எடப்பாடி பழனிச்சாமி என்கிற 10(a)1 முதலமைச்சர் விசுவாசத்தை பற்றி பேசியுள்ளார். சார்ந்துள்ள அரசியல் கட்சியின் கொள்கை, தலைமையின் அறிவுறுத்தல் என்ற செயல்பாட்டில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தாலே போதும்.
விசுவாசம் என்ற வார்த்தை கூனிக்குறுகி கையை கட்டி சுயமரியாதை இல்லாத அடிமைத்தனமனது.அரசியல் செயல்பாட்டாளருக்கு விசுவாசம், தாழ் பணிகின்றேன் என்ற வார்த்தைகள் பண்பட்ட அரசியல் அகராதிக்கு உகந்ததல்ல. அரசியல் பண்பாட்டு ்கு முரணானது. நல்ல அரசியலை போலியாக விசுவாசம் அரசியல் என்று சொல்லி பாழ்படுத்தி விடாதீர்கள் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களே.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
12-12-2017
No comments:
Post a Comment