இன்றைய
(29-04-2018) தமிழ்
இந்துவில் தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனை பற்றி செய்திக் கட்டுரை
வந்துள்ளது. இவர் குமரி மாவட்டத்தை சார்ந்தவர். இவரைப் பற்றிய விரிவான பதிவை கடந்த
ஆண்டு என்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தேன். இவர் எங்களது கிராமத்திற்கு
வந்துள்ளார். திருநெல்வேலியை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாத்தி
குஞ்சிதபாதம் போன்றவர்கள்
எல்லாம் பொறுப்பில் இருந்தார்கள். இந்த இருவரும் எங்களுடைய இல்லத்திற்கு
1960களில்
அடிக்கடி வருவதுண்டு. எங்கள் தாயாருடைய சமையலை விரும்பி சாப்பிட்டதும்
உண்டு. இவர்கள் தங்களது இறுதிக் காலத்தில் மிகவும்
ஏழ்மையான நிலையில் வாழ்ந்ததும் உண்டு. இன்றைக்கு முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் வசதியான வாழ்க்கை.
அதே போன்று சென்னையைச் சேர்ந்த பெண்
அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் ஆவார். தமிழகத்தில் 1967க்கு முன் காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜாத்தி
குஞ்சிதபாதம் மற்றும் அமைச்சர்களாக லூர்தம்மாள் சைமன், ஜோதி வெங்கடாசலம் இருந்தவர்கள்.
ஆனால் இன்றைய தலைமுறைக்கு இவர்களைப் பற்றிய அறிமுகமும் இல்லை.
ஜெயலலிதா, சசிகலா போன்றவர்களை கொண்டாடும் தமிழகம்
இந்த பெண் அமைச்சர்களை கொண்டாட வேண்டாம். ஆனால் இவர்களைப் பற்றி அறியாமல் இருப்பது
வேதனை தருகிறது. இது தான் இன்றைய அரசியல். இவர்கள் எளிமையான வாழ்க்கையும்
வாழ்ந்தவர்கள். ராஜாத்தி குஞ்சிதபாதமின் புதல்வி இன்றைக்கும் மயிலாப்பூரில்
நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஜோதி வெங்கடாசலம் சென்னையில்
ஊறுகாய் கம்பெனி நடத்தினார். இவரது வீடு இன்றைக்கும் வேப்பேரியில் கால்நடை
மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்கு பின்னால் இருக்கிறது. இந்த மூவரும்
மறைந்துவிட்டார்கள். இந்த நேர்மையான பெண்மணிகளை தமிழகம் அறியத் தவறிவிட்டது.
#ராஜாத்தி_குஞ்சிதபாதம்
#ராஜாத்தி_குஞ்சிதபாதம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-04-2018
No comments:
Post a Comment