Wednesday, April 1, 2020

இந்தியா_சீனா_உறவு_குறித்த #The_Hindu_விளம்பரமும், #சில_உண்மைகளும்......

#இந்தியா_சீனா_உறவு_குறித்த 
#The_Hindu_விளம்பரமும், 
#சில_உண்மைகளும்......
————————————————-
இன்றைக்கு (01.04.2020)   ஆங்கில இந்து ஏட்டில் மூன்றாவது பக்கத்தில் 70 years of diplomatic relations between India and China எனும் தலைப்பில் விளம்பர பத்தி வந்துள்ளது. நேரு காலத்திலிருந்து இன்று வரை 70 ஆண்டு சீனா இந்திய உறவு குறித்து  கால வாரியாக அட்டவணை இடப்பட்டுள்ளது. இம்மாதிரி விளம்பரம் மற்ற ஆங்கில ஏடுகளான Times of India, Deccan Chronicle, The New Indian Express, Mint போன்றவற்றில் இந்த முழு பக்க விளம்பரம் வரவில்லை. 

இந்த  காலக்கட்டத்தில் இத்தனை முக்கியத்துவம்   கொடுத்து  இது வரவேண்டிய நிலை  ஏன்  என்று தெரியவில்லை. சீனா தன் நாட்டில் பரவிய கரானாவை குறித்து  வெளி  உலகத்திற்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன . இந்த சூழலில்  இந்த விளம்பர பத்தி வெளி வந்த நேரத்தில் பல கேள்விகள் நம் முன்வருகின்றன.







இந்தியாவுக்கு  சீனாவின்  தரும் சிக்கல்கள் பல ; இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை, ஆசாத் காஷ்மீர்,  தலாய் லாமா-திபெத் பிரச்சினைகள், மேக்மோகன் லைன்-எல்லை வரையறைப் பிரச்சினைகள், மற்றும்   இந்தியாவின் வடகிழக்கில் பிரம்மபுத்திர  நதியில்  இருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய தண்ணீரை தடுத்தல், இந்திய எல்லைப் பக்கத்தில் இந்த நதியின் தீரத்தில்  சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில்பெரியஅணைகளும்,   
மின்  உற்பத்தி நிலையங்களையும் இந்தியாவிடம் சொல்லாமலேயே கடந்த 2008லிருந்துசீனாஇரகசியமாகசெய்துவருகிறது. வட கிழக்கு இந்திய மாநில எல்களில் அத்து மீறல், அங்கு கடவு சீட்டு (passport) இந்திய மக்களுக்கு சீனா வழங்கியது என குற்றச்சாட்டும் எழப்பப்பட்டது.

சீனா இந்தியாவின்  அண்டை நாடு
களோடு  சேர்ந்து தென் கிழக்கு ஆசிய புவி  அரசியிலில் கடந்த 60 ஆண்டுகளாக எப்படி  நமக்கு  எதிராக காய்களை  நகர்த்துகிறது என்பது தெரிந்த விடையம்தான்.

கடந்த 1954ம் வருடம் ஜூன் மாதத்தில் பாண்டூங்ளில் 29 நாடுகள் பங்கேற்ற Asian-African Conference என்ற உச்சி மாநாட்டில்;இந்திய -சீன இரு நாடுகள் மட்டுமல்லாது இந்தோனேசியா, இலங்கை, எகிப்து யூகோஸ்லோவியா போன்ற மற்ற நாடுகள் இணைந்து ஒப்புக் கொண்ட பஞ்ச சீல கொள்கையையும் சீனா மீறியது. இந்த கொள்கையினை வகுத்த நேரு, சீன அதிபர் சூ என் லாய், யுகோஸ்லோவிய அதிபர் மார்ஷல் டிட்டோ, எகிப்து அதிபர் நாசர், இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ, இலங்கை அதிபர் பண்டாரநாயகா போன்றவர்கள் முன்னெடுத்த இந்த பஞ்ச சீல கொள்கையை  அர்த்தமற்றதாக்கி சீனா 1962ல் இந்தியா மீது போர் தொடுத்தது. இன்றைக்கு வரைக்கும் இதே நிலை தான். 

இந்துமகாசமுத்திரத்தில்,  திருகோண
மலை கேந்திர பகுதில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையை வைத்துக் கொண்டு சீனா தற்போது ஆட்டமும் ஆடுகின்றது.  பட்டு வழி (Silk way)வணிகச் சாலை, ஆப்ரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தன்னுடைய வணிகத்திற்காக  சர்வதேச கடல் சட்டங்களை  மீறி சீனா நடந்துக் கொள்கிறது. இந்து  மகா சமுத்திரத்தில் தனது கடல் எல்லையை அதிகமாக்க வேண்டும் என்று சீனாவின் தூண்டுதலின் பேரில் இலங்கை அரசு ஐநா மன்றத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளது.

இப்படியான நிலையில் 70 ஆண்டு உறவுகள் சில ஒப்பந்தங்களை சேர்த்துக் குறிப்பிட்டாலும் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கக் கூடிய வகையில் சீனா எதிர் வினை ஆற்றியது .இதற்க்கு என்ன  பதில் சீனா சொல்லும்?    இந்த பிரச்சனைகளை சிக்கலை பற்றி ஆங்கில இந்துவும் சுட்டிக் காட்டி வெளிப்படுத்தினால்  நல்லது என்பது வேண்டுகோள். இது திரு என். ராம் கவனத்திற்கு செல்லும் என நினைக்கிறேன்.  ஏற்கனவே ஈழத்தமிழர் உரிமை  பிரச்சனையை அவர் எளிதாக எடுத்துக் கொண்டு சென்றது வேதனையை தந்தது. இதையும் அப்படி
கருத வேண்டாம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
01.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...