Wednesday, April 11, 2018

*திருநெல்வேலி – வாழையின் நாடு*


தமிழ்நாட்டின் வாழை விவசாயத்தில் இடைத்தரகர்களின் பங்களிப்பை குறைக்கும் ஒரு புதிய வடிவமாக கூட்டுப்பண்ணை முயற்சி ஏற்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சரிவுகளில் திருநெல்வேலியின் சமவெளிகளில் கீழ் இறங்குகையில் நம்மைச் சுற்றிலும் நெல் மற்றும் வாழைத் தோப்புகளாக கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியும். அதுவே தமிழகதின் அழகிய பசுமையான நாங்குநேரி வட்டாரமாகும். பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ரோஜா திரைப்படத்தின் முதல் காட்சியை நினைவூட்டுதாக அமைகிறது.
திருநெல்வேலியின் அடையாளமாக பலவற்றை குறிப்பிட்டாலும் அங்கு விளையும் வாழையும் முக்கியமானது. பணப் பயிராக 1940களில் விதைக்கப்பட்ட வாழை இன்று அப்பகுதி விவசாயத்தில் இன்றியமையாத விளை பொருளாவிட்டது. உலகத்திலேயே வாழை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த 2016-17 ஆண்டில், 29,163,000 மெட்ரிக் டன் வாழை விளைவித்துள்ளது. அதிலும் இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள விளைநிலங்களில் 13 சதவீதம் பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றில் விளையும் பழங்களில் மூன்றில் ஒரு பழம் வாழைப் பழம் என தேசிய விவசாய ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன. 
வாழைக்கு மட்டும் வருடந்தோறும் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதன் தேவை அதிகமாக உள்ளது. அதன் விலையும் ஏற்றத்தில் உள்ளது. ஆனாலும் திருநெல்வேலி வட்டார விவசாயிகள் தங்களின் விலையை பெற முடியாத நிலையில் தான் உள்ளனர்.
வாழைத்தார்களுக்கு கிடைக்கும் விலையையும், அதன் லாபத்தையும் விவசாயிகளுக்கு வழங்காமல் கமிசன் மண்டிகளும், இடைத் தரகர்களும் அடைந்து வருகின்றனர். இதை தடுக்க தாமிரபரணி விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் (TAFPCO Ltd), என்ற கூட்டுப்பண்ணை நிறுவனம் கடந்த ஜூன் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் திருக்குருக்கன்குடியில் இருந்து செயல்படும் இந்த அமைப்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அரசு சார்ந்த திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வழிகளில் ஒன்று இந்த நிறுவனம். உதாரணமாக, விவசாயிகள் கூட்டாக தங்களது விளை பொருட்களை சரக்கு வாகனங்களில் சந்தைக்கு கொண்டு வந்து விற்கும் பொருட்டு அதிகமாக விலையை நிர்ணயம் செய்ய இயலும்.
விவசாயக் கூட்டுப்பண்ணை எனப்படும் FPO சமீபகாலத்தில் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியக் கம்பெனிகளின் சட்டம் - 2013ன்படி 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து இது போன்ற நிறுவனங்களை சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக தொடங்கமுடியும். இந்த நிறுவனங்களின் மூலம் சிறு நிலங்களைக் கொண்டு கடன் பெறுதல், தொழில்நுட்ப உதவிகள், சந்தைப்படுத்துதல் போன்ற சேவைகளை வழங்க முடியும். மேலும் இந்நிறுவனங்களின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் மூலம் நபார்டு வங்கியின் சார்பில் செயல்படுத்தும் திட்டங்களின் பயனை எளிதாகப் பெற முடியும்.
தமிழகத்தில் 18க்கும் அதிகமான வாழைப்பயிர் வகைகள் பயிரிடப்படுகிறது. அவற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பச்சநாதன் மற்றும் மட்டி போன்ற வாழை வகைகளை தாய்ப்பாலுக்கு நிகராக குறிப்பிட முடியும்.
உலகளவில் வாழைப் பழவகைகளில் கேவன்டிஷ் மற்றும் ட்வார்ப் கேவன்டிஷ் போன்ற வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுவையாகவும், ஊட்டச்சத்து கொண்டதாகவும் உள்ளது. இருப்பினும் இவை அணைத்தும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டவை. அதனால் ஒரு பழத்தில் நுண்ணுயிரித் தாக்கம் ஏற்பட்டால் மொத்த பழங்களும் அதனால் பாதிக்கப்படும். பல வகையான பயிர்களை சாகுபடி செய்யும் போது இதுபோன்ற நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். தமிழகத்தில் பல்வேறு வகையான வாழைப் பயிர்களை சாகுபடி செய்வதால் இந்த முறைகளை பயன்படுத்துவதால் தான் வாழை உற்பத்தியில் உலகின் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழக அரசின் புள்ளி விவரப்படி ஒரு ஹெக்டேருக்கு 100 மெட்ரிக் டன் வாழை விளைகிறது. ஆக மூன்று இலட்சம் ஹெக்டேர்களில் 6.2 மில்லியன் டன் வாழை வருடத்திற்கு விளைவிக்கப்படுகிறது.
ஆனால் இடைத்தரகர்கள் மாபியா கும்பலைப் போல செயல்பட்டு வருகிறது. பயிர் விளையும் போதே சிறு விவசாயிகளிடம் பணத்தை கொடுத்துவிடுகின்றனர். ஒரு வாழை மரம் தார் பிடிக்க 8 முதல் 10 மாதங்கள் ஆகும். அவற்றை பக்குவமாக நோய்கள் தாக்காமலும், மழையிலும், காற்றிலும் பராமரித்து வர வேண்டும். அவ்வாறு அறுவடை காலத்தில் வாய்க்கு வந்த விலையில் அதன் உற்பத்தியின் மொத்த லாபத்தையும் இடைத்தரகர்களே எடுத்துக் கொள்கின்றனர். இதற்கிடையில் சூறைக்காற்று, மழை போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அந்த விவசாயிகளின் நிலை பரிதாபம் தான்.
மற்ற தொழிற்துறை கூட்டமைப்புகளைப் போல விவசாயிகளுக்காக இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 700 நிறுவனங்கள் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 70 அமைப்புகள் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 85% மக்கள் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலங்களை வைத்துள்ளனர். 
மேலும் இடைத்தரகர்களின் துணையில்லாமல் நேரடியாக விளை பொருட்களை விவசாயிகளே விற்பனை செய்யும் நிலை ஏற்படவேண்டும். இதன் முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். வரும் லாபத்தில் சரிபாதியை அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரித்து கொடுக்கும் முறையும் வரவேற்கத்தக்கது.
வாழையின் வகைகள்
ரஸ்தாளி – நற்சுவையும், நறுமணமும் கொண்ட பழவகையாகும். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் பீகார் போன்ற பகுதிகளில் அதிகம் விளைபவை. 
பூவன் – இந்த வகை நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக விளைபவை. தமிழகத்தில் வணிக ரீதியாகவும், காலநிலை மற்றும் மண்வளம் போன்ற காரணங்களால் அதிகம் விளைகிறது. மேலும் வாழை இலைக்காக தமிழகம் மற்றம் கேரளத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
நேந்திரன் – கேரளாவின் பிரசித்தி பெற்ற வாழைப்பழ வகை தற்போது தமிழகத்திலும் பரவலாக பயிரிடப்படுகிறது. இப்பழத்திற்கு தனித்துவமாக காம்பும், அடர்பச்சை நிறத் தோலும் அடையாளம். பழம் பழுக்கும் போது பழுப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
செவ்வாழை – இந்த வகை தமிழகம் மற்றும் கேரளத்தில் அதிக விலைக் கொடுத்து வாங்கப்படும் பழமாகும். தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வணிகரீதியாக பரவலாக பயிரிடப்படுகிறது. கர்நாடகம், ஆந்திரம், மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் இது சந்திர பழே என்றும், பீகார் மற்றும் ஏனைய பகுதிககளில் லால் வெல்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
நெய் பூவன் – இந்த வகை வாழையானது மெல்லிய செடியாக வளரும். ஆனால் 12 முதல் 14 மாதங்களில் 15 முதல் 30 கிலோ வரை எடை கொண்ட வாழைத் தாராக வளரும். அடர் பச்சை நிறத்தில் காய்க்கும் இந்த பழமானது நாளடைவில் தங்க நிறத்திற்கு மாறும். இந்த கனி மிகுந்த நறுமணத்தையும், சுவையையும் கொடுக்கும். இது கேரளத்தில் சில பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
பச்சைநாதன் – தமிழகத்தின் பிரசித்த பெற்ற வாழைப் பழ வகை. தமிழகத்தின் குளிர் பிரதேசங்களில் வளரக் கூடியது. தென்னை மற்றும் பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 
கற்பூரவல்லி – கற்பூரவல்லி உயரமாகவும், இலகுவாகவும் உள்ள வகை. இதன் தனித்துவமே இதன் இனிப்பு சுவை தான். பீகாரில் இவ்வகை பழத்தை கன்தளி என்று அழைப்பர்.
இவ்வாறு பல வகைகளைக் கொண்டது வாழை. அரசு கொள்முதல் செய்யாத அல்லது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காத எந்த விளை பொருளுக்கும் விலை உத்தரவாதம் கிடையாது. அதற்கு வாழையும் விதிவிலக்கல்ல. மாதப் பயிர்களில் வெள்ளாமை செய்யும் பயிர்களுக்கு விலை கிடைக்காமல் போனாலே, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். இந்த நிலையில் வாழை போன்ற ஆண்டுப் பயிர்களுக்கு விலை இல்லாமல் போனால், என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை. 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-04-2018

4 comments:

  1. Hi, Can you pls share any contact details from the TAFPCO members. Thanks

    ReplyDelete
  2. I think it died already as I do not see any work call me at 9820324945

    ReplyDelete
    Replies
    1. Hi Dr.V Thanumoorthy ,iam Manireddy from Tirupati, Andhra Pradesh, we are in to Banana wholesale merchants , we need karpuravalli bananas, if u know any farmers who are cultivating this Verity of banana ,in your place pls can u help , we need 5 to 10 tons in a week ,

      Delete
    2. My number 9700755777 ,P.Mani reddy

      Delete

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...