இந்த team work தாமிரபரணி ஜீவ நதியை பாதுகாக்க எடுக்கும் அற்புத களப்பணியை
வாழ்துவோம்!
பாராட்டோவும்!! உங்கள் அனைவரின் வாழ்த்துக்களை கோருகிறோம்...
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் காலை முதல் மாலை வரையிலும் மிகவும் முக்கியமான தாமிரபரணி ஆற்றின் தூய்மை பணிகளை பற்றிய கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியது....
பாபநாசம் பகுதியில் தாமிரபரணி ஆறு காடுகளில் இருந்து விலகி நிலத்தை தொடும் புள்ளி ஆகிய தலையணை முதல் தாமிரபரணி ஆற்றின் முதல் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் தாமிரபரணி ஆற்றை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களோடு இணைந்து ஆற்றை 100% தூய்மை படுத்தி தரும் பொறுப்பை நிறைவேற்ற தாமிரபரணி ஆற்றை உளப்பூர்வமாக நேசிக்கும் மனிதர்களில் பத்து பேரை தேர்வு செய்து அறிவித்தார்கள்...
அதோடு இனி பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நடக்கும் அனைத்து தூய்மை பணிகளுக்கும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் அரசுத் துறைகளின் முழு ஆதரவு மற்றும் உதவிகளை பெற்று தருவதாக அறிவித்தார்கள்...
இந்த இனிய நாளில் ....
கடந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் அம்மன் படித்துறை பகுதியை மீட்டெடுத்த தாமிரபரணி நதியின் சொந்தங்கள் அனைவரும் தகவல்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டு ஒன்று சேர்ந்தோம்....
. வரும் ஞாயிறு அன்று நாங்கள் புதிய உத்வேகத்துடன் தாமிரபரணி ஆற்றின் நீருக்கடியில் கிருமிகளோடு மூழ்கி கிடக்கும் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து ஆற்றில் வீசப்பட்ட சுமார் பத்து லட்சம் பழைய துணிகளையும் ஒன்று விடாமல் ஆற்றுக்குள் இருந்து கரைக்கு கொண்டு சென்று வாகனங்கள் மூலம் ஊருக்கு வெளியே கடத்தி அந்த கழிவுகள் அனைத்தையும் தீங்கு இல்லாத அளவில் முறைப்படி அழிக்கும் முயற்சியில் இறங்குகிறோம்....
நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக வந்திருந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் திரு.வெங்கடேஷ் அவர்கள் பாபநாசம் பகுதியில் செயல் படும் அனைத்து வனக்குழுக்களும் இனி இந்த ஆற்றின் தூய்மை பணிகளில் எங்களோடு தோள் கொடுக்க வேண்டும் என்று அறிவித்து அதற்கான கடிதவாயிலான உத்தரவுகளை உடன் பிறப்பிப்பதாக அறிவித்தார்...
அதோடு எங்கள் ஊரின் மிகவும் முக்கியமான பகுதியாகிய டாணா பகுதியில் இருந்து வந்திருந்த ஜெயா அக்காள் தலைமையில் ஆன பெண்கள் குழு இந்த முயற்சி வெற்றி பெரும் வரை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் தூய்மை பணிகளில் கலந்து கொள்வோம் என்று அறிவித்தனர்....
ஊர் கூடுகிறது இனி தேர் தானாகவே நகரும்....
முயற்சி வெற்றி பெற வாழ்த்துங்கள்.....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-04-2018
No comments:
Post a Comment