Wednesday, December 20, 2017

கரிசல் காட்டு விவசாயிகளின் நிலை.


நெல்லை மாவட்டத்தின் வடபகுதியான சங்கரன் கோவில், தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, விளாத்திக்குளம், விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையால் விளைய வேண்டிய சோளம் விளையாமல்; அதை மாட்டுத் தீவணத்திற்காக அறுத்து சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலையில் அந்த வட்டார விவசாயிகள் இருக்கின்றனர். (படம் - 1)


ஏற்கனவே நான் பதிவிட்டவாறு உற்பத்தி செய்த நிலக்கடலைக்கும் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. உளுந்துப் பயிரும் நன்கு விளைச்சலில் உள்ளது. இந்த வருடம் அதற்கு லாபகரமான விலை இருக்குமா என்பது தெரியவில்லை. 
(படம் – 2)


இந்த கரிசல்காட்டில் மட்டும் விளையும் அதலைக் காய். சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கும் காயாகும். மஞ்சள் காமாலை நோய்களையும் குணப்படுத்தும். நோய்களுக்கு நல்ல நிவாரணி. 
வேறெந்த நாட்டிலும் காணப்படாத பயிராகும். 


தமிழகத்தில் கூட கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர், சங்கரன் கோவில் பகுதிகளில் மட்டுமே இந்த பயிர் விளைகின்றது. 
இந்த அதலைக்காயை பொரியல் செய்தால் மிகச் சுவையாக இருக்கும். இதை பறித்த சில மணித்துளிகளுள் சமைத்துவிட வேண்டும். இல்லையெனில் அது வெடித்துவிடும். பாகற்காய் போன்று இதுவும் மருத்துவ குணம் கொண்டது. இந்த காய்களெல்லாம் பணம் கொடுத்தாலும் கிடைக்காத காயாகும். 
(படம் – 3)

#உளுந்து
#சோளம்
#அதலைக்காய்
#கரிசல்_காடு
#விவசாயம்
#Urid
#cholam
#adhalai_kai
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
*K S Radhakrishnan*
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*.

19-12-2017

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...