விவசாயிகள் சங்க தலைவர்மறைந்த திரு. *சி.நாராயணசாமி நாயுடு*வின் மணி மண்டபம் அமைக்கும் பணி அவரின் நினைவு நாளான 21-12-2017 அன்று கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் ஆரம்ப பணிகள் துவங்க உள்ளது.
அதற்கான அடையாளமாக முதல் செங்கல்லை திமுக செயல் தலைவர் தளபதி அவர்கள் நாராயணசாமி நாயுடு அவர்களின் பேரன் பிரபு வெங்கடேஷிடம் இன்று வழங்கினார்.
அப்பொழுது திரு சபரிசீசன் உடன் இருந்தார்.
தமிழகத்தின் முக்கிய தலைவர்களை எல்லாம் சந்தித்து நினைவு மண்டபம் அமைக்கும் பணி குறித்து பேசினோம். வைகோ அவர்களையும் சந்தித்தோம். தனது ஒத்துழைப்பை வழங்குவதாக கூறினார்.
திரு.நாராயணசாமி நாயுடு 1984 பொது தேர்தலின்போது கோவில்பட்டி பயணியர் விடுதியில்,21-12-1984 அன்று மரணமடைந்தார். அப்போது உடனிருந்தவர்களில் நானும் ஒருவன்.
அவரது நினைவாக இந்த பணிகள் சிறப்பாக நடைபெற தளபதி அவர்கள், வைகோஅவர்கள் மற்றும் தமிழக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
#நாராயணசாமி_நாயுடு
#KSRadhakrishnanPostings
#KSRPostings
*K S Radhakrishnan*
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*.16-12-2017
No comments:
Post a Comment