Saturday, April 14, 2018

சா. கணேசன் மறைவு.

பெரியார், அண்ணா, கலைஞருக்கு நெருக்கமாகவும், சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், தி. நகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுகவின் பல போராட்டங்களில் தொடக்க காலத்தில் 1950களில் இருந்தே பங்கெடுத்து, திமுக வின் முக்கிய பொறுப்புகளில் இருந்த *சா. கணேசன்* மறைந்த செய்தியை தினமணி தவிர்த்து வேறு எந்த பத்திரிக்கையிலும் சரியான வகையில் வரவில்லை. உண்மையான, நேர்மையான களப்பணியாளர் இப்படித்தான் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர்.
இவர் சென்னை மாநகராட்சி மன்றத்தில் காவிரி நதிநீர், வீராணம் நீர் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்காக 1970இல் தீர்மானங்களை கொண்டு வந்தார்.
பண்பாளர் சா. கணேசன் (89) மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...