Thursday, December 21, 2017

விவசாயிகள் சங்கத் தலைவர் சி. நாராயணசாமி நினைவு தின நிகழ்ச்சி

இன்று (21/12/2017) கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் உள்ள விவசாயிகள் சங்கத் தலைவர் சி. நாராயணசாமி நாயுடுவின் 33 வது நினைவு தினத்தில் கலந்து கொண்டேன். அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தேன். திமுக துணைப் பொதுச் செயலாளர் அன்புக்குரிய சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடைய நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நாராயணசாமி நாயுடுவின் நினைவில்லம் கட்டுமானப் பணிக்காக அளித்த முதல் செங்கலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதே நாளில் 33ஆண்டுகளுக்கு முன்னால் கோவில்பட்டி பயணியர் விடுதியில் அவர் மறைந்தபொழுது உடனிருந்தவன். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் பிரச்சராம் செய்துவிட்டு, பயணியர் விடுதியில் தங்கியிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது. மறுநாள் நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு செல்லவதாக திட்டமிருந்தது.

இவருக்கும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையிலான அரிய செய்திகள் பலவற்றை தொகுத்து நூலாக விரைவில் வெளியிட இருக்கிறேன். மறைந்த சி.நாராயணசாமி நாயுடுவின் போர்குணம் தமிழக அரசியலையே ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்னால் புரட்டிப் போட்டதை இன்றைக்குள்ள இளைய சமுதாயத்திற்கு தெரிய வாய்ப்பிருக்காது. அவருடன் பயணித்த எங்களைப் போன்றவர்கள் அவரின் வரலாற்றை தொகுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய அவா.

#சிநாராயணசாமி_நாயுடு
#விவசாயிகள்_சங்கத்_தலைவர்
#Farmer_Leader
#c_narayanasamy_naidu
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
21-12-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...