திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த க.ப என்ற புளியங்குடி க.பழனிச்சாமி (Puliangudi Palanisamy, பி. 1938) அரசியல்வாதி மற்றும் பேச்சாளர். தனது 13 வது வயதில் பெரியார் மற்றும் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நகைச்சுவைப் பேச்சாளரான இவர் திமுகவின் தொடக்கத்திலிருந்து அதன் பேச்சாளராகப் பணியாற்றினார். திமுக-வின் ஆரம்ப கால பேச்சாளர்களுள் ஒருவராக இருந்தார். அண்ணா, கலைஞரால் திமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டார். பின்பு தி.மு.கவில் புளியங்குடி நகரச் செயலாளராகவும், 1987 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் , திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி என இரு மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட போது திருநெல்வேலி தி மு க மாவட்ட இணைச் செயலாளரகவும், அதன் பின் மாவட்ட அவைத்தலைவராகவும் , மாநிலக் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். மதிமுகவின் அரசியல் ஆலோசகராகவும் நெல்லை மாவட்ட அவைத்தலைவராகவும் கட்சியில் பணியாற்றி 2007-ம் ஆண்டு மறைவு.
முதலமைச்சர் கலைஞருடன் புளியங்குடி க.பழனிச்சாமி, தூத்துக்குடி பெரிசாமி வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் டி.ஏ.கே.இலக்குமணன், சுப.சீதாராமன், நெல்லை புகாரி.
படம் - கோவில்பட்டியில் -1989
நன்றி
ReplyDelete