Wednesday, April 25, 2018

இந்திய அரசியல் சட்டம் தேசத்தாயின் தலையில் இருக்கிறதா ?

இந்திய அரசியல் சட்டம் தேசத்தாயின் தலையில் இருக்கிறதா ?
அல்லது பணம் இருக்கும் மனிதர்களின் செருப்புக்கு கீழாக அழுக்கடைந்து இருக்கிறதா...?
————————————————-
(வனபாரதி மீடியாவின் பதிவு)
Image may contain: outdoor, nature and water
தாமிரபரணி ஆற்றின் கரையில் நூறு வருடங்கள் வயதுடைய ஆற்று நொச்சி மரம் ஒன்று வெட்டி சாய்க்கப்பட்டு இருக்கிறது ?
கேட்டால் பொதுப்பணித்துறை அனுமதி அளித்து வேலியிட்டு ஆற்றை அபகரிக்கும் அனுமதி கடிதம் தந்து உள்ளதாக பதில் வருகிறது....?
உண்மையில் பொதுப்பணித்துறை அத்தகைய அனுமதி கடிதம் ஏதேனும் எந்த ஒரு தனி நபருக்கும் வழங்கி உள்ளதா ?
பணம் இருந்தால் ஆற்றையும் அபகரிக்க லாம் என்று இந்திய சட்ட திட்டங்களில் ஏதும் சொல்லப்பட்டதாகவும் தெரியவில்லை ?
இந்திய அரசியல் சட்டம் தேசத்தாயின் தலையில் இருக்கிறதா ?
அல்லது பணம் இருக்கும் மனிதர்களின் செருப்புக்கு கீழாக அழுக்கடைந்து இருக்கிறதா....?
சம்பந்த பட்ட அதிகாரிகள் தார் பாலைவணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டியவர்கள்...
அவர்கள் பால் சுரக்கும் தாமிரபரணி தாய் மடியில் பணி செய்ய லாயக்கு அற்றவர்கள்....
வேதனையுடன்....

#KSRpostings

#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...