Wednesday, April 18, 2018

அட்டைக்கத்தி அயோக்கியர்கள்.

L.R.Jegedheesan காவிரி நதிநீர் தாவாவோடு எந்த தொடர்பும் இல்லாத IPL கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடந்தால் அதன் மூலம் தமிழரின் கவனம் சிதறும் என்று கண்டுபிடித்து அதை எதிர்த்து போராட்டம் என்கிற பெயரில் IPL பார்க்கப்போன இளைஞர்களை அடித்து உதைத்து இளைஞிகளை ஆபாசமாக திட்ட காரணமாக இருந்த இந்த குபீர் போராளிகள், அடுத்து தமிழனுக்கு காவிரி தண்ணீர் கிடைக்கும் வரை தமிழ்சினிமா படப்பிடிப்புகள் நடத்தபடக்கூடாது என்றும் எந்த சினிமா தியேட்டரும் பழைய படங்களைக்கூட திரையிடப்படக்கூடாது என்றும் போராட்டம் நடத்த வேண்டும். செய்வார்களா இந்த கோமாளிகள்? ஒரு துறையில் ஒன்று இரண்டுபேர் கோமாளியாக இருந்தால் பரவாயில்லை. ஒரு ஒட்டுமொத்த துறையுமே கோமாளிகளாக இருப்பது தமிழ்திரைப்படத்துறை. ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் நீதிமன்றம் முறைப்படி விசாரணை நடத்தி தண்டித்தால் அதை எதிர்த்து போராட்டம் செய்ததும் இதே கும்பல்தான். IPLஐவிட அதிகபட்ச கேளிக்கையான சினிமா படப்பிடிப்பையோ திரையிடலையோ ஒத்திவைக்க மறுப்பதும் இதே கும்பல்தான். என்னே ஒரு நேர்மை? என்னே ஒரு தெளிவு? என்னே ஒரு போராட்ட வழிமுறை? அட்டைக்கத்தி அயோக்கியர்கள்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
18-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...