Friday, April 20, 2018

உண்மையான நடவடிக்கைகளை குறித்து வரலாற்றில் ஆவணமும், காலமும் பதில் சொல்லும்

உண்மையான நடவடிக்கைகளை குறித்து வரலாற்றில் ஆவணமும், காலமும் பதில் சொல்லும்
----------------------------------
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து முதன்முதலாக 1988லும், 2011லும் (WP No. 22771 of 2011) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போது தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தபொழுது நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கே.எஸ்.இராதாகிருஷ்ணன் என்னோடு முதுநிலை வழக்கறிஞர் ஆர்.காந்தியை சீனியராகக் கொண்டு பணியாற்றியனோம் என்ற நிலையில் இந்த வழக்கை நியாயமாக நான் விசாரிக்க கூடாது என வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றினார்.
அதேபோல 1986இல் (WP No. 10589/1986) மற்றும் 2015இல் (WP No. 4696 of 2015) சிவகாசி அருகே தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை குறித்து முறையே எம்.ஜிஆர் ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் அந்த ஆலையை தனியாருக்கு விற்கக் கூடாது என்றும் அந்த ஆலையின் புகையால் ஆபத்து ஏற்படும் என்று வழக்குத் தொடுத்து இருமுறையும் தீர்வு கண்டேன். அப்போது 1986இல் வழக்கு தொடுத்த போது நீதிபதி கே.வெங்கடசாமி, இராதாகிருஷ்ணனும் எனக்குத் தெரிந்தவர்; அந்த ஆலையும் என்னுடைய பகுதியை சார்ந்தது. எனவே முக்கியமான இந்த வழக்கை 1986 காலக்கட்டத்தில் வேறு அமர்விற்கு மாற்றினார்.
இதே மாதிரி தான் 1994இல் கும்மிடிப்பூண்டி டாபர் டூபான்ட் வாகன டயர்கள் தயாரிக்கும் நச்சு ஆலையின் நிலைமை. வைகோ அவர்கள் ஸ்டெர்லைட்டினை எதிர்த்து வழக்கு துவக்கும் போது ஆரம்பத்தில் தராசு கிருஷ்ணசாமியும், நானும் மற்றும் சிலரும் வழக்கறிஞர்களாக அந்த மனுவிலும் வக்கலாத்திலும் 1998இல் கையொப்பம் இட்டிருந்தோம். இந்த வழக்கு அன்றைய தலைமை நீதிபதி நீதியரசர் லிபரான், நீதியரசர் இ. பத்மநாபன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி இ.பத்மநாபன் அப்போது இதை விசாரிக்க மறுத்து விட்டார். ஏனெனில் இது குறித்தான தவறான மொட்டை பெட்டிஷன் வந்திருந்ததாகவும், வைகோ அவருக்கு உறவினர் என்றும், என் மைத்துனர் டாக்டர். எஸ். பாலகிருஷ்ணனுடைய உடன்பிறந்த சகோதரர், கே.எஸ்.இராதாகிருஷ்ணன் இந்த வழக்கில் வழக்கறிஞராக இருப்பதால் அந்த வழக்கினை வேறு அமர்விற்கு மாற்ற உத்தரவிட்டார்.
இப்படியெல்லாம் பெரும் சிக்கல்களுக்கும், இடர்பாடுகளுக்கும், முயற்சிகளுக்கும் இடையில் பொதுநோக்கோடு அடியேன் நதிநீர் இணைப்பு, காவிரி, கண்ணகி கோவில் (வழக்கு எண். WP No. 8758 of 1988), மனித உரிமைகள், விவசாயிகள் பிரச்சனை, சுற்றுச் சூழல், தூக்கு தண்டனை ஒழிப்பு போன்றவற்றில் 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வுகள் கண்டு நாட்டுக்கு தான் பலாப்பலன்கள் கிடைத்துள்ளது. கர்த்தா யார் என்பது அவசியமில்லை. அதனால் ஏற்படும் புகழுக்காகவும், பதவிச் சுகங்களுக்காகவும் இதை செய்யவில்லை. இதயத் சுத்தியோடு செய்தவன். தகுதியாக சேவகம் செய்பவர்களை நினைத்து பார்க்க மாட்டார்கள். ஆனால் எளிதாகவும் மறந்ததாக காட்டிக் கொள்கின்ற சமுதாயத்தில் எவ்வளவு பணிகள் மேற்கொண்டாலும் அங்கீகாரமோ அல்லது நன்றி பாராட்டலும் கூட எதிர்பார்க்க முடியாது.

ஏனெனில் தகுதியே தடை.

#பொதுநல_வழக்குகள்
#public_interest_litigation
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...