அச்ச மில்லை அமுங்குத லில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுது மஞ்சோம்
வானமுண்டு மாரியுண்டு ஞாயிறுங் காற்றும்
நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும்
மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திட பெண்டும்
கேட்கப் பாட்டும் காண நல் லுலகமும்
என்றும்இங்குளவாம் சலித்திடாய் ஏழை!
நெஞ்சே வாழி ! நேர்மையுடன் வாழி வஞ்சக
கவலைக்கு இடங்கொடேல் மன்னோ
-
.
.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
11-12-2017
No comments:
Post a Comment