நீதிதேவன் மயக்கம்
நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு,
மக்களால் தூற்றப்பட்ட ஒருவருக்கு அரசு சார்பில் சிலையும், மரியாதையும், அரசு அலுவலகங்களில்
படங்களை வைப்பதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது. இதென்ன நீதிமன்றத்திற்கு
தெரியாதா? இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய போது மத்திய அரசு அலுவலகங்களில்
இருந்து அவரது படங்களை தூக்கித் தெருவில் வீசியதெல்லாம் 1977இல் நாம் பார்க்கவில்லையா?
இந்திரா காந்தியை விட இந்த குற்றவாளி மேம்பட்டவரா?
என்ன கருமமோ? இப்படியெல்லாம் காட்சிப் பிழைகளும், போலி பிம்பங்களும் தமிழகத்தை பாழடிக்கின்றது.
இதுவொரு வேடிக்கை காட்சியல்ல. பகுத்தறிவு வேண்டும். பகுத்தறிவில்லாமல் இப்படியான இடமாறும்
தோற்றப் பிழைகளை கொண்டாடினாலே முட்டாள்தனமான நடவடிக்கைகளாகும். அரசியல் என்ற நெறியை
தவமாக நினைக்காமல் பிழைப்பாக நினைத்தால் இப்படியெல்லாம் அநீதிகள் அரங்கேறி அதையும்
நியாயப்படுத்துவோம். அதையும் நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் பொது வாழ்வில்
தகுதியானவர்களை அப்புறப்படுத்திவிட்டோமே. தகுதியே தடை.
ஆனால், வரலாறு ஒரு நாள் இந்த தவறுகளை காட்டிக் கொடுத்து
எதிர்கால சமுதாயம் இப்படியும் பொது வாழ்வில் இருந்த தகுதியற்றவர்களை கொண்டாடினார்களா
என்று பரிகசிக்கும் காலமும் வரும்.
#தகுதியே_தடை
#நீதிதேவன்_மயக்கம்
No comments:
Post a Comment