Monday, April 6, 2020

கரோனா- #வைரஸ்_குடும்பம்.

#கரோனா- #வைரஸ்_குடும்பம். 
—————————————-
கரோனா என்பது ஒரு வைரஸ் குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ் வகைகள் பல. தற்போது புதிதாக தோன்றியிருப்பது தான், கோவிட் - 19. இதற்கு முன் இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ்களில், 'சார்ஸ் - கோவ் (SARS-COV), மெர்ஸ் - கோவ் (MERS-COV)' வைரஸ்களும் மனிதனுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தியவை.

Covid-19: இவ்வைரஸ், 2019 டிசம்பர், இறுதியில், சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றி, பூமியை பந்தாடி வருகிறது. கரோனா குடும்பத்தில் தோன்றிய கொடூர வைரஸ் இது. உலக அளவில் அதிகம் உயிரை பலி கொண்ட பட்டியலில், 2வது இடத்தில் உள்ளது. விரைவில், முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. கரோனா குடும்பத்தில், புதிதாக தோன்றி இருப்பதால் நோவல், அதாவது,, கரோனா வைரஸ் என, அழைக்கின்றனர்.




'சார்ஸ்' வைரஸ் போன்று, கோவிட்-19, சுவாச கோளாறை ஏற்படுத்துவதால், 'சார்ஸ் - 2' என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ஆனால், சார்ஸை விட மின்னல் வேகத்தில் பரவும் தன்மை உடையதாகவும், கொடியதாகவும் விளங்குகிறது. இந்த கொலைவெறி வைரஸ், சீனாவில் தோன்றியதால், கோவிட்-19ஐ, 'சீன வைரஸ்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக குறிப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

SARS CoV: இதன் பிறப்பிடமும் சீனா தான். அந்நாட்டின் தெற்கு பகுதியில், 2002ல் தோன்றியது. 2003ல், 26 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. 8,௦௦௦ பேர் வரை இறந்தனர். இது, தீவிர சுவாசக்கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி, மரண பயத்தை காட்டும். 2003க்கு பிறகு பெரிய அளவில் தென்படவில்லை. கோவிட் - 19 பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள், சார்ஸ் வைரஸை மையப்படுத்தி தான் நடக்கின்றன. இது, பூனையிடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.

MERS CoV: மத்திய, கிழக்கு நாடுகளில் பாதிப்பை விளைவித்த வைரஸ் இது. கோவிட் - 19, சார்ஸ் போன்று கொடுமையானதாக இல்லாவிட்டாலும், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 2012ல், சவுதி அரேபியாவில் தோன்றியது. அங்கிருந்து, கத்தார், எகிப்து, துருக்கி, பிரிட்டன், வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. துவக்க காலத்தில், சவுதி வைரஸ் என்றும் இதை அழைத்தனர். இது, ஒட்டகத்திடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.

சீனாவின் ஹூபே மாகணம், வுஹான் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து, அங்கிருந்து 4.30 லட்சம் மக்கள் அமெரிக்காவுக்கு விமானம் மூலம் வந்துள்ளதுதான் அமெரிக்காவுக்கு பாதிப்பு. சீனாவிலிருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் முக்கியமான 17 நகரங்களுக்கு இயக்கப்பட்டு, இந்த விமானங்கள் மூலம்தான் மக்கள் அமெரிக்காவுக்குள் வந்துள்ளார்கள்.4 லட்சம் மக்கள் சீனாவிலிருந்து அமெரி்க்காவின் 17 நகரங்களில் கால்பதிக்கும் போது அமெரிக்க அரசு விமானநிலையங்களில் கரோனா குறித்த பரிசோதனைகளை தீவிரப்படுத்தவில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
06.04.2020
#ksrpost

No comments:

Post a Comment

2023-2024