Wednesday, December 13, 2017

மறைந்த தலைவர்கள்

தமிழகத்தில், மறைந்த தலைவர்களான வ.உ.சிதம்பரனார், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, சேலம் வரதராஜராஜுலு நாயுடு, ஜே.சி.குமரப்பா, பெரியார், அண்ணா, கக்கன்,ஜீவானந்தம், காயிதே மில்லத் மற்றும் வடபுலத்தில் கிருபளானி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரி லால் நந்தா (பிரதமர் பதவியிலிருந்து விலகியவுடன் குழல் விளக்கு இல்லாமல் பல்பு வெளிச்சத்தில் பல அடுக்கு வீட்டில் தனியாக ஒரு படுக்கையறையில் தனது உணவை தானே சமைத்துக் கொண்டு வாழ்ந்தவர். பக்கத்திலிருப்பவருக்கு கூட அவர் ஒரு முன்னாள் பிரதமர் என்று தெரியாது), லோகியோ,மோகன் தாரியா, அச்சுதப்பட்டவர்த்தன், கேரளத்தை சார்ந்த இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் போன்ற சில தலைவர்களுடைய அரசியல் அணுகுமுறையும், அவர்கள் சந்தித்த ரணங்களையும் பாடுகளே அரசியலில் பாலபாடமாகும். ஆரோக்கியமான அரசியலுக்கு இவர்களைப் படியுங்கள்.
ஆரேக்கியமான அரசியல் என்ன? என
இவர்களின் வரலாறு சொல்லும்.
#அரசியல்
#மறைந்த_தலைவர்கள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
13-12-2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...