் காரணம் உற்பத்தி பொருட்களுக்கு விலையில்லை. 


விவசாய இடுபொருட்களுக்கான விலையேற்றம். விவசாய வேலைகளுக்கு ஆட்களும் கிடைப்பதில்லை. சமீபத்தில் அந்த வட்டார கிராமங்களுக்கு போன பொழுது நிலக்கடலை விளைந்தும், அதன் உற்பத்தி செலவுக்கேற்ற லாபகரமான விலையில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். செம்மண்ணில் அதிகமாக பயிர் செய்யப்படும் நிலக்கடலை, நன்கு விளைந்து நிலக்கடலை பரப்பு பருமனாக இருந்தத்தையும் கண்ணில் காட்டினார்கள்.

சமீபத்தின் மழை பெய்தும் கதிரும் நெத்துக்களும்  பூமியில் விழுந்து மடிந்துவிட்டன. இதற்கான இழப்பீடுகளும் கிடைத்தபாடில்லை. உள்ளி (வெங்காயம்-இருள்ளி-இராங்காயம்), மிளகாய் என இரண்டு பயிர்கள் சாகுபடி விவசாயிகளில் ஒரு சிலருக்கு மட்டுமே பயிர் இழப்பிடு வழங்கப்பட்டுள்ளது. அவை முழுமையாக இந்த பயிர் காப்பீடு திட்டத்த்தில் இழப்பிடு முறையாக வழங்கப்படலில்லை. இதை வேதனையோடு விளாத்திக்குளம், கோவில்பட்டி வட்டார விவசாயிகள் சொன்னார்கள்.

#விவசாயிகள்
#பயிர்காப்பீடு
#கரிசல்காடு
#Agriculturalist
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.


14-12-2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...