விலைபோகும் தேர்தல்.
விலைபோகும் ஜனநாயகம்
Elections
for Sale
----------------
இன்றைக்கு பட்டப்பகலில்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விலைக்கு போய் ஏலமிடுவது போல ஒரு வாக்குக்கு 6,000,
8,000 10,000 வரை வாக்களருக்கு கொடுக்கப்படுகின்றது. இந்தப் பணம் எங்கிருந்து எப்படி
வருகிறது? இதனுடைய நதி மூலம், ரிஷி மூலம் என்ன என்பதை குறித்தெல்லாம் யாரும் அக்கறைப்படுவது
இல்லை. இவ்வளவு பணத்தை எங்கிருந்து வந்தது என்பது கூட மர்மமாக இருக்கின்றது. பன்னாட்டளவில்
ஓட்டுக்கு காசு என்ற நிலை எப்படி உள்ளது என்று நீண்ட நாட்களுக்கு முன் டெல்லியில் வாங்கிய “Elections for Sale” என்ற நூலைப் படிக்கும் போது பதற வைக்கும்
ஆய்வுச் செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்குகின்ற நிலை இந்தியாவில் ஒரு தவறான பரிணாம வளர்ச்சியாக 1960களிலேயே தொடங்கியது. அன்றைக்கு அரை ரூபாய் (எ) ஐம்பது பைசாவிற்கு தொடங்கி இன்றைக்கு ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் முதல் குக்கர், துணிகள் வழங்குவது வரை வளர்ந்துவிட்டது.
There are not in the enormous majority of country towns any working men
who have much opinion about politics or sufficient self-respect to abstain
from selling their vote.
-
Walter Bagehot, The English
Constitution, 1867
For to buy an overcoat
Or to buy a sack of flour,
Thinking it a prosperous hour.
-
Literary Digest, 1911
ஏதோவொரு ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளி மக்களிடம் வாக்குகளை வழங்குவது பன்னாட்டளவில் பெருகி வருகிறது. சில இடங்களில் வாக்காளரின் அறியாமை, காசுக்கு மயங்குவது, வேறு சில பொய்யான உறுதிமொழிகளுக்கு ஆட்படுவதென்ற நிலையில் ஏமாற்றி தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களின் வாக்குகளை நெறிமுறைகளுக்கு மாறாக வாங்குகின்றனர்.
Comparing Distributional
Strategies of Electoral Mobilization
Distributional Strategy of
Electoral Mobilization
|
Scope (How widely are material
benefits distributed?)
|
Timing (When are material
benefits distributed?)
|
Legality (Is the distribution
of material benefits legal?)
|
Allocational
Policies
|
Whole
classes of voters (elderly, unemployed, etc.,)
|
Hard to time exactly; can occur at any time during
the electoral cycle
|
Legal
|
Pork-barrel spending
|
Local districts
|
Hard to time exactly; can occur at any time during
the electoral cycle
|
Legal
|
Patronage
|
Neighborhoods, villages, families, individuals
|
Ongoing throughout the electoral cycle
|
Gray legal status
|
Vote buying
|
Families, individuals
|
Days or hours before election day, or on election
day itself
|
Illegal
|
Comparing
Strategies of Electoral Manipulation
Strategy of Electoral Manipulation
|
Goal of Electoral Manipulation
|
Democratic Norm That is Violated
|
Denying Legal status to opposition forces
Disqualifying candidates or parties from
participating in elections
|
Restricting access of opposition forces to the
electoral arena
|
Freedom of choice (Citizens must be free to form,
join and support competing parties and candidates)
|
Limiting broadcast airtime allotted to opposition
parties
Restricting what opposition candidates can say
Shutting down, opposition parties to hold rallies
|
Restricting the freedom of speech of opposition
candidates and parties
|
Freedom to formulate preferences (Citizens must be
free to learn about available choices from alternative sources of
information)
|
Putting in place discriminatory registration or
voting devices (such as literacy tests, restrictive identification
requirements, limited poll hours, cumbersome registration procedures)
Tampering with voter registry
|
Disfranchising full members of the political
community or enfranchising those who are ineligible to participate
|
Equal opportunity to express preferences (democracy
assigns equal rights of participation to all full members of the political
community)
|
Vote buying
Voter Intimidation
|
Unduly influencing the electoral choices made by
voters
|
Freedom to express preferences (citizens must be
free to express their electoral preferences)
|
Ballot box stuffing
Padding or shaving vote tallies
|
Manipulating the vote count
|
Equal weighing of preferences (the democratic ideal
of equality – one person, one vote – demands counting votes accurately
|
Cash for Vote,
Election for Sale என்பது மக்களின் உரிமைகளான வாக்குகளை
விலைக்கு வாங்குவது நாம் வாழும் நாட்டையே பாழ்படுத்துவதாகும். ஆசியாவில் இந்தியா, தைவான்,
மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்; மத்தியக் கிழக்கு நாடுகளான ஏமன், குவைத்,
லெபனான்; ஆப்பிரிக்காவில் நைஜர், கென்யா, ஜாம்பியா, செனகல், மொராக்கோ, ஜிம்பாவே,
நைஜீரியா; லத்தீன் அமெரிக்க நாடுகளான பெரு, பனாமா, கவுதமாலா, வெனிசூலா, அர்ஜென்டினா; வடஅமெரிக்க நாடான மெக்ஸிகோ; ஏன் ஜனநாயகத்தின்
தொட்டிலாக கிரேக்கத்திலும் வாக்குக்கு பணமோ, வேறு சலுகைகளோ வழங்குகின்ற நிலை என்ற தகவல்கள்.
இப்படியான முரணான நிலைகள் பன்னாட்டளவில் வளர்ந்தால் என்னாகுமோ மக்களின் ஆட்சி?
#Cash_for_vote
#Elections_for_sale
#Democracy_for_sale
#ஓட்டுக்குப்_பணம்
#விலைபோகும்_தேர்தல்
#விலைபோகும்_ஜனநாயகம்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
*K S Radhakrishnan*
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*.
19-12-2017
No comments:
Post a Comment