Sunday, April 1, 2018

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ராவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. செலமேஸ்வர் எழுதிய ஆங்கிலக் கடிதம் வருமாறு.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ராவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. செலமேஸ்வர் எழுதிய ஆங்கிலக் கடிதம் வருமாறு.
C O N F I D E N T I A L
March 21, 2018
To
Hon’ble Mr. Justice Dipak Misra
Chief Justice of India

Lord Bingham in his book ‘The Rule of Law’ said that “there are countries in the world where all judicial decisions find favour with the powers that be, but they are probably not places where any of us would wish to live”. Let us also not live where Bingham loathed to live.
We, the judges of the Supreme Court of India, are being accused of ceding our independence and our institutional integrity to the Executive’s incremental encroachment. The Executive is always impatient, and brooks no disobedience even of the judiciary if it can. Attempts were always made to treat the Chief Justices as the Departmental Heads in the Secretariat. So much for our “independence and preeminence” as a distinct State organ.
Someone from Bangalore has already beaten us in the race to the bottom. The Chief Justice of the Karnataka High Court has been more than willing to do the Executive bidding, behind our back. I read with dismay and disbelief the “confidential report” sent to the Hon’ble Chief Justice by Shri Dinesh Maheswari, the Chief Justice of Karnataka High Court. To begin with, it was unasked for. Second, it is uncalled for. The confidential report blatantly records the impropriety of the executive directly contacting the High Court to reassess a collegium recommendation of the Supreme Court.
It is a moot proposition that any Principal & Sessions Judge is the administrative head of the district he works in. He has to exercise his supervisory, and “disciplinary” power over all other judicial officers in that district.

-: 2 :-
From the letter of the Hon’ble Chief Justice, Karnataka, the following facts can be culled out. In 2014, when Shri Krishna Bhat, a District & Sessions Judge, was working in Belagavi district, he sent to the High Court a report concerning the (mis)conduct of Ms. M.S. Shashikala, a Judicial Magistrate of First-Class. The High Court registered a vigilance case (HVC) No.93/2014 but did not choose to act upon the same till 18.02.2016. Till that time, Krishna Bhatt had faced no allegations from any quarter, including his subordinates.
With Shri Krishna Bhatt’s elevation around the corner, Ms. M.S.Shashikala chose to complain against him.
If such retaliatory complaints are entertained, no career conscious judge would ever risk disciplining his subordinates.
From the material available on record, it appears that Ms. M.S. Shashikala offered her resignation in April 2016 and withdrew it in June 2016. The then hief Justice of Karnataka High Court was asked to provide the details and  background of Ms. Shashikala’s resignation. The then Chief Justice, after inquiring into the issue, sent two confidential reports dated 14.10.2016 and 14.11.2016. He asserted that the allegations levelled against Shri P Krishna Bhatt were incorrect and concocted. He has found that Ms. M.S. Shashikala has made her allegations only to malign Shri P Krishna Bhatt.
In the meanwhile, acting on the recommendations of the Karnataka High Court collegium, we recommended his name, along with five others from the service category, for elevation. At that time we were aware of the allegations but we consciously and rightly disbelieved them. Surprisingly, the Government selectively withheld his elevation and accepted that of the remaining five others’, though all the five are juniors to Shri Krishna Bhatt.

-: 3 :-
Now comes what is unpredictable and unthinkable. If the government had any reservations or misgivings about Shri Krishna Bhatt’s nomination, it could have sent back the recommendation for our reconsideration — a well-established though long forgotten practice. Instead, it sat tight on the file. In other words, our recommendation still retained its validity and legitimacy. 
For sometime, our unhappy experience has been that the Government’s accepting our recommendations is an exception and sitting on them is the norm. “Inconvenient” but able judges or judges to be are being bypassed through this route.
I do not think any of us disputes that elevating a person to be a judge of a High Court is a constitutional concern involving two authorities: the Supreme Court and the executive. The role of High Court ceases with its recommendation. Any correspondence, clarificatory or otherwise, has to be between these two authorities. To my mind, I could recollect no instance from the past of the executive bypassing the Supreme Court, more particularly while its recommendations are pending, and asking the High Court, as if it were an interdepartmental matter, to look into the allegations already falsified and conclusively rejected by us. Asking the High Court to reevaluate our recommendation in this matter has to be deemed improper and contumacious.
Now the Chief Justice of Karnataka High Court informs us that he had received a communication from the Ministry of law and justice “to look into the issue.” The Chief Justice, establishing himself to be more loyal than the King, acts on it, convenes a meeting of the Administrative Committee, and decides to reinvestigate the issue, thus burying the previous Chief Justice’s findings on the same issue, given at our asking. He has been gracious enough to inform us, at least now.

-: 4 :-
A long time ago, an idealist, without knowing the ways of the world, has said this: the accumulation of all powers legislative, executive and judiciary in the same hands, whether of one, a few or many, and whether hereditary, self appointed, or elective, may justly be pronounced the very definition of tyranny. Naïve as it may sound now, that was James Madison in the Federalist Papers No.47.1
 We only have to look forward to the time, which may not be far-off if not already here, when the executive directly communicates with the High Courts about the pending cases and what orders to be passed. We can be happy that much of our burden is taken away. And an Honourable Chief Justice like Dinesh Maheswari may perhaps be ever willing to do the executive bidding, because good relations with the other Branches is a proclaimed constitutional objective.
We cannot deny Robert H. Jackson’s assertion in United States v. Wunderlich2 that men are more often bribed by their loyalties and ambitions than by money. Let us also not forget that the bonhomie between the Judiciary and the Government in any State sounds the death knell to Democracy. We both are mutual watchdogs, so to say, not mutual admirers, much less constitutional cohorts.
I am of the opinion that this matter is now ripe for the consideration of the Full Court on the judicial side, if this institution really is to be any more relevant in the scheme of the Constitution.

-: 5 :-
Since we are a precedent oriented institution, I may be pardoned for quoting a precedent to the Master of Roster that it was exactly a similar letter written by the then Union Law Minister which sparked up a judicial debate in S.P. Gupta3.
With regards,
Yours sincerely,

(J. Chelameswar)

Copy to:
1. Hon’ble Mr. Justice Ranjan Gogoi
2. Hon’ble Mr. Justice Madan B. Lokur
3. Hon’ble Mr. Justice Kurian Joseph
4. Hon’ble Mr. Justice A.K. Sikri
5. Hon’ble Mr. Justice S.A. Bobde
6. Hon’ble Mr. Justice R.K. Agrawal
7. Hon’ble Mr. Justice N.V. Ramana
8. Hon’ble Mr. Justice Arun Mishra
9. Hon’ble Mr. Justice Adarsh Kumar Goel
10. Hon’ble Mr. Justice Rohinton Fali Nariman
11. Hon’ble Mr. Justice Abhay Manohar Sapre
12. Hon’ble Mrs. Justice R. Banumathi
13. Hon’ble Mr. Justice Uday Umesh Lalit
14. Hon’ble Mr. Justice A.M. Khanwilkar
15. Hon’ble Dr. Justice D.Y. Chandrachud
16. Hon’ble Mr. Justice Ashok Bhushan
17. Hon’ble Mr. Justice L. Nageswara Rao
18. Hon’ble Mr. Justice Sanjay Kishan Kaul
19. Hon’ble Mr. Justice Mohan M. Shantanagoudar
20. Hon’ble Mr. Justice S. Abdul Nazeer
21. Hon’ble Mr. Justice Navin Sinha
22. Hon’ble Mr. Justice Deepak Gupta



நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மூத்த நீதிபதியான ஜெ.செலமேஸ்வர் கடிதம் எழுதி அந்தக் கடிதத்தின் நகல்கள் உச்ச நீதிமன்றத்தில் உள்ள மற்ற 22 நீதிபதிகளுக்கும் ள்ளார்.

அதில் செலமேஸ்வர் கூறியிருப்பதாவது:

'கர்நாடகத்தில் மாவட்ட அமர்வு நீதிபதியாக இருக்கும் கிருஷ்ணா பட் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று கொலீஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு) இரண்டு முறை பரிந்துரைத்தது. எனினும், அவருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் தூண்டுதலின்பேரில் இவ்வாறு நடைபெற்றுள்ளது.

கிருஷ்ணா பட் விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த கால சம்பவங்களை நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசு நிர்வாகம் தற்போது மீறியுள்ளதைப் போல் அப்பட்டமாக மீறிச் செயல்பட்ட ஒரு சம்பவமும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. அதாவது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என்று கூறி நாங்கள் (கொலீஜியம்) அவற்றை நிராகரித்ததோடு, அவருக்கு பதவி உயர்வு அளிக்க நாங்கள் பரிந்துரை அளித்தோம். அது நிலுவையில் உள்ள சூழலில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத்தை அரசு நிர்வாகம் அணுகுவது முறையற்றது. இது வேண்டுமென்றே நீதித்துறையிடம் பணிவு காட்ட மறுக்கும் செயலாகும்.

மேலும், அரசு நிர்வாகமானது உயர் நீதிமன்றங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றில் என்னென்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன என்றும் கேட்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது.

அதேபோல் நீதித்துறைக்கும் எந்த மாநில அரசுக்கும் இடையே நட்புறவு நிலவினால் அது ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிப்பதாகவே அர்த்தம். நீதித்துறை, அரசு என இரண்டுமே கண்காணிப்பு அமைப்புகள்தானே தவிர, பரஸ்பரம் ஒன்றையொன்று விரும்பும் அமைப்புகள் அல்ல.

கடந்த 1981இல் அப்போதைய மத்திய சட்டத்துறை அமைச்சர், உயர் நீதிமன்றங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார். அதை உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டது. அதன் விளைவாகவே நீதிபதிகள் தொடர்பான முதல் வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதன் பின் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரத்தை கொலீஜியம் ஏற்றுக் கொண்டது.

நீதிபதிகளாகிய நாம் நமது சுதந்திரத்தையும், அமைப்பு சார்ந்த நேர்மையையும் அரசு நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது கடமையைச் செய்வதை விட அரசு நிர்வாகம் கூறுவதைச் செய்யவே ஆர்வமாக இருக்கிறார். அரசு நிர்வாகம் என்பது எப்போதுமே பொறுமை இல்லாததாக உள்ளது. அது நீதித்துறைக்கும் கீழ்ப்படியாததாக உள்ளது.

நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை தலைமைச் செயலகத்தில் உள்ள பல்வேறு துறைத் தலைவர்களைப் போல் மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. சில காலமாகவே நீதிபதிகளை நியமிப்பதற்கு கொலீஜியம் பெயர்களைப் பரிந்துரைத்த பிறகும் அரசு அவற்றை ஏற்றுக் கொள்வது என்பது விதிவிலக்காக மாறியுள்ளது. அது தொடர்பாக அரசுத் தரப்பு முடிவெடுக்காமல் கோப்புகளை நிலுவையில் வைப்பதே விதியாக உள்ளது. இந்த அதிருப்தி தரும் அனுபவத்தை நாம் கண்டு வருகிறோம். இதன் காரணமாக திறமைவாய்ந்த நீதிபதிகளும், நீதிபதி பதவியைப் பெற வேண்டியவர்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டியதை இழக்கின்றனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் கடிதப் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. பரிந்துரை அளிப்பதோடு உயர் நீதிமன்றத்தின் பணி முடிவடைய வேண்டும். அரசு நிர்வாகத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையில்தான் எந்த விதமான கடிதப் போக்குவரத்தும் நடைபெற வேண்டும்.

இந்தச் சூழலில் நீதித்துறையில் அரசுத் தரப்பு தலையிடும் விவகாரம் தொடர்பாக பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அரசியல்சாசனப்படி உச்ச நீதிமன்றம் இயங்குவதை உறுதிசெய்ய இது அவசியமாகும்' என்று அந்தக் கடிதத்தில் நீதிபதி செலமேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடக மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணா பட்டுக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். அவற்றை கடந்த 2016-இல் விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், அதுகுறித்து விசாரணை நடத்துமாறு அப்போதைய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜிக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் கிருஷ்ணா பட் குற்றமற்றவர் என்று அறிக்கை தரப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதவி உயர்வு அளிக்குமாறு கொலீஜியம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகளுக்கே நியாயம் கிடைக்கவில்லை என்றால் மக்கள் என்ன செய்வார்கள்?

கங்கையே சூதகமானால் எங்கே போய் முங்க…

#செலமேஸ்வரர்_கடிதம்
#Chelameswar_letter
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-03-2018.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...