Sunday, April 1, 2018

இன்று ஏப்ரல் 1. முட்டாள்கள் தினம் என்கிறார்கள்.

தமிழக மக்களே காவிரி பிரச்சனைக்கு தீர்வில்லை, முல்லைப் பெரியாறுக்கு தீர்வில்லை, குமரி மாவட்ட நெய்யாறில் தொடங்கி 66 நீராதாரங்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக தீர்வில்லை, சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் பிரச்சனைக்கு தீர்வில்லை, ஊட்டி போட்டோ பிலிம் தொழிற்சாலை நைனிட்டாலுக்கு மாறுகிறது, நெய்வேலி என்எல்சி பிரச்சனை, மேலும் பல தடுப்பணைகளை கட்டி நீராதாரங்களை தடுக்கும் அண்டை மாநிலங்களின் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, இலங்கைப் படைகளால் மீனவர்கள் துன்புறுத்தப்படுதல், கூடங்குளம் பிரச்சனை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, திருவண்ணாமலை அருகேயுள்ள கவுத்திமலையின் இரும்பு தாது எடுக்கும் பிரச்சனை, மணவாளக்குறிச்சி அரிய மணல் தொழிற்சாலை பிரச்சனை, கன்னியாகுமரி ரப்பர் தோட்ட பிரச்சனை, தேனி மாவட்ட கண்ணகி கோவில் பிரச்சனை, விமான நிலையங்களின் விரிவாக்கம் குறித்தான பிரச்சினை, நீட் தேர்வு, சாகர் மாலா திட்டம், விழுப்புரம் மரக்காணத்திலிருந்து ஆந்திரா மாநிலம் பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம், சேலம் மற்றும் நாமக்கல் சுற்று வட்டாரங்களில் பிளாட்டினம் எடுப்பதற்கு வேண்டி உருக்கும் போது வெளிவரும் நச்சுக் காற்று, ஸ்டெர்லைட் ,கல் ரயில் பாதை திட்டங்கள், துறைமுக திட்டங்கள் என தமிழகத்தின் முக்கிய பல வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களை தங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பியதற்காக இந்நாளை நினைவுகூற வேண்டியது தான்.

வேறு என்ன செய்ய?
தகுதியான, புரிதலுள்ள ஆளுமைகளை மக்களும் அனுப்பவில்லை. அரசியல் கட்சிகளுக்கும் அனுப்ப மனமில்லை. தகுதியே தடை. இதற்காகவே, நாம் ஏப்ரல் 1ஐ இப்படியான பயனற்ற மாந்தர்களை நினைவில் கொள்ளும் நாளாகும். பிறகெப்படி தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும். தமிழகத்தில் இருந்து கடந்த இருபது ஆண்டுகளாக சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பணிகளையும் அதன் தன்மை மற்றும் தரத்தையும் எடை போட்டாலே தெரியும்.
தமிழகத்தை வாட்டும் இந்த பிரச்சனைகளை தீர்க்க நாம் குரல் கொடுக்காமல், வாய்மூடி மௌனியாக இருந்தால் நாளைய வரலாறு நம்மை மன்னிக்காது. இவ்வளவு பிரச்சனைகளை குறித்த நுணுக்கமாக அறிந்தவர்கள், புரிதல் கொண்ட ஆளுமைகள் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் தகுதியே தடை.
புரிதலற்ற மாந்தர்கள் தினம் .
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-04-2018

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...