இடைத்தேர்தல் என்பது நையாண்டி அரசியலா? கேளிக்கையா.....??
தேர்தல்களம் கண்ணியம்
நேற்று போல்
இன்று இல்லை.....
இன்று போல்.
நாளை இல்லை......
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 145 வேட்புமணுக்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறாக மொடக்குறிச்சி 1996 தேர்தலில் 1030 சுயேட்சைகள் உட்பட 1033 பேர் போட்டியிட்டனர். விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக 120 பக்கங்களை கொண்ட வாக்கு சீட்டு புத்தகம் தயாரிக்கப்பட்டது. 1033 பேரில் 4 வேட்பாளர்கள் மட்டுமே 20,000 ஓட்டுகளுக்கு மேல் பெற்றனர். 4 சுயேச்சைகளுக்கு மட்டுமே 100 ஓட்டுக்கு மேல் கிடைத்தது. 1030 சுயேச்சை வேட்பாளர்களும் சேர்த்து வாங்கிய மொத்த ஓட்டு 7,480 தான். ஓரு ஓட்டு கூட வாங்காதவர்கள் 88 பேர். ஒரு ஓட்டு மட்டும் வாங்கியவர்கள் 97 பேர். 2 ஓட்டு வாங்கியவர்கள் 157 பேர். 3 ஓட்டு வாங்கியவர்கள் 108 பேர். 4 ஓட்டு வாங்கியவர்கள் 84 பேர், 5 ஓட்டு வாங்கியவர்கள் 60 பேர். மீதி அனைவரும் 10 ஓட்டுக்கு மேல் வாங்கியவர்கள். மேலும், இத்தொகுதியில் அப்போது 28 பெண்களும் போட்டியிட்டனர். இதில் 16 பேருக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்க
வில்லை. தி.மு.க சார்பில் சகோதரி சுப்புலட்சுமி ஜெகதீசன், இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.
தேர்தல் என்பது பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பனித்துக் கொண்டவர்கள், சமூக சிந்தனையாளர்கள், போராட்ட களத்தில் நின்றவர்கள், சிறை சென்ற தியாகிகள் ஆகியோர்கள் மட்டும் போடியிடுவதாக இருந்த களம். இன்று எந்த தகுதியும் இல்லாமல் போய்விட்டது. இந்த போக்கு ஏற்புடையது அல்ல. இப்போக்கு கட்டுப்பாடற்று தொடருமாயின் அரசியல்வியபாரமாகும்.ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் கேலிக் கூத்தாகும்.
மூளை சலவை செய்யப்பட்டும் அல்லது கவர்ச்சி அரசியலாகட்டும், இன்னபிற காரணங்களாகட்டும் மக்கள் அங்கிகரித்து விட்டார்கள் என்பதனால் அவர்களை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இதனால் 10(a)1களும் மக்கள் பிரதிநிதிகளாகி விடுவார்கள். இதுகுறித்து மேலை நாடுகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆகாலாம் ஆனால் பொதுநலம் இல்லாத , தகுதியற்றவர்கள் திடீர் தலைவர்களாக உருவெடுப்பார்கள். ஜனநாயக விரோத செயல்கள் இன்னும் அதிகமாக தலையெடுக்கும். எனவே தேர்தலில் போட்டியிடுவதற்க்கு கட்டுப்பாடுகள்
அவசியம் .
ஆட்டு மந்தை போன்று மக்கள் தகுதியற்றயவர்களை தூக்கி பிடித்தலே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை குறித்து விவாதங்கள் நடக்கின்றன.
#அரசியல்
#ஆ_கே_நகர்_இடைத்தேர்தல்
#இடைத்தேர்தல்கேலிக்கூத்துக்கள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-12-2017
No comments:
Post a Comment