Friday, April 13, 2018

சரவணன் சுரேஷ் தீக்குளிப்பு

அண்ணச்சி வைகோ அவர்களின் மைத்துனர் குறுமலை - வெங்கடாசலபுரம் எ.ராமானுஜம் அவர்களுடைய புதல்வர் சரவணன் சுரேஷ் விருதுநகர் அருகே சூலக்கரையில் இன்று காலை நடைபயிற்சிக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றவர் காவிரிப் பிரச்சனைக்காக நடுவர் மன்றம் அமைக்கவில்லை என்ற காரணத்திற்காக தீக்குளித்து சர்வபரி தியாகத்தை செய்துள்ளார் என்ற செய்தி மிகவும் வேதனையை ஆட்படுத்தியது. மதுரை அப்பேலோ மருத்துவ மனையியல் சிகிச்சை பெறும் அவர் நலம் 
பெற வேண்டும்.

சமூக, பொதுத்தள களப்பணிகளில் பிடிப்பான இளைஞர். இப்படியான விபரீதமான முடிவினை மேற்கொண்டிருக்க கூடாது. வைகோ அவர்களின் துணைவியார் அவருடைய சகோதரர் ராமானுஜம் அவர்கள் எல்லோரிடமும் கனிவாக பேசி பழககூடியவர்.
சரவணன் சுரேஷின் இந்த செய்தி அனைவரையும் ரணப்படுத்துகின்றது.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
13/04/2018

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...