Sunday, December 24, 2017

உதவாத சட்டம் இருந்தென்ன லாபம்?

கந்துவட்டியைத் தடை செய்ய சட்டமேதும் இல்லையா என்ற அப்பாவித்தனமான கேள்வி எழலாம். இருக்கிறது. கந்துவட்டியை ஏட்டளவில் தடை செய்யும் ‘தமிழ்நாடு கந்துவட்டித் தடுப்புச் சட்டம் – Tamil Nadu Prohibition of Exorbitant Interest Act (2003)’ என்ற சட்டமிருக்கிறது. +
2003லிருந்து 2014 வரையிலான பத்தாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1531 வழக்குகளில் 20 வழக்குகளில் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 368 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 257 வழக்குகள் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி ஆகிவிட்டன. 144 வழக்குகளை காவல் துறையே கைகழுவிவிட்டது. 297 வழக்குகளில் துப்புத்துலக்குவது முடிந்தபாடில்லை.
குற்றப்பத்திரிக்கைத் தாக்கலான நிலையில் 97 வழக்குகள் உள்ளன. எஞ்சியுள்ள 331 வழக்குகளின் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளன. அரசே தந்துள்ள இந்த புள்ளி விவரங்கள் அதிகார வர்க்கத்தின் துணையோடு கந்துவட்டி தர்பார் எவ்வித இடையூறுமின்றி ஓகோவென்று நடைபெறுவதைப் பறைசாற்றுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 16 ஆண்டுகளில் 149 கந்துவட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எசக்கிமுத்து குடும்பம் தீக்கிரையான பின் சற்று விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நுண்கடன் வணிகம் என்பது கண்டறிந்த பணப் பரிமாற்ற நடைமுறையில் பல தவறுகள் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இது வணிகமயமாகி ஈவிரக்கமின்றி சுரண்டுவது மட்டுமல்லாமல் மனித உரிமைகளை மீறக்கூடிய வகையில் இதன் போக்கு உள்ளது.
கந்துவட்டிச் சட்டத்தை தமிழக அரசு ஒப்புக்கு நடைமுறைப்படுத்தி இருந்தாலும் இந்த சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அந்தக் குறைபாடுகள் இல்லாமல் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும்.
#கந்துவட்டித்_தொழில் #orbitration_Interest_business #KSRadhakrishnanPostings #KSRPostings K S Radhakrishnan கே.எஸ். இராதாகிருஷ்ணன். 23-12-2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...