மற்ற மாநிலங்களில் அணைகளை பாதுகாக்க மாநாடுகளும், முயற்சிகளும். ஆனால் தமிழகத்திலோ? கருமாந்திரங்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?
கடந்த வருடம் இறுதியில் கேரள அணைகள் பாதுகாப்பு குறித்தான மாநாடு கேரளாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
ஒடிசா மாநிலத்திலும் அணைகள் பாதுகாப்பு குறித்தான மாநாடுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 223 அணைகளை சீரமைக்க ரூபாய். 2100 கோடிகளை உலக வங்கி இதற்காக கடன் வழங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 745 கோடி ரூபாய் 107 அணைகளை சீரமைக்க வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆண்டுதோறும் அணைகளின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திலோ இதுகுறித்து எந்ந செயல்பாடுகளும் இல்லாத நிலை. தமிழகத்தில் கருமாந்திரங்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய???
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-04-2018
No comments:
Post a Comment