U P Singh, Secretary, Ministry of Water Resources, told The Indian Express that the Centre is now free to frame the scheme which need not exactly be what the tribunal (CWDT) has said. “The tribunal is recommendatory in nature and we have the flexibility to interpret the nature of the scheme.”
இவ்வாறு மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங் இந்தியன் எக்ஸ்பிரஸ்(10-4-2018) டில்லி பதிப்பில் குழப்பப்படுத்தும் கருத்தை அளித்துள்ளார்.
அதில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு சூழ்நிலைக்கும், வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்றவாறு ஒரு செயல்திட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற கருத்தை சுயமாக வெளியிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொல்லையே தவிர்த்துள்ளதை பார்த்தால் பல சந்தேகங்களும், எதிர்வினைகளும் தான் நம் மனதில் ஏற்படுகின்றது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்கு காலந்தாழ்த்தாமல் முடிவெடுக்கின்ற மத்திய அரசு தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரிப் பிரச்சனையில் நீண்டகாலமாக முடிவெடுக்க எது தடுக்கின்றது?
இதற்கு தயக்கம் ஏன்? இதையெல்லாம் வெளிப்படையாக இல்லாமல் கமுக்கமாக மத்திய அரசு செயல்படுகின்றது.
#காவிரி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-04-2018
No comments:
Post a Comment