Friday, March 31, 2023

மரண தண்டனை கைதிகள்!

மரண தண்டனை கைதிகள்!
—————————————
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 472 மரண தண்டனை கைதிகள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். 
உத்தரபிரதேசத்தில் 67 மரண தண்டனைக் கைதிகளும், பீகாரில் 46 மரண தண்டனைக் கைதிகளும், மகாராஷ்டிராவில் 44 பேரும், மத்திய பிரதேசத்தில் 39 மரண தண்டனைக் கைதிகளும் இருக்கின்றனர். 
இது தவிர, 290 மரண தண்டனைக் கைதிகளின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

#ksrpost
31-3-2023

ஈழம் தொடர்பாகத் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டு - இ(ஈ)ழகுடும்பிகன்



-----------------------------------
சங்க இலக்கியங்களில் முருகப்பிரானுடைய உறைவிடமாக்க் கருதப்பெறும் திருப்பரங்குன்றத்தில் 3 குகைகள் உள்ளன. 2 குடைவிக்கப்பெற்ற கோயில்கள் . ஒன்று இயற்கையாக அமைந்த குகையாகும் இப்பொழுது முருகப்பிரானுடைய பெருங்கோயிலாக வழிபாட்டில் திகழ்வது பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் தோற்றுவிக்கப்பெற்றது. இக்கோயிலில் நெடுஞ்சடையன் காலத்தில் துர்க்கைக்கும் ஜேஷ்டாதேவிக்குமாகக் கட்டப்பெற்ற கோயிலாகும். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் பல படுக்கைகள் உள்ளன. அவற்றில் தமிழி எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் மிகக் குறிப்பிடத்தக்க கல்வெட்டு ஒன்று உண்டு.

கல்வெட்டுப் வரி வடிவம் 

1.எருக்காட்டூர் இழகுடும்பிகன் பொலாலையன்
செய்தான் ஆய்சயன் நெடுசாதன்

2(எருக்காட்டூர்  இ(ஈ)ழகுடும்பிகன் பொலாலையன் செஸத்  அஸ சாதன் நெடுசாதன்)

 பொருள் 

ஈழத்தை சேர்ந்தவனும் குடும்பத் தலைவனும் வணிகனுமான  பொலாலையன் என்பவன்  ஆய்சயன் நெடுசாதன் என்பவருக்கு செய்து  கொடுத்த தானம் பற்றியது.

முக்கியத்துவம் :

1.ஈழம் - என்பது இலங்கையைக் குறிக்கும் 
2.குடும்பிகன் - குடும்பத் தலைவன் சங்க காலத்தில் வணிகன் என்றும் கூறலாம் 
3.ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்பு 
4.சங்ககாலத்தில் எருகாட்டூர் என்பது உழவனின் ஊரையும் குறிக்கும் 
5.ஈழத்தைச் சேர்ந்த பொலாலையன் என்று எடுத்துக்கொண்டால் இவர் ஈழம் குறித்துக் கிடைக்கும் முதல் கல்வெட்டாகக் கொள்ளலாம். ஆயினும், இதை ஈழக்குடும்பத்தைச் சேர்ந்த எக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கொள்ளலாம். ‘’ஈழர்’’ என்பதற்குப் பனை மரத்திலிருந்து பதனி இறக்கும் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் பொருள் உண்டு.

#ஈழத்து தந்தை எஸ். ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 125ஆவது பிறந்த தினம் !



—————————————
மலேசியாவில்பிறந்து யாழ்ப்பாணத்தில் வளர்ந்து வடக்கு கிழக்கிற்கு தமிழ்த்தேசிய முகவரி கொடுத்தவர் தந்தை செல்வா









தந்தை செல்வாவின் 125 வது பிறந்தநாள் இன்றாகும் (மார்ச் 31) அவரின் பிறப்பு பதிவுப்பெயர் செல்வநாயகம் அவர் 1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாகப் பிறந்தார்.                                    










செல்வநாயகத்தின் தந்தை யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது. செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார்.

செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் முக்கியமான ஒருவர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதமராக செயல்பட்ட சாலமன் பண்டாரநாயக்கா ஆவார்.            

செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார்.
பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர்.                                   

உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.

ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் 1944, ஆகஷ்ட்,29,ல் இணைந்து அரசியலில் பணியாற்றினார்.இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் 1949, டிசம்பர்18,ல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். 

தமிழ்தேசிய அரசியலின் தாய்க்கட்சி இலங்கைத்தமிழரசுக்கட்சி என்பதை செயல்கள் மூலம் நிருப்பித்த தந்தை்செல்வா அவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த தாயகமாக செயல்படவேண்டும் என்ற எண்ணத்தை தனது மனதில் நிறுத்தி சமஷ்டி அடிப்படையிலான சுய ஆட்சி ஒன்றே இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்திற்கு உகந்தது என்பதை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் அடிப்படைக்கொள்கையாக ஏற்று செயல்பட்டார்.

தமது அரசியல் செயல்பாட்டை வடக்கு மாகாணத்துடன் மட்டும் மட்டுப்படுத்தாமல் கிழக்கு மாகாணத்தில் தமிழ்தேசிய அரசியலை விஷ்தரிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேரடியாக 1956, ம் ஆண்டு சென்று மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் செல்லையா இராசதுரை என்பவரையும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களையும் இனம்கண்டு இலங்கைத் தமிழ் அரசியல் கட்சியில் உள்வாங்கினார்.

இதன்மூலம் 1956, தொடக்கம் கிழக்குமகாணத்தில் தமிழ்தேசிய அரசியல் கூர்மை பெற்று தமிழ் தலைவர்கள் மட்டுமன்றி இஷ்லாமிய அரசியல் தலைவர்களையும் கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழ் அரசிக்கட்சியில் இணைத்து தமிழ்பேசும் மக்கள் என்ற சொல்லாடல் மூலம் தமிழ் முஷ்லிம் ஒற்றுமையை கட்டிவளர்த்தார்.

தந்தை செல்வா 1956, ல் மட்டக்களப்புக்கு வருகை தந்து தமிழ்தேசிய அரசியலுக்கு அத்திவாரம் இடாமல் இருந்தால் இன்று கிழக்கு மாகாணம் பேரினவாதிகளுடைய சிங்கள கட்சிகளிடம் சோரம்போய் தமிழை மறந்து மண்ணை மறந்து தமிழ்  இன மான உணர்வை இழந்தவர்களாக கிழக்கு மகாண மக்கள் வாழ்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அனைவரும் தந்தை செல்வாவின் 135, வது பிறந்த நாளில் புரிவது காலத்தின் கட்டாயம்.

தந்தைசெல்வா 1898 மார்ச் 31 ல் பிறந்து 1977,ஏப்ரல்,26,ல் மரணித்தாலும் அவர் விட்டுச்சென்ற தமிழ்தேசிய அரசியலை முன்னகர்த்துவதே அவருக்கு நாம் செலுத்தும் பிறந்தநாள் நினைவாகவும் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகவும் அமையும்.

ஈழத்து வரலாறும் தொல்லியலும்.

#ksrpost
31-3-2023

திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்!

திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்! - https://minnambalam.com/featured-article/திராவிட-மாடலால்-தீர்க்க….

இன்றைய (31-3-2023) மின்னம்பல இணைய இதழ் எனது கட்டுரை.

திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
 ***
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் இருவரும் பொதுவெளியில் பேசும்போது,  நாங்கள் எல்லாம் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது மட்டுமல்ல, இந்த இருவருமே கேரளத்திலும், தமிழகத்திலும் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு பாசப் பிணைப்போடு பேசுகிறார்கள். இது உண்மைதானா என்று நம்ப முடியவில்லை.
நேற்று (29.03.2023) சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரைக் கால்வாயை கேரள அரசு மூடிவிட்டது. அப்போதும் தி.மு.க ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. துரைமுருகன்தான் அப்போதும் இத்துறைக்கு அமைச்சராக இருந்தார்.  
 நெய்யாறு அணை வரலாறு இன்று அரசியலில் இருப்பவர்களில் பலபேருக்குக் தெரியாது. அன்றைக்கு சென்னை மாநிலத்தில் காமராஜர் முதல் அமைச்சர். கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி. சங்கர் முதலமைச்சர். சென்னை அரசாங்கத்தின் செலவில்தான் இந்த நெய்யாறு அணை கட்டப்பட்டது. நெய்யாறு அணை திறப்பு விழாவில் இரு மாநில முதலமைச்சர்களான காமராஜரும் சங்கரும் கலந்து கொண்டனர். அப்போது சங்கர், “தமிழ்நாட்டையும் கேரளத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலை பிரித்தாலும், கேரள மக்கள் தமிழர்களை பாசத்துக்குரிய சேட்டன்களாகத்தான் நினைத்து உறவு கொண்டாடி வருகிறோம்” என்று கூறினார். அப்போது காமராஜரும் சங்கரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இரு மாநில முதல்வர்களின் உறவால், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிந்தது.
இந்தநிலையில் நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக கேள்வியை எழுப்பியிருக்கிறார். சட்டமன்றத்தில் கேள்வியை எழுப்பிய அவரும் அதற்குப் பதில் கூறிய நீர்வளத்துறை அமைச்சரும் கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நெருக்கமாக இருப்பதாகவே கூறியுள்ளனர்.  
அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று 2017 - இல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தபோது, அதை பினராயி விஜயனும், மு.க.ஸ்டாலினும் எதிர்த்தார்கள். 
மக்கள் சாப்பிட வேண்டிய உணவை மத்திய அரசு எவ்வாறு தீர்மானிப்பது? உணவு விஷயத்தில் டெல்லியில் இருந்தும், நாக்பூரில் இருந்து அறிவுரை தேவையில்லை. கேரள மக்கள் இயல்பாகவே ஆரோக்கியமான உணவை உட்கொள்கிறார்கள் என்று பினராயி விஜயன் கூறினார். அதேபோன்று மு.க.ஸ்டாலினும், மோடி விரும்புவதை தான் நாம் சாப்பிட வேண்டும் என்றால் தனிமனித உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. சுதந்திர நாட்டில் வாழ்வதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற தடைகளால் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது என்று தனது கருத்தைக் கூறினார். இருமாநிலங்களிலும் மாட்டுக்கறி விருந்துகள் நடத்தப்பட்டன. இதில் இருவரும் ஒரே மாதிரியான கருத்தையே கொண்டிருந்தார்கள்.
 தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்ற 30 ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் வரும் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்டது. ‌அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார். திராவிட மாடல் (The Dravidian Model) என்ற தனது புத்தகத்தை பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கேரளத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலும், கண்ணனூரில் நடந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலும் ஸ்டாலின் பங்கேற்றார்.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்த தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய இருவரும் பங்கேற்றுப் பேசினார்கள்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன் தொடக்கவிழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.
மத்திய அரசை எதிர்ப்பதிலிருந்து இப்படி பல்வேறு பிரச்னைகளில் ஒற்றுமையாக மு.க.ஸ்டாலினும், பினராயி விஜயனும் செயல்படுகிறார்கள். ஆனால் நதிநீர்ப் பிரச்னை என்று வரும்போது மட்டும், கேரள அரசு தனது சுயநலத்தைக் காட்டுகிறது. மு.க.ஸ்டாலினுக்கும் பினராயி விஜயனுக்கும் இந்த விஷயத்தில் நெருக்கமில்லாமல் போய்விடுகிறது.
அவர்களிருவரும், “நாங்கள் எல்லாம் திராவிட இனம் ” என்று பேசிக் கொண்டாலும், கேரளத்திலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள். பணம் கேட்கிறார்கள். இது இன்றைக்கு நேற்றைக்கு உள்ள பிரச்னையில்லை. பல ஆண்டுகளாக எந்தவொரு முடிவும் இல்லாமல் தொடரும் பிரச்னை.  
ஒரு சொட்டுத் தண்ணீர் அண்டை மாநிலத்துக்கு கேரளா தர வேண்டும் என்றால், அது கேரள சட்டமன்றத்தில் பேசப்பட்டுதான் தர முடியும் என்ற ஒரு விநோதமான நடவடிக்கையையும் மேற்கொள்கிறார்கள்.
இந்த நெய்யாறு சிக்கல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
வெறும் நெய்யாறு மட்டுமல்ல, அப்படியே வடக்கு நோக்கி வந்தால், நெல்லை மாவட்டம் கொடுமுடி ஆறு. பச்சை ஆறு, தென்காசியில் மாவட்டத்தில் 1989 தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அடவி நயினார் அணை, செங்கோட்டை அருகே உள்ளது. அதன் தண்ணீர் வரத்து கூடாது என்று உலக வாதம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தம் தமிழகத்தின் எல்லைக்குட்பட்ட இடத்தில் உள்ள அடவிநயினார் அணையை உடைக்க கடப்பாரை மண்வெட்டியுடன் 2002 இல் வந்தார். இப்பிரச்னைகளைப் போல நீண்டகாலமாக கேரளாவில் உள்ள அச்சன்கோவில் – பம்பை, தமிழகத்தில் சாத்தூர் அருகே உள்ள வைப்பாறோடு இணைப்புத் திட்டம் முக்கியமானதாகும். இது குறித்து 1983 இல் தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற என்னுடைய வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2012 இல் இவை எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.  
அடுத்து இதே தென்காசி மாவட்டத்தில் சிவகிரி, வாசுதேவநல்லூர் அருகே தமிழகத்துக்கு உரிமையான செண்பகவல்லி தடுப்பணை சுவரை இடித்து, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு பயன்பாட்டுக்கு உதவும் அணையையும் செப்பனிடாமல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னைகள் உள்ளன. இதற்கு சற்றே வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 1966 - 68 வரை தமிழக அரசு அழகர் அணையைக் கட்டத் திட்டம் இட்டது. ஆனால் அழகர் அணை இன்று வரை கட்டப்படாமல் கேரள அரசின் அனுமதியை எதிர்நோக்கி காத்திருக்கும் சிக்கலில் உள்ளது.  முல்லைப் பெரியாறு பிரச்னை அனைவருக்கும் தெரிந்த முக்கியமான பிரச்னை. அப்படியே கொங்கு மண்டலம் வரை ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு, புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, அமராவதி என்று பத்து மேற்பட்ட நதி நீர் தீரங்களின் சிக்கல்கள் ஏறத்தாழ 40 வருடங்களுக்கும் மேலாக உள்ளன. இதையெல்லாம் பேசி தமிழ்நாட்டு நதி நீர் தீரங்களின் உரிமைகளைப் பாதுகாக்க முயற்சிகள் எதுவும் செய்யாமல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேரள முதல்வர் பினராயி விஜயனும், “நாங்கள் எல்லாம் திராவிடமண்ணைச் சார்ந்தவர்கள் ” என்று கட்டித் தழுவிக் கொள்வதில் என்ன பயனோ? 
இந்தநிலையில் நேற்று (29.03.2023) தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. அந்தப் பகுதி பாலைவனமாக உள்ளது. நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்படி கேரள அரசு நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் தண்ணீர் கொடுப்பதற்கு பணம் கேட்டனர். உலகத்திலேயே எந்த நாட்டிலும் தண்ணீருக்குப் பணம் வாங்கியதில்லை. இதனால்தான் அந்த விவகாரத்தைத் தொடர முடியாமல் போய்விட்டது. தண்ணீருக்காக கேரள பணம் கேட்டது நியாயமானது அல்ல என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காரிய சித்தம் இல்லாமல் வெட்டிப் பேச்சினிலேயே சாதனைகளைச் செய்துவிட்டோம் என்று பேசுவதில் எந்த  அர்த்தமும் இல்லை. மேலும் மேலும் தமிழகத்தின் உரிமைகளை இழந்து  காவிரி சிக்கல் மாதிரி பெரும் தலைவலிதான் ஆகும். இந்தச் சூழ்நிலையில் பினராயிவிஜயனுக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள உறவுக்கு என்ன அர்த்தம் உள்ளது என்பதே புரியவில்லை.
“என்னை புதைக்கின்ற சமாதியில் ஒரு வரி எழுதினால் போதும், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதியிருந்தால் போதும் ” என்று உருக்கமுடன் பேசிய
நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், இந்தப் பிரச்னையை மிக அழுத்தமாக மு.க.ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்லி தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதில் என்ன தடை என்ற கேள்வியும் எழுகிறது.
உச்சநீதிமன்றத்தில் நதிகள் தேசியமயமாக்கப்படவேண்டும் என்றும், கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாறோடு இணைக்கவேண்டும் என்றும், கேரள நதிப்படுகைகளான அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கவேண்டும் என்றும் 30 ஆண்டுகாலம் போராடி கடந்த 2012 பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பைப் பெற்றேன். அந்த வழக்கில் தமிழக நதிநீர்ச் சிக்கல்கள் எல்லாவற்றையும் சொல்லி தீர்வையும் கேட்டேன். அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் உருப்படியாகச் செய்தது எதுவுமில்லை. அப்படி ஏதேனும் முயற்சி செய்திருந்தால் இன்றைக்கு நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில், சட்டப்படி கேரள அரசு நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் தண்ணீர் கொடுப்பதற்கு பணம் கேட்டனர். உலகத்திலேயே எந்த நாட்டிலும் தண்ணீருக்குப் பணம் வாங்கியதில்லை. இதனால்தான் அந்த விவகாரத்தைத் தொடர முடியாமல் போய்விட்டது என்று தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போயிருக்கும்.
கர்நாடகத்தில் காவிரி, தென்பெண்ணையாறு, ஒகனேக்கல், மேகதாது, ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைக்கட்டு திட்டம், ஆந்திராவில் பாலாறு, பொன்னியாறு என வரிசையாக நமக்கு அண்டை மாநில நதிநீர்ச் சிக்கல்கள் பெருகியுள்ளன.
கர்நாடக, ஆந்திர முதல் அமைச்சர்களை விட கேரள முதலமைச்சரோடு உறவும், நட்பும் அதிகமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும்போது, இம்மாதிரியான பிரச்னைகளை ஏன் தீர்க்க முடியாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை.

#தமிழக_நதிநீர்ப்பிரச்னைகள்!
கட்டுரையாளர்: அரசியலாளர்

 

#ksrpost
31-3-2023.

Thursday, March 30, 2023

#தமிழகத்தில் அன்றைய ஏரிகள் குளங்கள் நிர்வாகம். இந்த ஆண்டில் ரூ.100 கோடி செலவில் 123 #ஏரிகள் புனரமைப்பு

#தமிழகத்தில் அன்றைய
ஏரிகள் குளங்கள் நிர்வாகம்.
இந்த ஆண்டில் ரூ.100 கோடி செலவில் 123 #ஏரிகள் புனரமைப்பு…. வெட்டி, முட்டாள், மடையர்.
—————————————
வெட்டி, முட்டாள், மடையர்!
****
ஒவ்வொரு காலகட்டங்களிலும் சில வேலைகள் இழிவானதாக மாறும்பொழுது அதை செய்தவர்கள் கேலிப்பொருளாகி விடுகின்றனர்.  பின்னர் அதுவே வழக்காடலாக மாற்றம் பெறுகிறது  அப்படித்தான் இன்று பல பெயர்கள் இகழ்ச்சிக்குரியவனாகி காலங்கடந்து அதன் பொருளறியாமல் போய்விட்டன. இப்படி சில பெயர்களை அன்றைய நடைமுறைகளை கொண்டு பார்த்தால் ஆச்சரியம் அடைவீர்கள். கீழே சில வசவுமொழிகள் கடந்து வந்த பாதையை காணும் பொழுது நகைப்புத்தான் நம்மறியாமலேயே வருகிறது. 

வெட்டி, முட்டாள், மடையர் இவைபற்றி கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகள்

வெட்டி
======

நாம் ஒரு பணியைச் செய்து அதற்கு கூலி வழங்கப்பட்டால் அது வேலை ஆகும்.

மன்னர்கள் காலத்தில், குளம் ஆறு போன்றவற்றின்  கரையை அடைத்தல் போன்ற பணிகளை நாட்டின் நலன் கருதி இலவச சேவையாக செய்து தரும் பணி வெட்டி எனப்பட்டது. இதற்கு கூலி வழங்கப்படுவதில்லை.

முட்டாள்
=======

 நாட்டின் நலன் கருதி சேவையாக செய்து தரும் பணியை வசதியானவர்கள் வயதானவர்களால் செய்ய இயலாதபோது அவர்களுக்குப் பதில் அந்த வேலையை செய்து தரும் நபரை முட்டுக்குப் போன ஆள் என்ற பொருளில் முட்டாள் என குறிக்கிறார்கள். அந்த நபர்களுக்கு உணவு அல்லது பணம் பொருள் போன்றவற்றை வழங்குவார்கள். திருவிளையாடல் புராணத்தில் வயதான பாட்டி செய்ய வேண்டிய ஆற்றின் கரையை அடைக்கும் பணியை பிட்டுக்காக சிவன் செய்வதாக குறிப்பிடப் படுவதை நினைவில் கொள்ளுங்கள்.

மடையர்
=======

ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றின் மடையை திறந்து மூடும் பணி செய்தவர்களை மடையர் என்பர்
****
பிரதமரின் வேளாண்நீர்பாசன திட்டத்தின் கீழ், 22 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டி ல், 123 ஏரிகள் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதை அறிவித்தார்.

• கடலுார்,  திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர்,  திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகள், 58.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

• அரியலூர்,  திண்டுக்கல், கள்ளக்குறிச்சி , மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 17 அணைகளின் பழைய இரும்பு கதவுகள், மின்தொடர்புச் சாதனங்கள், 34.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

• கோவை, திண்டுக்கல், பெரம்பலுார்,  சேலம், திருச்சி , திருப்பத்தூர்,  திருவண்ணாமலை, வேலுார் ஆகிய மாவட்டங்களில், 15 இடங்களில் புதிய தடுப்பணைகள், 70.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டட் ப்படும்.

• பிரதமரின் வேளாண்நீர் பாசன திட்ட த்தின் கீழ், வேலுார்,  ராணிப்பேட்டை , திருப்பத்தூர், கடலுார் உள்ளிட்ட 22 மாவட்டங்களில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 123 ஏரிகள் புனரமைக்க ப்படும்.

• அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்தில் கிடைக்கும் உபரி நீரை, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி , திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்,  ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல், நத்த ம் தொகுதிகளில் உள்ள குளங்களுக்குக் கொண்டு செல்வதற்கு சாத்திய கூறு அறிக்கை, ஒரு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.

• கன்னியாகுமரி, தோவாளை அடுத்த ஞாலத்தில், தடவையாற்றின் குறுக்கே நீர்தேர்க்கம் அமைக்க , விரிவான திட்ட அறிக்கை, மூன்று கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.

• நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு பொய்கை நல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்,சோமநாதபட்டி னம் ஆகிய இடங்களில் கடல் நீர்ஊடுருவதை தடுக்கும் வகையிலான கடைமடை கட்டமைப்புகள், 13.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

• கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில், நான்கு இடங்களில் சிறிய ஆறுகளின் குறுக்கே, பாலங்கள், தரைப்பாலங்கள், கரைகளில் சாலை, நடைபாதை அமைக்கும் பணிகள், 49.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 

• தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், மூன்று புதிய கால்வாய்கள் அமைக்கும் பணிகள், 12.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 
_
இவ்வாறு, நேற்று சட்ட மன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர்  துரை முருகன்அறிவித்தார்.

#தமிழகத்தில்_அன்றைய_ஏரிகள்_குளங்கள்_நிர்வாகம்
#ஏரிகள்புனரமைப்பு
#வெட்டி, #முட்டாள், #மடையர்.

 கே எஸ் இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #KS_Radhakrishnan, #கேஎஸ்ஆர்,
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#KSR_Post
29-3-2023.


'நான் அப்படி இல்லை' என்பதை விளக்கச்செல்வதில்லை

இப்போதெ இப்போதெல்லாம்
யாரும் என்னை தவறாக பேசிக்கொண்டிருக்கையில்


சிலரின் குருட்டுக்கேள்விகளுக்கு
பதில் கொடுக்க முனைவதில்லை
வார்த்தைகளால் குத்திக்கொலைசெய்கையில்
என் பக்க நியாயங்களை 
எடுத்துரைப்பதில்லை

இவர்களை வேடிக்கையாக பார்த்து, 
இவையாவற்றையும் தாண்டியும்
நான் அழாமல் இருப்பதும்
எதுவொன்றும் நடக்காததைப்போல்
இன்னமும் அவர்களின் முன்னால்
நடமாடிக்கொண்டிருப்பதும்தான்
அவர்களை
ஆச்சரியப்படவைக்கின்றது… ல்லாம்
யாரும் என்னை தவறாக பேசிக்கொண்டிருக்கையில்
'நான் அப்படி இல்லை' என்பதை
விளக்கச்செல்வதில்லை
சிலரின் குருட்டுக்கேள்விகளுக்கு
பதில் கொடுக்க முனைவதில்லை
வார்த்தைகளால் குத்திக்கொலைசெய்கையில்
என் பக்க நியாயங்களை 
எடுத்துரைப்பதில்லை

இவர்களை வேடிக்கையாக பார்த்து, 
இவையாவற்றையும் தாண்டியும்
நான் அழாமல் இருப்பதும்
எதுவொன்றும் நடக்காததைப்போல்
இன்னமும் அவர்களின் முன்னால்
நடமாடிக்கொண்டிருப்பதும்தான்
அவர்களை
ஆச்சரியப்படவைக்கின்றது…

இலங்கை மலையகத்தில் சீத்தாவடி, நுவரெலியா,இலங்கை Ashok Vatika ( Also Known as Sita Eliya) In Sri Lanka Where Devi Sita Lived In Lanka . Footprints On Stone Are Believed to Be of Lord Hanuman, Nuwara Eliya, Lanka.

இலங்கை மலையகத்தில் சீத்தாவடி, நுவரெலியா,இலங்கை

Ashok Vatika ( Also Known as Sita Eliya) In Sri Lanka Where Devi Sita Lived In Lanka .

 Footprints On Stone Are Believed to Be of Lord Hanuman, Nuwara Eliya, Lanka.

#புறநாநூறு, 
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
 வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
 நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்..

#அகநாநூறு,
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
 முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
 வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
30-3-2023.


1950 :: Portrait of Lord Ram, Goddess Sita and Laxman In Original Copy of Indian Constitution

1950 :: Portrait of Lord Ram, Goddess Sita and Laxman In Original Copy of Indian Constitution

#Indian_Constitution
#KSR_Post
30-3-2023.


Wednesday, March 29, 2023

“I wish maps would be without borders & that we belonged to no one & to everyone at once,”

“I wish maps would be without borders & that we belonged to no one & to everyone at once,” 

#இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் #இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள். *Parliament* # *MP most privileged persons*



—————————————
இந்திய நாடாளுமன்றம் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு அதிக அளவில் முடக்கப்பட்டே வருகின்றது. நேரு, சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் 180 நாள்களுக்கு மேல் இந்திய நாடாளுமன்றம் கூடியதெல்லாம் உண்டு. ஏன், 1966 வரை 200 நாட்களுக்கு மேல் நள்ளரவு தாண்டி 2.00 மணி வரையும் இரு அவைகள் நடந்துள்ளன.  இன்றைக்கு அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. இந்திரா காந்தி காலத்தில் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம், நாடாளுமன்ற ஆவணங்களைக் கிழித்துப் போடுதல் என ஆரம்பித்தது, இன்றைக்கு இரு அவைகளும் நடத்த முடியாத அசாதாரண நிலைக்குத் தள்ளிவிட்டது. 

இந்திய நாடாளுமன்றம் ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது.
வருடாந்திர வரவு செலவு திட்டம் (Budget Session) (பிப்ரவரி முதல் மே வரை 4 மாதங்கள்
மழை கால கூட்டம் (Monsoon Session) (ஜூலை முதல் செப்டம்பர் வரை 3 மாதங்கள் )
குளிர் கால கூட்டம் (Winter Session) நவம்பர் முதல் டிசம்பர் வரை 2 மாதங்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு அமர்வுகள் உண்டு. 
காலை அமர்வு (Morning sitting) 11 மணி முதல் 2 மணி வரை -2 மணி நேரங்கள்.
மதிய அமர்வு ( Post-lunch sitting) 2 மணி முதல் 6 மணி வரை - 4மணி வரை
இதில் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், வாய் சண்டை நேரம் மற்றும் தூக்க நேரம் எல்லாம் அடங்கும்.
வாரத்தில் இறுதி இரு நாட்கள் மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் இவர்கள் கூடுவதில்லை. ஆக ஒரு மாதத்திற்கு சராசரி 20 நாட்கள் வைத்து கொள்வோம்.

வருடாந்திர வரவு செலவு திட்டம் - 80 நாட்கள்
மழைக் கால கூட்டம் - 60 நாட்கள்
குளிர் கால கூட்டம்- 40 நாட்கள்
மொத்தம் சராசரி 180 நாட்கள் ஒரு வருடத்திற்கு கூடுகிறார்கள். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வைத்து கொண்டால் ஒரு வருடத்திற்கு 1080 மணி நேரங்கள் கூடுகிறார்கள்.

நாடாளுமன்றம் ஒரு நிமிடம் கூடுவதற்கு ரூ.2.5 லட்சம் செலவு ஆகுவதாக ஒரு தரவு சொல்கிறது. அதன் படி பார்த்தால் 64,800 நிமிடங்கள். இதற்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் செலவு என்று வைத்து கொண்டால் மொத்தம் ரூ.1620 கோடி வருகிறது.

இதுமட்டுமா?
 ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆண்டிற்கு மொத்த 32 லட்சம் ரூபாய் ஊதியமற்ற செலவுகளுக்கு அளிக்கப்படுகிறது. இது போக அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இலவச ரயில் பயணங்கள், இலவச விமானப் பயணங்கள், டெல்லிக்கு மட்டும் 40 முறை இலவசமாக அவரும் அவர் துணைவியாரும் சென்றுவிட்டு திரும்பலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு அரசு கஜனாவிலிருந்து 850 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வளவு சலுகைகளும், பயன்களையும் பெற்றுக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செய்யக் கூடிய  பணிகள் அனைத்தும் பயனற்ற நிலையிலேயே உள்ளன. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் “திறம்பட செயல்படும் நோக்கில்” சில சலுகைகள் மற்றும் நன்மைகளுக்கு உரிமையுடையவர்கள். இவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. சட்டத்தின் சமீபத்திய திருத்தம் மே 11, 2022 அன்று செய்யப்பட்டது.

இவற்றில் சில சலுகைகள் மற்றும் பலன்கள் பின்வருமாறு :
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் மற்றும் பணியின் போது வசிக்கும் எந்த காலகட்டத்திலும் ஒரு நாளைக்கு ரூ.2,000 செலவினப்படிகள் கிடைக்கும். ‘கடமையில் இருக்கும் காலம்’ என்பது, ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தின் அமர்வு அல்லது ஒரு குழுவின் அமர்வு நடைபெறும் இடத்தில் அல்லது அத்தகைய அமர்வில் கலந்து கொள்வதன் நோக்கம் அல்லது உட்கார்ந்திருப்பது அல்லது அத்தகைய பிற வணிகத்தில் கலந்து கொள்வதன் நோக்கத்திற்காக, அத்தகைய உறுப்பினராக அவரது கடமைகளுடன் தொடர்புடைய பிற வணிகங்கள் பரிவர்த்தனை செய்யப்படும் இடத்தில் இருக்கும் காலம் என்று பொருள்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் தினசரி செலவினப்படிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் அதிகரிக்கப்படுகிறது.
பயணப் படிகள் மற்றும் இலவச இரயில் போக்குவரத்து:
நாடாளுமன்ற உறுப்பினராக தமது கடமைகள் தொடர்பாக மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்தையும் எளிதாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயண படியையும் பெறுகின்றனர். தங்கள் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்திற்கும் விமானக் கட்டணத்தை அவர்கள் பெறுகிறார்கள். சாலை வழியாகப் பயணம் செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் மைலேஜ் கட்டணமாக வழங்கப்படுகிறது.
முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்யத் தேர்வு செய்தால் அவர்களுக்கும் ரயில் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில், இப்போது அவர்களுக்கு இலவச, மாற்ற முடியாத பாஸ் வழங்கப்படுகிறது, இது குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பில் எந்த ரயிலிலும் எந்த நேரத்திலும் பயணிக்க உரிமையளிக்கிறது. இந்த பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் காலத்திற்கு செல்லுபடியாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் ரயில் அனுமதிச் சீட்டை பெறவில்லை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரயிலில் இலவசப் பயணம் செய்ய உரிமையுண்டு, அவர்களது கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீராவி கப்பலில் இலவச போக்குவரத்தை அனுமதிக்கும் விதிமுறைகளும் உள்ளன. கடலோர, தீவு அல்லது ஆற்றங்கரை மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
தொகுதி செலவினங்கள்
ஒரு உறுப்பினர் தொகுதி உதவித்தொகையாக மாதம் ரூ.75,000 பெற தகுதியுடையவர்.
அலுவலக செலவுப் படிகள்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர்களின் அலுவலக செலவுகளை கவனிக்க மொத்தம் ரூ.60,000 மாதம் ஒதுக்கப்படுகிறது. இதில், 20,000 ரூபாய் ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் தபால் கட்டணத்திற்குச் செல்கிறது, லோக்சபா செயலகம், செயலர் உதவி பெறுவதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் 40,000 ரூபாய் செலுத்துகிறது.

வீட்டு வசதி மற்றும் பிற தொடர்புடைய படிகள்
ஒவ்வொரு உறுப்பினரும் தனது பதவிக் காலம் முழுவதும், பணம் செலுத்தாமல், ஓர் அடுக்குமாடி குடியிருப்பு வடிவில் தங்குவதற்கு உரிமையுண்டு. அவர்களுக்கு பங்களா ஒதுக்கப்பட்டால், சாதாரண உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு இலவச மின்சாரம் (ஆண்டுக்கு 50,000 யூனிட் வரை) மற்றும் இலவச தண்ணீர் (ஆண்டுக்கு 4,000 கிலோ லிட்டர் வரை) ஆகியவையும் உண்டு.
நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சில மரச்சாமான்கள் மற்றும் கூடுதல் சேவைகளுக்கான ஏற்பாடுகள் (எம்.பி.யின் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் போன்றவை) மற்றும் குறிப்பிட்ட கால பராமரிப்பு ஆகியவையும் உள்ளன.

தொலைபேசிக் கட்டணம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் டெல்லி இல்லம் மற்றும் அலுவலகம், அத்துடன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் உள்ள அவர்களது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் தொலைபேசிகளை இலவசமாக நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் உரிமை உண்டு. எந்த வருடத்திலும் தொலைபேசியிலிருந்து செய்யப்படும் முதல் 50,000 உள்ளூர் அழைப்புகளுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ரோமிங் வசதியுடன் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்டின் (எம்.டி.என்.எல்) ஒரு மொபைல் போன் இணைப்பையும், எம்.டி.என்.எல் அல்லது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) இன் மற்றொரு மொபைல் போன் இணைப்பையும் தனது தொகுதியில் பயன்படுத்துவதற்கு தேசிய ரோமிங் வசதியைப் பெற உரிமை உண்டு. அத்தகைய கையடக்கத் தொலைபேசி இணைப்புகளைப் பதிவு செய்தல் மற்றும் வாடகைக்கு எடுப்பது தொடர்பாக அவர் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

மருத்துவ சேவை
500 ரூபாய் (உறுப்பினரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும்) மாதாந்திரக் கட்டணத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இலவச மருத்துவச் சேவையைப் பெற உரிமை உண்டு.

இவ்வளவு சலுகைகளையும், உரிமைகளையும் பெற்று வலம் வரும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், உண்மையிலேயே மக்கள் பணி செய்வதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்களா? என்று பார்த்தால் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது.
 
இன்றைக்கு என்ன நிலைமை? நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பிரச்னைகளைப் பற்றிய அறிதல் புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். காசு கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றவர்களிடம் என்ன நேர்மை இருக்கப் போகிறது? கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒரு காலத்தில் நேர்மையற்ற அரசியல்வாதிகள், அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆனார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த குற்றவாளிகள் இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செல்லக் கூடிய பரிணாம அநியாயப் போக்கு நடந்து கொண்டு வருகிறது. 
 
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பபட்ட ஒரு எம்பி ஆங்கிலத்தில் ராஜ்யசபா, பார்லிமெண்ட் என்று எழுதத் தெரியாமல், எழுத்துப் பிழைகளோடு எழுதினார். அப்படிப்பட்ட  ஒருவரை அவர் சார்ந்த கட்சித் தலைமை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதென்றால் அது எவ்வளவு வேடிக்கை, விபரீத செயல் அல்லவா? 
வங்கி லோன் வாங்கி ஏமாற்றி லண்டனில் பதுங்கியிருக்கும் மல்லையா, மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி போன்றவர்கள் எல்லாம்,  மருத்துவக் கல்லூரியில் படிக்க மருத்துவப் படிப்புக்கான இடங்களை விலைக்கு  வாங்குவதைப் போல ராஜ்ய சபா உறுப்பினர் பதவியையே  விலைக்கு வாங்கி, ராஜ்ய சபாவுக்குச் சென்றதும் உண்டு. இப்படியான உறுப்பினர்களிடம் நாம் என்ன நேர்மை, கடமையுணர்ச்சி என்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியும்?  இதைக் குறித்து விரிவாக பலமுறை என்னுடைய வலைதளங்களில் தெளிவாகவும்,  விரிவாகவும் எழுதியுள்ளேன். 

இன்றைக்குத் தினமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன.  நாடாளுமன்ற  உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று எத்திக்ஸ் கமிட்டி போன்ற பல குழுக்களை அமைத்தும், நாடாளுமன்றம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று குழுக்களிடம்  அறிக்கைகளைப் பெற்றும்  இதற்கான விமோசனம் இதுவரை ஏற்படவே இல்லை.
எம்.பி என்றால் மெம்பர் ஆப் பார்லிமென்ட் அல்ல, விஜபியைவிட  மோஸ்ட்  பிரிவ்லேஜ்டு பெர்சன் என்றுதான் எம்பிகளைக் கருத வேண்டும் என்று ஒரு நண்பர் சொன்ன கருத்துதான் இப்போது  நினைவுக்கு வருகிறது. 

நானும் பார்த்து வருகிறேன். 1990 - இல் இருந்து நாடாளுமன்றம் இரு அவைகளிலும் நடக்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுநாள் காலையில் அவையில் பேச வேண்டிய பேச்சுக்கான தரவுகளை கேட்பார்கள். முதல் நாள் இரவு 7.00 -8.00 மணியளவில் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு பிரச்னைகள், ஈழப் பிரச்னை,  காவிரி பிரச்னை என எந்தப் பிரச்னைகள் குறித்தும் அவை பற்றிய தரவுகள் வேண்டும் என்று கேட்கும்போது,  நான் எவருக்கும் செவிமடுக்காமல், "இதெல்லாம் தெரியாமல் ஏன் எம்பியாக பதவி ஏற்று இருக்கிறீர்கள்? நாடாளுமன்ற நூல் நிலையம் சென்று படித்து சுயமாகப் பேசுங்கள். உங்களைச் சொல்லி குற்றமில்லை. உங்களைப் போன்ற தகுதியற்றவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய கட்சித் தலைமையைத்தான் சொல்ல வேண்டும்'' என்று அவர்களிடம் கறாராகச் சொல்வேன். இப்படி  

நாடாளுமன்றத்துக்குத் தகுதியற்றவர்களை கட்சித் தலைமை அனுப்பினால் இப்படியான நிலைதான் இருக்க முடியும்.
 மக்கள் வரிப் பணத்தில்  இவ்வளவு செலவுகள் செய்தும், மக்களுக்கான நலப் பணிகள் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை முடங்கியிருக்கச் செய்வதில் யாருக்கு என்ன பயன் இருக்கப் போகிறது?  காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 கே எஸ் இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #KS_Radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை,, #அரசியல், #புரியாதபுதிர், #நேரு, #பிரதமர், #இந்திரா, #nehru, #indiragandhi,#இந்திய_நாடாளுமன்ற_உறுப்பினர்கள் #MPs #mp_most_privileged #Parliament 

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#KSR_Post
29-3-2023.

Rekha Shetty

My good friend,#Rekha Shetty died on 28-3-2023,Tuesday.

Reports stated that she was rushed to a private hospital in the city after feeling uneasy, but could not revive as she collapsed.

Rekha Shetty was the rotary district governor of RI district 3230 in Chennai for a year (1999-2000). She had also written several books on personality development, self confidence, health and wellness.

Rekha Shetty, a PhD holder, was the founder of the Mindspower brand and managing director of Farstar Distribution Network Ltd, a consulting firm working exclusively on innovation initiatives and work-life balance.

My condolences…..


#ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு மறுத்தார் என தகவல் …ஏன் ?

'அரசியலில் புரியாத புதிர்கள்' என்னும் தலைப்பில் புதிய தொடர் உங்களுக்காக. அரசியலில் விடை தெரியாத பல விடயங்கள் பற்றி பேசவிருக்கிறேன் 

#ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு  மறுத்தார் என தகவல் …ஏன் ?
https://youtu.be/4licuwi9c8w

 கே எஸ் இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #இராதாகிருஷ்ணன், #அரசியல், #புதிர், #புரியாதபுதிர், #நேரு,#ஐநாசபை, #பிரதமர், #இந்திரா, #nehru, #indiragandhi,

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#KSR_Post
29-3-2023.

Tuesday, March 28, 2023

மாமனிதன் வைகோ அன்றும் இன்றும்…

#மாமனிதன்வைகோ அன்றும்இன்றும்…
————————————————————-
இன்றைய தினசரி செய்தி தாட்களில் இந்தப் படத்தைப் பார்த்ததும் சற்று பின்னோக்கிப் பார்க்கிறேன்.1993 -2001 வரைக்கும் ( முப்பது ஆண்டுகளுக்கு பின்) பின்னோக்கிப் பார்க்கிறேன். ம.தி.மு.க. தொடங்கப்படும்போது அதன் நிறுவனர்களில் நானும் ஒருவன். 

வைகோவுக்குத் துணை நின்று அந்த இயக்கம்   வளர வேண்டும் என்ற இதயசுத்தியோடு உழைத்தவன்.
 பாரதியின் வரிகளின்படி, ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா ! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் ; கருகத் திருவுளமோ?’ என்ற எண்ணத்தோடு வைகோவுக்குத் துணைநின்று அவரும் இயக்கமும் உயர வேண்டும் என்று அவருக்காகப் பணி  செய்தவர்களை; நன்றியற்று படிப்படியாக  அரசியல் சதுரங்கத்தில் ஓரங்கட்டி, ஒதுக்கி வைத்து, திட்டமிட்டு செயல்படக் கூடிய ஆற்றல் மிக்கவர் வைகோ. அது வேறு விடயம்.   
 
விஷயத்துக்கு வருகிறேன். இந்தப் படத்தில் சோனியாகாந்தியுடன் ராகுலுக்கு ஆதரவாக கையை  மடக்கி உயர்த்தி குரல் கொடுக்கின்றார். இது மாதிரி ஈழத்தமிழர் பிரச்னையில் ராஜீவ், சோனியா போன்றவர்களை எதிர்த்து கையை உயர்த்தி, முறுக்கி கடந்த காலத்தில் காட்டியதும் உண்டு. இதே மாதிரி சோனியா, ராகுல் ஆகியோரை ஆதரித்தும் பலமுறை கையை உயர்த்திக் காட்டியதும் உண்டு. வாழ்‌க அவருடைய திருப்பணி! 
 
மதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில் பேரறிஞர் அண்ணா காட்டிய வழி, காங்கிரசுடன் கூட்டு சேரக் கூடாது என்பதுதான். அதுதான் எங்களுடைய நிரந்த நிலைப்பாடு என்று சொன்னவர் வைகோ.“அண்ணாவின் கூற்றின்படி காங்கிரஸ்  கூட்டணியிலோ, அதனுடன் சேர்ந்தோ அரசியலில் நான் ஒரு நாளும் பணியாற்ற முடியாது .கலைஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறாக காங்கிரஸ்யுடன் உறவு என…….” என்று விடிய விடிய நடந்த கூட்டங்களில் மார்தட்டி சொன்னவர்தான் இந்த வைகோ. அதற்குப் பிறகு  அவருடைய எம்பி பதவியைத் தக்க வைத்துக் கொள்ள 2001 வரை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பார்; சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று வெறுத்துத் தள்ளுவார்.
 
வேலூர் சிறைச்சாலையில் அவர் பொடோ கைதியாக இருந்தபோது, 2003இல்சாத்தான்குளம் இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து மதிமுக ஆதரவாக பணி ஆற்றியது எல்லாம் வரலாறு. 

பின் முள்ளிவாய்க்கால் ரணங்களுக்குத் துணை போன காங்கிரஸ், திமுகவை கடுமையாகச் சாடி பேசிய வைகோ சொன்ன  வார்த்தைகளை இங்கு நான் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாடும், பலரும் அறிந்ததே. 
 
இப்போது ராகுலுக்கு சால்வை போட்டு கட்டித் தழுவுகிறார். சோனியாவுடன் மேடையிலும் போராட்டக் களத்திலும் நிற்கிறார். 

ஒரு காலத்தில், “ காங்கிரஸ் இயக்கத்தை ஆலன் ஆக்டேவியன் ஹியூம் தான் நிறுவினார். அவர் வெளிநாட்டுக்காரர். அதேபோல் காங்கிரஸை முடிவுக்குக் கொண்டுவந்து அதை  ஒன்றுமில்லாமல் செய்யப் போகிறவர் வெளிநாட்டுக்காரரான சோனியாதான்” என்று வைகோ பேசியது இன்றும் பல கேசட்டுகளில் உள்ளது. 
 
லட்சியத்தில் உறுதி, வாரிசு அரசியல், காங்கிரசுடன் கூட்டணி கூடாது,  ஐந்து பேர் (நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், நாகநல்லூர் வீரப்பன், மேலப்பாளையம் ஜஹாங்கீர்) வைகோ ஆதரவாக தீக்குளித்த காரணங்கள் குறித்து எல்லாம் வைகோ பேசிய பேச்சுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. வாரிசு அரசியலை எதிர்த்து  இந்த 5 தியாக சுடர்களை பற்றி  “மாமனிதன் ” ஆவணப்படத்தில் முக்கியமாக சொல்ல பட்டதா? என்று தெரியல…..
 
வைகோவை நம்பி, அவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வேண்டும்; அதற்குத் தகுதியானவர்; ஆற்றலாளர்; போராளி என்று ஆரம்பகட்டத்தில் அவருக்காக எங்களைப் போன்ற பலர், வேண்டி விரும்பி குரல் கொடுத்தது மட்டுமல்ல, அவருக்காக களப்பணிகள் ஆற்றினோம். அதற்காக நாங்கள் இழந்தவை அதிகம். பெற்றது ஒன்றுமில்லை. அவர் எப்படியோ பதவி என்ற மோகத்துடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் எங்களைப்  போன்றோர் 30 ஆண்டுகாலத்துக்கும் முன் எடுத்த முடிவினால், அவமானமும் அவப்பெயரும்தான் பெற்றோம். 

‘சிலநேரங்களில் சிலமனிதர்கள்’ என்பது ஒரு குறுகிய கால வலி வதைதான். ஆனால் இப்படிப்பட்ட சூழல் எங்களுக்கு வாழ்க்கை முழுவதும் ரணத்தையும் வலியையும் தந்து கொண்டிருக்கின்றது. 
‘நம்மை நம்பி சிலபேர் வந்தார்கள்; நம் சுய விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவெடுக்கிறோம்; இதனால் நம்மோடு வந்தவர்கள் என்ன நிலைக்குக் தள்‌ளப்படுவார்கள்’ என்று அவர் யோசித்ததெல்லாம் இல்லை. “என்னோடு வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வாங்கித் தரமாட்டேன். என்னுடைய வாழ்க்கை கரடுமுரடான தியாக வாழ்க்கை ”  என்பார். எப்போதும் அந்தப் பதிலை தயாராக வைத்திருப்பார். பொள்ளாச்சி கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், கணேசமூர்த்தி ஆகியோருக்கு பொறுப்புகளைத் தந்து,  வைகோ சுயநலமற்றவர் என்று காட்டிக் கொண்டாலும், தன்னுடைய சுயநலனுக்காக, காரண காரியங்களுக்காக மட்டுமே மேலே குறிப்பிட்டவர்களுக்குப் பதவி பெற்றுத் தந்தார். யார் இந்த பொள்ளாச்சி  கிருஷ்ணன்? அவர்  பத்து வருடம் எம்பி. அவருக்கு உழைத்த மற்றவர்களைப் பற்றி அவர் நினைத்தும் பார்த்ததில்லை. அன்றைக்குத் தள்ளப்பட்ட குழியிலிருந்து இன்றைக்கு வரை பலரால் எழுந்திருக்க முடியவில்லை. இது இவரின் ராஜ தந்திரம் என்பார்.

அக்னியைத் தொட்டவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். எவ்வளவு கால விரயம், குடும்பப் பணிகள், வயது, பொருளாதாரம் என அனைத்து வகைகளிலும் இழப்புகளைச் சரிக்கட்டுவது மட்டுமல்லாமல், வயது மூப்பில் இருக்கும்போது என்ன செய்ய? ‘கண்கெட்ட பின்தான் கதிரவன் வணக்கம்’ என்பதுபோல என்ன செய்ய? நம்பினோம். நம்பியவர்‌கள் தங்களுடைய சுயநலத்தை மட்டுமே எண்ணினார்கள். அதனால் பாடங்களை மட்டுமே கற்றுக் கொண்டோம். அவமானங்கள், இழப்புகள், பின்னடைகள், ரணங்கள் ஆகியவைதான் இன்றைக்கும் எமது  52 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை முழுவதும் எச்சங்களாக இருக்கின்றன.
 
என்அரசியல் வாழ்க்கையைப் படித்தாலே போதும். புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு அது பாலபாடமாக இருக்கும். எப்படி அரசியல் கயிற்றில் நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

குற்றம் சொல்லி எழுதவில்லை. பட்ட துயர்களால், ரணங்களால், படும் வேதனைகளால் வெளிப்படும் வார்த்தைகள் இவை. அவ்வளவும் சத்தியம்.

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
28-3-2023.


#*சுதேசி துறவி பரலி சு.நெல்லையப்பர்



நினைவு தினம் இன்று*.
—————————————
சுதேசி துறவி பரலி சு.நெல்லையப்பர்  வ உ சி, பாரதி என பலருக்கும் செய்த பெரிய காரியங்களை இன்று முழுவதும் அசைபோட அவ்வளவு சம்பவங்கள் இருக்கிறது. 

என்ன ஒரு குறை என்றால் ஒரு காங்கிரஸ்காரரை கூட சிலை அருகே பார்க்க முடியவில்லை. இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜரை தாண்டி யாரையும் தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை என்றுதான் தெரிகிறது. எப்படி உருப்படும்.
#KSR_Post 
 28-3-2023.

(Picture-குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் பரலி சு.நெல்லையப்பர் சிலை)

Monday, March 27, 2023

தமிழகத்தில் மதுவிலக்கு. திமுக உறுதி மொழிகள்.

https://www.facebook.com/100085887452567/posts/pfbid0qfYr4zTxnpRQWfi6MM1tv1STMjpS9wHG5ADXeM3PqYVoFpkr9McbYwcYUFUyWMsTl/?d=w&mibextid=qC1gEa

புதுவையில் 24-3-2023இல் நடந்த புதிய தலைமுறை வட்டமேசை விவாதம். இதில் கலந்து கொண்டு நான மது விலக்கு குறித்து பேசிய போது மறுத்தவர்கள்,இதை பார்க்க வேண்டும்.எனது வாதம் வெறும் 41/2 நிமிடங்கள் மட்டுமே வந்தது.நல்லா இருக்கு @PudhiyaThalaimurai  ஊடக அறம்….
@pudhiyathalaimurar
#KSR_Post
26-3-2023.


Sunday, March 26, 2023

எனது சுவடு-15 KSR


#எனது சுவடு-15
——————————

நாற்பதுகளில் விழித்துக்கொள்ளுங்கள். உங்களை அரசியலில் சிலரின் நன்மைக்கு-கடமை என்ற பெயரில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்!

உங்கள் சுயம் காயப்படாமல் காலமெல்லாம்  நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதை   உங்கள்  நாற்பதுகள்தான் தீர்மானிக்கின்றன.   நாற்பதுகளைத் தவறவிட்டு பின   வழி தேடினால் எதுவும் பிடிபடாமல் நீங்கள் தூக்கி சுமந்தவர்கள் உங்களின் முதுகில் குத்திருப்பார்கள். எனவே 30-40 வயது பலவற்றை தீர்மானிக்கிறது.

உங்களுக்கு யாரும் துணை நிற்பார்கள் என்று யாருமே, எப்போதுமே நினைக்காதீர்கள்...
உங்களுக்கு நீங்களும், உங்கள் செயல்களும்  தான் உற்ற துணை...

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
26-3-2023.


https://youtu.be/11zRTHkQJHw

#ராகுல்காந்தி விடயம்



————————————-



 ராகுல்காந்தி குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்றதும் நாடாளுமன்ற மக்களவை அவரைப் பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தில் இருந்து அவர் வெளியேற்றம் செய்யப்பட்டதும் இன்றைக்கு சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது. ஜனநாயக ரீதியாக கவனித்து; ராகுல்காந்தி நீக்கம் நன்கு ஆலோசித்து செய்து இருக்கலாம். உடனே அவசரமாக நடவடிக்கை தேவையா? என்ற கருத்தும் உண்டு.

இருப்பினும்,
அவருடைய தந்தையார் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படை அங்கே கோரதாண்டவமாடி, தமிழ் மக்களைக் கொன்று குவித்து இந்தியாவுக்குத் திரும்பியதும் 1990 மார்ச் இதே நாள்தான் ராகுல் நீக்கம். முதல்வர் தலைவர்  கலைஞர் அது அமைதி படை அல்ல அமளி படை என அந்த படை வீரர்களை வரவேற்க செல்ல வில்லை. அன்று வி. பி. சிங் பிரதமர்.

ரபேல் வழக்கில் ராகுல் பேசிய வார்த்தைகளுக்கு எதிராக மத்திய அமைச்சர் மீனாட்சிலேகி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும், அவ ராகுல்காந்தி விடயம்
 ராகுல்காந்தி குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்றதும் நாடாளுமன்ற மக்களவை அவரைப் பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தில் இருந்து அவர் வெளியேற்றம் செய்யப்பட்டதும் இன்றைக்கு சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது.
 அவருடைய தந்தையார் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படை அங்கே கோரதாண்டவமாடி, தமிழ் மக்களைக் கொன்று குவித்து இந்தியாவுக்குத் திரும்பியதும் 1990 மார்ச் இறுதியில்தான். ரபேல் வழக்கில் ராகுல் பேசிய வார்த்தைகளுக்கு எதிராக மத்திய அமைச்சர் மீனாட்சிலேகி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் ராகுல்  மன்னிப்பும் கேட்டார்.
 
கடந்த 10.7.2013 அன்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் வழக்குகளில் தண்டைனை பெற்றால் அவர்களுடைய பதவியைப் பறிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்தபோது, காங்கிரஸ் மன்மோகன் சிங் அரசு லல்லு பிரசாத் யாதவை இந்த பாதிப்பிலிருந்து காப்பாற்ற அவரசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தை ராகுல்காந்தி கடுமையாக எதிர்த்து நகலையும் கிழித்தெறிந்தார். அதுமட்டுமல்ல, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மலைவாழ் மக்களைக் குறித்தான சட்டங்கள் வந்தபோதும் அதையும் கடுமையாகச் சாடி ராகுல்காந்தி பேசியதும் உண்டு. சோனியா வாழும் ஜன்பத் வீட்டின் முகமறிந்து மன்மோகன் சிங் கடமைகளைச் செய்து பத்து ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பிலிருந்தார். பல நேரங்களில் மன்மோகன் சிங் மீது மறைமுகமாக ராகுல் காந்தி சாடியது எல்லாம் உண்டு. 

அதுமட்டுமல்ல, காங்கிரஸ் ஒருபக்கம் கூட்டணிப் பேச்சு வார்த்தையை திமுகவுடன் அறிவாலயத்தில் நடத்திக் கொண்டே, கலைஞருடைய மனைவியை தாயாள் அம்மாவை அதே அறிவாலயத்தில் முதல் மாடியில் 2 ஜி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சிபிஐ மற்றும் என்போர்ஸ்மெண்ட் துறையும் விசாரித்ததும் உண்டு. 

அதே காலகட்டத்தில் கலைஞர் 2 ஜி விவகாரம் குறித்து சோனியாகாந்தியைச் சந்திக்க தில்லி ஜன்பத் வீட்டுக்குச் சென்றபோது, கலைஞரோடு சென்ற புகைப்பட நிபுணர்களைக் கூட  ராகுல் காந்தி அனுமதிக்கவில்லை என்ற செவி வழித் தகவல்கள் எல்லாம் உண்டு. 
அதேபோல சந்திப்பு தொடர்பான படங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சியும் பத்திரிகைகளுக்கு வழங்கவில்லை. இப்படியான மனோபாவங்கள், ராகுலுக்கும் உண்டு. இந்திராகாந்தி மாதிரி செயல்பாடுகள், அவருடைய தந்தையார் ராஜீவ் காந்திபோல புதுமையை நேசிப்பது என அகப்புறச் சூழல்களைப் புரியாத மனிதராகவே ராகுல் இருக்கிறார் என்பதே பொதுவான கருத்து. 
 
ராகுல் காந்தி தன்னுடைய தாய் சோனியா போல செயல்பாடு கொண்டவர். சோனியாகாந்தி பிரதமர் இந்திரா காந்தி வீட்டின் மருமகளாகியும் நீண்ட காலம் இந்திய குடியுரிமை வாங்காமலேயே இருந்ததைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அன்றைக்கு வெளிவந்த சன்டே ஆங்கில வார ஏட்டில் எழுதியதெல்லாம் நினைவில் வருகின்றன. இந்திரா காந்தியின் காலத்தில் ராஜீவ்காந்தி திடமாக அரசியல் களத்தில் நுழைந்தபோதுதான் சோனியா காந்தி, இந்திய பிரஜா உரிமையை சோனியாகாந்தி பெறுகிறார் என்பதையும் நாம் அறிய வேண்டும். 

இதில் முரண்நகை என்னவென்றால் இலங்கை சென்ற அமைதிப்படை தமிழர்களைத் துன்புறுத்தி இந்தியாவுக்குத் திரும்பிய அதே மார்ச் இறுதியில்தான் ராகுல்காந்தி குறித்தான நீதிமன்றத் தீர்ப்பும், அதன் பின் அவரின் நாடாளுமன்ற வெளியேற்றம் தொடர்பான மக்களவை அறிவிப்பும் வந்துள்ளது.  முள்ளிவாய்க்காலில் நடத்திய கோரத்தை மறக்க முடியுமா?

இதைத் தனிப்பட்ட முறையில் குற்றம் பார்த்துச் சொல்லவில்லை. நடந்தவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இந்தப் பதிவு.

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
26-3-2023.

Pic-The illustrated weekly of India, April 8-14, 1979.

#நேற்று-இன்றைய அரசியல்….



————————————————————-
இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு அகில இந்திய கட்சிகள்தாம் கண்முன் இருக்கின்றன. ஒன்று பாஜக, மற்றொன்று காங்கிரஸ். அகில இந்திய அளவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கான தளம் குறைந்து கொண்டே வருகிறது. எதிர்க்கட்சி என்ற அளவில் காங்கிரஸ் வலுவாக பெரிதாக இருந்தால்தான் நாட்டுக்கு நல்லது. 

காங்கிரசில் நேரு குடும்பத்தை தவிர்த்து பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி, பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய்பி றநாட்டுக் குடியுரிமை பெற்றிருந்ததால் சோனியா பிரதமராக முடியாது என்ற எதிர்ப்பு எழுந்ததின் காரணமாக சோனியாவின் பிரதிநிதியாக மன்மோகன் சிங் பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சாமானியன், நேர்மையானவன் என்று சொன்ன மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் நீடிக்க முடியவில்லை. விபிசிங், தேவகவுடா, ஐ.கே. குஜ்ராலாலும் அப்பதவில் செயல்பட முடியவில்லை. இது கடந்த கால வரலாறு.
 
ஒரு சாமானியன் இந்தியப் பிரதமர் ஆவது எளிதான விடயம் அல்ல. இதையெல்லாம் புரிந்து கொண்டு அரசியலைப் பேச வேண்டுமே ஒழிய, ஒரு புள்ளியை வைத்துக் கொண்டு ஏதோ ஆதரவு இருக்கின்றது என்பதற்காக எதையும் பேசிவிட்டுச் செல்வதில் நியாயங்களும் கிடையாது. ஜனசக்தி என்ற மக்கள் குரல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். அப்படியில்லாமல், நியாயத்தின் பக்கம் இல்லாமல், பெருவாரியான குரல்கள் அநியாயத்தை ஆதரிக்கிறது என்றால், அந்த பிரஜா சக்தியின் குரல் மக்கள் குரல் அல்ல; மாக்கள் குரல். அது ஜனநாயகத்துக்கும் உகந்ததல்ல.

இந்தியாவின் தேர்தல் அரசியல் களத்தில் தனிநபர்களின் மீதான பக்தியும் மோகமுமே சாதி-மத வாதங்கள் வாக்குகளாக மாறுகின்றன.  ஓட்டுக்கள் விற்பனை, தனிமனித துதிகள், பண பரிவர்த்தனை -வியாபார லாப அரசியல் என்ற நிலை….

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
26-3-2023.

#அன்றைய விசாலமான வீடுகள்

#அன்றைய விசாலமான வீடுகள்…. 
————————————————————-
கடந்த 1970 கள் வரை இம்மாதிரி வீடுகள் விசாலமாக இருக்கும். மின் விசிறிகள் இல்லையென்றால் கூட, எங்கள் பகுதியில் குற்றாலம் சீசன் காற்று, ஜன்னல் வழியாகத் தவழ்ந்து வரும். இப்பெரிய வீடுகளில் குறைந்தபட்சம் எட்டுப் பேர்களாவது இருப்பார்கள். இன்றைக்கும் இம்மாதிரி வீடுகளைக் கிராமப்புறங்களில் பார்க்கக் கூடிய நிலை உள்ளது. இவையெல்லாம் நூறாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகளாகும்.
























 
சிமெண்ட் கருங்கல் கலவையில் இன்றைக்கு கான்கிரீட் போடுகிறோம். அன்றைக்கு தேக்குமர கட்டைகள் மூலம் ஒழுங்காக, அழகாக மட்டப்படுத்தி அதைச் சுவருக்கு மேல் வைத்து வீட்டின் மேல்தளத்தை செங்கல்கள் சுண்ணாம்பு வைத்து தார்சு குத்தி சுத்துவார்கள். கடுக்காய் நீரை அப்போது கலக்கி மாடி தளம் அமைப்பது உண்டு.
 
வீடுகளின் சுவர்களைப் பூசுவதற்கு சிமெண்ட் கிடையாது. சுவரைப் பூசுவதற்கு சுண்ணாம்பை பெரிய அம்மியில் வைத்து அரைத்து அதை வைத்து சுவரை மட்டமாகப் பூசி வெள்ளையடிப்பதும் உண்டு.
 கல் கட்டடமோ, செங்கல் கட்டடமோ கட்டுவது என்றால் சுண்ணாம்புக் கல்லை வட்டமான வடிவத்தில் போட்டு, அதற்கு மேல் ரோடு ரோலர் மாதிரி ஓர் உயரமான உருளையை வைத்து, அதை மாட்டை கட்டி இழுத்து சிமிண்ட் போல கலவையாக்கி கருங்கல்லையோ செங்கல்லையோ வைத்து 70 முதல் 75 வரை கட்டுவது வாடிக்கையாக இருந்தது. உயரமான சுவர்களில் பெரிய சன்னல்களும் இருக்கும். பாட் என்ற செவ்வக வடிவ சின்ன சன்னல்களும் இருக்கும்.
 
இந்தப் படத்தில் உள்ளவாறு குறுகிய படிகள் மேல்தளத்திற்குச் செல்லும். கீழ்தளம், மேல்தளம், மொட்டை மாடி இருக்கும். இன்றைக்கு உள்ளதைப் போல தண்ணீர் டாங்குகள் மொட்டை மாடியில் இல்லை. வீட்டிற்குப் பின்புறம் கிணறும் குளியலறையும் இருக்கும். 
வீட்டுக்குப் பின்புறத்தில் வெந்நீர் போட அடுப்பின் மேல் பெரிய கொப்பரையை வைத்து அடுப்பை எரிப்பார்கள். 

மண் பானை விறகு சமையல், இட்லி, தோசை மாவை அரைக்க உரல், சட்னி, துவையல் அரைக்க அம்மி, வீட்டிலேயே தோட்டத்தில் உற்பத்தியான எள்ளில் நல்லெண்ணெய் என எதையும் நாடாமல் கடந்து வந்த நாட்களைத் திரும்பித்தான் பார்க்க முடியுமே தவிர, திரும்பப் பெற முடியாது. 

வீட்டின் முன் வராந்தாவில் உயர்ந்த தேக்குமரம், கல் என அகலமான தூண்கள், பெரிய வாசல் கால்கள், கதவுகள், பிரமாண்டமான வேலைப்பாடு அமைந்த கதவுகள்,  வீட்டின் உள்ளே மர இரும்பு உத்திரங்கள்,  ஆர்ச் வளைவான வராண்டா, ஆர்ச் வளைவான ஜன்னல்கள், வீட்டின் முகப்பில் மூன்றடிக்கு மூன்றடிக்கு இரண்டு பக்கமும் திண்ணைகள், சமையல் அறை எப்போது தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும். டைனிங் டேபிள் இல்லாமல் நீண்ட பந்திப் பாய்கள், வாழை இலைச் சாப்பாடு, வாரத்துக்கு இருமுறை எண்ணெய்க் குளியல். வீட்டில் அரைத்த சீயக்காய், மணம் வரும் காபி பவுடர், சில காப்பித் தூள்களில் சிக்கரி கலந்திருக்கும். மர்பி ரேடியோ பிலிப்ஸ் ரேடியோ என பெரிய பெரிய ரேடியோக்கள், மடக்குக் கட்டில்கள், நார் பின்னிய கட்டில்கள், ஈசிச் சேர் போன்ற சாய்வு நாற்காலிகள், பணம்,நகை வைக்க இரும்பு பெட்டிகள் ஒரு பக்கம். பருத்தி, மிளகாய், தானியங்கள் என விவசாய உற்பத்தி பொருள்களை வைக்க தனித்தனி கிட்டங்கி அறைகள். 

புத்தகங்களை அடுக்கி வைக்க மர அலமாரிகள். அந்தக் கால மேஜை, நாற்காலிகள் வித்தியாசமாக இருக்கும் என்பதெல்லாம் இந்தப் படங்களைப் பார்த்தவுடன் நினைவுகளில் வந்து செல்கின்றன. 

அந்த வீடுகளில் சந்தோசமாக வாழ்ந்த உறவுகள், உற்றார் உறவினர்கள் வருகைகள், தொடர்புகள் குறைந்துவிட்டன. அந்த வீடுகள் மட்டும் இப்போது உள்ளன. வீடுகளில் இரண்டு மூன்று பேர் வாழ்கிறார்கள். வீடுகள் சிதிலமடைந்துவிட்டன. இந்த வீடுகள் உள்ள கிராமப் பகுதிளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்லும் போது மலரும் நினைவுகளாக நெஞ்சில் இனிக்கின்றன.
 கிராமத்தில் இருக்கும்போது சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று துடித்த நெஞ்சம், ஏன் கிராமத்தைவிட்டு வந்துவிட்டோம், ஒரு விருந்தாளியைப் போல கிராமத்துக்குச் செல்ல வேண்டி இருக்கிறதே என்ற மனத்தாங்கல் அடிக்கடி ஏற்படுகிறது.

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
26-3-2023.


Saturday, March 25, 2023

அடிமையாக இல்லாமல் சுதந்திரமான மனம் போல வாழ்வு .

எதிர்பார்த்தது நடக்கவில்லை
இன்றைய  brokerage காலத்தில்……       
நடக்காது…                           
 பட்,நன்மைக்கே.               அடிமையாக இல்லாமல் சுதந்திரமான மனம் போல வாழ்வு .

#KSR_Post
25-3-2023.    


#இன்றைய அரசியல்களம் #இப்படியாக நீ ஒரு தலைவன்.



———————————————
உன் தவறை பொது வெளியில்  மற்றும்
social media , தொலைக்காட்சி விவாதங்களில் சரிதான் என குரலோங்க உரக்கப் பேசி,உறுதியாக நியாயப்படுத்
தவும் உனக்காக வக்காலத்து வாங்க எத்தனை பேரைச் (இன்றைய மக்கள் சக்தி) சம்பாதித்து வைத்திருக்கிறாயோ அந்தளவுக்கு நீ  இன்றைய பாசாங்கு அரசியல் வெற்றியடைந்தவன் என்று பொருள். இப்படியாக நீ ஒரு தலைவன்.

#இன்றைய_அரசியல்களம் 
#இப்படியாக_நீ_ஒரு_தலைவன்.

#KSR_Post
25-3-2023.

கச்சத்தீவு

#கச்சத்தீவில்  அரச மரங்கள் நடப்பட்டு புதியாக புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்  நிர்மலநாதன் நேற்று (23-3-2023) கூறியுள்ளார். இந்த #பௌத்தமயமாக்கல் விவகாரத்தை இலங்கை செய்திதாட்களும் அம்பலப்படுத்தியுள்ளன.

#கச்சத்தீவு

#KSR_Post
25-3-2023.


‘கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொள்ளும்போது கொள்ளு தாண்டி செல்லும்போது செல்லடி….’ *** விநாசகாலே விபரீத புத்தி - ஜெயபிரகாஷ் நாராயணன் (during Emergency time )




விநாச காலே விபரீத புத்தி’ என்றால் என்ன பொருள்? ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர். அதாவது கனியன் பூங்குன்றன் புறநானூற்றில் செப்பியது போல ‘தீதும் நன்றும் பிறர்தரா வாரா’. அதாவது நமக்கு நாமே நன்மையும் செய்து கொள்ளலாம். தீங்கும் இழைத்துக் கொள்ளலாம்.

விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் – என்பதே ‘விநாச காலே விபரீத புத்தி’யின் பொருள்.

#KSR Post
25-3-2023.

Friday, March 24, 2023

Today 24-3-2023, Mamallapuram, (Mahabalipuram) en route to Pondicherry. #KSR_Post 24-3-2023.

Today 24-3-2023, Mamallapuram, (Mahabalipuram) en route to Pondicherry.

#KSR_Post
24-3-2023.


#தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ்... ஆளும்இந்திராகாங்கிரஸ்... #சென்னை கடற்கரையில் காங்கிரஸ இணைப்பு விழா... 1976 #என்னுடைய மாணவர் காங்கிரஸ் அனுபவங்கள்… அன்றைக்கு உண்மையாகவே இந்திராகாந்தியை ஆதரித்தவர்கள் யார் ?

#தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ்... 
ஆளும்இந்திராகாங்கிரஸ்...  
#சென்னை கடற்கரையில் காங்கிரஸ இணைப்பு விழா... 1976
#என்னுடைய மாணவர் காங்கிரஸ் அனுபவங்கள்… 
அன்றைக்கு உண்மையாகவே இந்திராகாந்தியை ஆதரித்தவர்கள் யார் ? #Congress(o)Congress(r)merger in Tamilnadu,1976
—————————————
நேற்று,தூத்துக்குடி இந்திராகாந்தி பங்கேற்ற வ.உ.சி. குறித்தான நிகழ்வுகளை பதிவு செய்திருந்தேன்.   அதற்குப் பின் அவசரநிலை காலத்தை இந்திராகாந்தி அறிவித்தார். 



பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் ஒன்று பட வேண்டும் என்று விரும்பினார். கோவை மேற்கு சட்டமன்றத் தேர்தலிலும்,  புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி இடைத் தேர்தலிலும்  (1972 ) காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும்,  இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதும் உண்டு. அப்போது இந்திராகாந்தியும், காமராஜரும் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்ததெல்லாம் உண்டு. அரியாங்குப்பம் தொகுதியில் புருஷோத்தம ரெட்டியார் வெற்றி பெற்றார். 
 
பாலக்காட்டை சேர்ந்தவர் சங்கரநாராயணன். பிற்காலத்தில் மாகராஷ்டிரா ஆளுநராக ஆனவர். தமிழ்நாட்டில் அவர் யாருக்கும் அறிமுகம் இல்லை. ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்தவர்களும் இந்திராகாந்தி தலைமையில் உள்ள ஆளும் காங்கிரஸைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் இணைய  விரும்புகிறார்களா என்ற கருத்தை அறிந்து வர பெருந்தலைவர் காமராஜர், சங்கர நாராயணனை தமிழகம் முழுவதும் அன்றைக்கு அனுப்பி வைத்தார். பொதுமக்கள், ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகிகள், ஆளும் இந்திரா காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அவர் விசாரித்து அறிக்கை தர வேண்டும். பலருக்கும் தமிழகத்தில் அறிமுகம் இல்லாத சங்கரநாராயணனுடன் சென்று சங்கரநாராயணன் அளித்த அறிக்கையில் இரு காங்கிரஸ் கட்சிகளும் இணைவதுதான் நல்லது என்று கூறியதும் உண்டு.
 
இச்சூழலில் காமராஜர் 1975 அக்டோபர் 2 - இல் காலமானார். அன்றைக்கு ஸ்தாபன காங்கிரஸில்  (பழைய காங்கிரஸ் என்பார்கள்) பா.ராமச்சந்திரன் தலைவர், பழ. நெடுமாறன், குமரி அனந்தன், திண்டினவனம்ராமமூர்த்தி,தண்டாயுதபாணி  மாநில பொதுச்செயலாளர்களாக இருந்தார்கள். ஆனால் இணைப்பை பா.ராமச்சந்திரனும் குமரி அனந்தனும், தண்டாயுதபாணியும் ஏற்றுக் கொள்ளாமல் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடர்ந்தார்கள். 

பழ.நெடுமாறன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து - திருத்தணியிலிருந்து கன்னியாகுமரி வரை - கிழக்கே நாகப்பட்டினம்- கடலூரிலிருந்து கோவை வரை - குறுக்கு வெட்டாகத் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் இணைப்புக்கு ஆதரவு திரட்டினார். சில இடங்களுக்கு திண்டிவனம் ராமமூர்த்தியும் வந்திருந்தார். 

அன்றைக்கு ஜி.கருப்பையா மூப்பனார் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின்  ஸ்தாபன காங்கிரசின் தலைவர்.  இவ்வாறு தமிழகம்  முழுவதும்  காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரசாரத்தை மேற்கொண்டு பிப்ரவரி 15,1976 – இல் இரண்டு காங்கிரஸ் இணைப்பு விழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. 
 
இந்த இணைப்புக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக  பழ.நெடுமாறன், முன்னாள் பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன், ஏ.பி.சி.வீரபாகு, மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன்,  மகாதேவன் பிள்ளை ஆகியவர்களில் யாராவது ஒருவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் சி.சுப்பிரமணியம், மரகதம் சந்திரசேகர் போன்றவர்கள் கருப்பையா மூப்பனார்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வர வேண்டும் என்று ஒரே பிடியாக இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜி.கருப்பையா மூப்பனார் பெயரை இந்திரா காந்தி அறிவிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தினார்கள். இதற்கு சிவாஜி கணேசனும் ஒரு காரணமாக இருந்தார். 
மேடையில் ஜி.கே.மூப்பனார் பெயரை அறிவிக்கும்போது, கவிஞர் கண்ணதாசன், ‘மூப்பனார்  ராங்க் சாய்ஸ்’ என்று சொன்னதை அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நானும் கேட்டதுண்டு. அதையே  ‘நான் பார்த்த அரசியல் ’ என்ற புத்தகத்தில் கண்ணதாசன் பதிவு செய்துள்ளார். 
 
அன்றைக்கு பழைய காங்கிரஸிலேயே தங்கிவிட்டவர்களாக பா.ராமச்சந்திரன், பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ஜி கருத்திருமன், முகமது இஸ்மாயில், குமரி அனந்தன், பொன்னப்ப நாடார், தண்டாயுதபாணி, ஜேம்ஸ் என பல தலைவர்கள் இருந்தார்கள். 

இந்திரா காங்கிரஸில் பழ.நெடுமாறன், திண்டிவனம் ராமமூர்த்தி, கருப்பையா மூப்பனார், செல்லப்பாண்டியன், ஆர்.வி.சுவாமிநாதன், தஞ்சை ராமமூர்த்தி, எம்.பி.சுப்பிரமணியம், வாழப்பாடி ராம்மூர்த்தி என பலர் உண்டு. ப.சிதம்பரம், சி.சுப்பிரமணியத்தின் தொடர்பால், இந்திரா காங்கிரசில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பிலிருந்தார். இப்படி ஒரு நீண்ட பட்டியல் உண்டு. ஈ.வெ.கி சம்பத்தும் இந்தப் பட்டியலில் முதன்மையானவர். 
 
அன்றைக்கு காமராஜர் பெயர் சொல்லி அழைத்தவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி எண்ணும்போது நெடுமாறன், குமரி அனந்தன், எஸ்.பாலசுப்பிரமணியம், பழ.கருப்பையா, தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ், நாமக்கல் சித்திக், மதுரை சிதம்பர பாரதி என்று ஒரு சிலரே நினைவுக்கு வருகின்றனர். இந்தப் பட்டியலில் அடியேனுக்கும் ஓர் இடம் உண்டு. 
 
இந்திராகாந்தியின் ஆதரவு பெற்ற சஞ்சீவ ரெட்டி, 1969 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வி.வி.கிரி அவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு ஸ்தாபன காங்கிரஸுக்கும் இந்திரா காங்கிரஸுக்கும் முரண்பாடுகள் இருந்தன. அப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் இவ்வாறாக இணையும்நிலை ஏற்பட்டது. இவற்றைக் குறித்து விரிவாக எனது நினைவுகளைப்  பதிவு செய்துள்ளேன்.

காங்கிரஸ் 1969 - இல்  பிளவுபடும்போது காமராஜர், நிஜலிங்கப்பா, எஸ்.கே. பாட்டீல், அதுல்யா கோஷ், மொரார்ஜி தேசாய், தாரகேஸ்வரி சின்ஹா, பிஜு பட்நாயக் (பின் Utkal Congress) போன்றோர்  இந்திராவைப் புறக்கணித்துவிட்டு ஸ்தாபன காங்கிரசில் தொடர்ந்தனர். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் பலமாக இருந்தது. இந்திரா தலைமையிலான காங்கிரசில் சி.சுப்பிரமணியம், பக்தவத்சலம்,  ஓ.வி.அழகேசன், மரகதம் சந்திரசேகர், தமிழக முன்னாள் அமைச்சர் ராமையா போன்ற ஒரு சில தலைவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த காலகட்டத்தையும் தமிழக காங்கிரஸையும் குறித்து 1974 இல் இருந்து 78 வரை தற்போதுயாரும் அதிகமாக பேசுவதுமில்லை. எழுதுவதுமில்லை. அதைப் பற்றிய தெரிதலும் புரிதலும் இல்லை என்பது வேதனையான செய்தியாகும். 

இவ்வாறு 1976 – இல் கடற்கரையில் நடந்த இணைப்பு விழாவைப் பற்றியும் அதன் முன் நடந்த திரைமறைவான நிகழ்வுகள் பற்றி எல்லாம் என்னுடைய நினைவுகளில் பதிவு செய்துள்ளேன். எப்படி கருப்பையா மூப்பனார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன். அவசரநிலை காலத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா தோல்வி அடைந்தார்.  அன்றைக்கு இந்திராவை ஆதரிக்க சி.சுப்பிரமணியம், ஜி.கே.மூப்பனார், சிவாஜிகணேசன் போன்றோருக்கு தயக்கம் இருந்தது. 
 டில்லியில் டிசம்பர் குளிரில் இந்திராகாந்தி மீது நம்பிக்கை கொண்டிருந்த அவருக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் இந்திராவை ஆதரித்த தீர்மானத்தை அண்ணன் பழ.நெடுமாறன்தான் முன்மொழிந்தார். இந்த நிகழ்வுக்கு அண்ணன் ஆர்.வி.சுவாமிநாதன், வாழப்பாடி ராமமூர்த்தி, எம்.சுப்பிரமணியம், அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி ஆகிய பலரோடும் நானும் கலந்து கொண்டேன். இன்றைக்கும் அவை நினைவில் உள்ளன. இந்திராவை ஆதரிக்கும் அந்த மாநாட்டைப் புறக்கணித்தவர்களில் கருப்பையா மூப்பனார், ப.சிதம்பரம் என பலருமுண்டு. இப்படியான மனிதர்கள்தான் அரசியல்கட்சிகளில் ஏதோ ஒரு வகையில் மேலும் கீழும் விழுந்து இடம்  பிடித்து விடுகிறார்கள். இவ்வளவு உழைத்தும்  1979 இலேயே காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டோம் என்பது வேதனையான செய்தி.

1976 India Today Article on Indira Gandhi in Madras - 
It was as if the entire population of the Madras metropolis had emptied itself on the sands of Marina Beach.
In a mammoth gathering, the likes of which the city has not seen in recent years, over one million people thronged Marina Beach here on the evening of 1976,February 15 to hear Prime Minister Indira Gandhi. The occassion was the Congress Unity Conference, a meeting jointly arranged by Tamil Nadu units of the Congress and Cong(O) to mark the merger of the two organizations in the state. 

It was a vast sea of humanity and all one could see were swarms of people moving towards the specially erected platform from where Mrs. Gandhi addressed the crowds for over an hour. 
Although the Prime Minister was due to address the crowd only at 6 p.m. the scores of enclosures that had been put up to accommodate people were full as early as mid-day. Unable to control the surging crowds, the police on more than one occassion had to, resort to a show of force.

An estimated ten thousand trucks and buses had brought thousands of people to the Marina from all over Tamil Nadu and neighbouring states.
The crowds repeatedly cheered the Prime Minister as she mounted the dias and waved to the mass of humanity that had assembled there. Flashing party flags and holding placards the million-strong crowd applauded the Prime Minister as she spoke of the misdeeds of the DMK government. 
Mrs. Gandhi was lustily cheered as she referred to the efforts that have been under taken to implement the new economic programme announced following the imposition of the emergency.

As the meeting wound up, all that one could see was broken barricades, bits of torn paper and millions of foot prints on the sands of Marina.

#தமிழகத்தில்_ஸ்தாபன_காங்கிரஸ்... 
#ஆளும்இந்திராகாங்கிரஸ்...  
சென்னை கடற்கரையில் #காங்கிரஸ்_இணைப்பு_விழா... #என்னுடைய_மாணவர்_காங்கிரஸ்_அனுபவங்கள்… 
அன்றைக்கு உண்மையாகவே #இந்திராகாந்தியை_ஆதரித்தவர்கள் யார் ?

#congress_o_congress_r_merger_in_tamilnadu_1976

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
24-3-2023.


Thursday, March 23, 2023

#Kanyakumari



#Kanyakumari

#தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர்... #இந்திராகாந்தி... #வஉசி பிறந்தநாள் விழா... #வஉசிகல்லூரி.... #செருப்பு வீச்சுகள்... #என்னுடைய மாணவர் காங்கிரஸ் நாட்கள்.



—————————————
 
கடந்த 20.03.2023 அன்று தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர் பக்கம் சென்றிருந்தேன். 2002 - இல் சார்லஸ் தியேட்டர் மூடப்பட்டது என்று நினைவு. 
   
கடந்த 1955 - இல் கட்டத் தொடங்கி 1958 இல் 1383 இருக்கைகளோடு உருவாக்கப்பட்ட  இந்த திரைக்காட்சியகத்தில், ‘எங்கள் வீட்டு மகாலட்சுமி’ திரைப்படம் முதன்முதலாகத் திரையிடப்பட்டுதொடங்கப்பட்டது.
அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி இருந்தது. 

தென்தமிழகத்தில்  மதுரை தங்கம் தியேட்டருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர் பெரிய திரைக்காட்சி அரங்கமாகத் திகழ்ந்தது. 
  
இன்றைக்கு (23.03.2023) தினத்தந்தியில் இது குறித்தான பத்தி வெளிவந்துள்ளது. அதைப் படித்ததும் எனக்கு 1972  கால கட்டத்தின் பழைய நினைவுகள் கண்முன் வந்தன. அப்போது ஸ்தாபன காங்கிரஸின் மாணவர் நிர்வாகிய நான் இருந்த நேரம். இந்‌திராகாந்தி எங்கள் மாவட்டமான திருநெல்வேலிக்கு, குறிப்பாக தூத்துக்குடிக்கு 05.09.1972  அன்று வருகை தந்தார். 
 
வ.உ.சி. பெயரில் இன்றைக்கு இருக்கும் தூத்துக்குடி துறைமுகவிழா நடந்தது. இதில் வ.உ.சி. தபால்தலையை வெளியிட்டு இந்திராகாந்தி நிறைவுரை ஆற்றினார். அதன் பின் வ.உ.சி. கல்லூரி வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்த கல்லூரியின் தாளாளர்  ஏ.பி.சி.வீரபாகு,  எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர். அன்றைய இந்திரா காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டியின் தலைவர். 
 பின் சார்லஸ் தியேட்டரில் இறுதி நிழ்ச்சியாக இந்திரா காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் இந்திரா காந்தி கலந்து கொண்டார். 

தமிழ்நாட்டில் திருநெல்வேலி - பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியின் மாணவர் லூர்து நாதனை தாமிரவருணி ஆற்றில் கவால்துறையினர் தள்ளிவிட்டு கொன்றுவிட்டனர் என்பதற்காக நடந்த  மாணவர் போராட்டம், திருச்சி செயின்ஜோசப் கல்லூரி கிளைவ் ஆஸ்டலில் மாணவர் போராடியபோது, போராடிய மாணவர்களைகாவல்துறையினர் அத்துமீறி அடித்து துவம்சம் செய்ததை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலையைக் கண்டித்த மாணவர் போராட்டம் என முன்னும் பின்னும் பல போராட்டங்கள் நடந்த நேரம் அது. இந்த மூன்று நிகழ்வுகளுக்காகவும் மாணவர் போராட்டம் தமிழ்நாடெங்கும் அன்றைக்கு வெடித்தது. சட்டமன்றத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனக் குரல்களை எழுப்பின. இந்த மாணவர் போராட்டங்களில் பல்வேறு களப்பணிகளை நான் ஆற்றினேன். 

பாளையங்கோட்டை மாணவர் லூர்துநாதன் சாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோதண்டராம ராஜா தலைமையில் நீதி விசாரணையையும், திருச்சி கிளைவ் ஹாஸ்டல் சம்பவத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி குப்பண்ணா தலைமையில் நீதி விசாரணையையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலைக்கு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.எஸ்.ராமசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனையும் தமிழக  அரசு அமைத்தது. இந்த மூன்று நீதி விசாரணைகளிலும் நான் பங்கேற்ற நினைவுகள் எல்லாம் இன்றைக்கு உள்ளன. 

தினத்தந்தியில் இன்றைக்கு வந்த செய்தியால் பழைய நினைவுகள் எல்லாம் கண்ணில் ஆடின. வ.உ.சி. கல்லூரியில் 05.09.1972  - இல் நடந்த நிகழ்வில் பிரதமர் இந்திரா, அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் உடன்சி.பா.ஆதித்தனார், ஏ.பி.சி.வீரபாகு என பலர் கலந்து கொண்டனர். மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் மதியம் இரண்டே கால் மணியளவில் கலைஞர் பேசும்போது, கலைஞர் மீது செருப்புகள் சரமாரியாக வீசிய நிகழ்வும் நடந்தது. அன்றைக்கு மாணவர்கள் போராட்டம், விவாசாயிகள் போராட்டம், விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு என்ற நிலையில் அன்றைய தமிழகம் கொதிநிலையில் இருந்தது என்பதை மறக்க முடியாது.  
  
திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் கொல்லப்பட்ட மாணவர் லூர்துநாதனுக்கு இந்த காலத்துக்குப் பின் நாங்கள் எல்லாம் சிலை எடுத்து பாளையங்கோட்டை தெற்கு பஜார் மேற்குமுனை மனக்காவலம் பிள்ளை சாவடியில் சிலை வைத்தோம். இதைப் பெருந்தலைவர் காமராஜர் திறந்த வைத்தார். அந்த நினைவுள் எல்லாம் உள்ளன. இன்றைக்கும் அந்த சிலை அனைவரின் பார்வையில் படக் கூடிய நிலையில் அன்றே எழுப்பினோம். இப்படியெல்லாம் பழைய செய்திகள்.
 
அன்றைக்கு இந்திராகாந்தி கலந்து கொண்ட கட்சி ஊழியர் கூட்டத்துக்கு தூத்துக்குடியில்  இடம் கொடுத்தது சார்லஸ் தியேட்டர் சேவியர் மிசியர். பலருக்கும் இந்த வரலாறெல்லாம் இன்றைக்குத் தெரியக் கூடிய வாய்ப்பு இல்லை. வெறுமனே 1995க்குப் பிறகான வரலாறையே பொதுவெளியிலும் இணையத்திலும் எந்தவித வாசிப்பும், புரிதலும், யோசித்தலும் இல்லாமல் எழுதி வருகின்றனர். 
 
இன்றைக்கு தினத்தந்தியில் வந்த அந்த கட்டுரையின் ஒரு பகுதி இது.  நானாகச் சொன்னால் தவறாகச் சொல்லிவிட்டேன் என்று எந்த யோசிப்பும் இன்றி, எதுவும் அறியாமல், உடனே பின்னோட்டம் போடுவதற்கு ஒரு கூட்டமும், ஒரு விங்க்கும் முட்டாள்தனமாக இருக்கும்போது, உரிய ஆதாரத்தோடு போட வேண்டிய நிலை இன்றைக்கு இருக்கின்றது. 
 
இன்றைக்கு எங்கள் வட்டாரத்தில் காங்கிரசில் நீண்டகாலமாகப் பொறுப்பிலிருக்கும் நிர்வாகி கதிர்வேல் அவர்கள் இதைக் குறித்துப் பேசியுள்ளார். அது தினத்தந்தியில் (23.03.2023) வெளிவந்திருக்கிறது. அது வருமாறு:
 "காங்கிரஸ் கட்சியானது ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று இரண்டாக பிரிந்து இருந்த சமயம். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் காமராஜரின் தலைமையை ஏற்று ஸ்தாபன காங்கிரசில் இருந்தனர். தமிழ்நாடு இ.காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏ.பி.சி.வீரபாகு இருந்தார். நகர இ.காங்கிரஸ் தலைவராக குழந்தை என்பவர் இருந்தார். நான் உதவித் தலைவராக இருந்தேன். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் பிரதமர் இந்திராகாந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கருணாநிதி பேசும்போது கூட்டத்தில் செருப்பு வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கூட்டத்தை முடித்த பிறகு பிரதமர் இந்திரா காந்தி மாலையில் சார்லஸ் தியேட்டரில் நடந்த இ.காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். 
 
அந்த ஊழியர் கூட்டம் ஸ்தாபன காங்கிரசுக்கும், காமராஜருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் இந்திரா காங்கிரசின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், காங்கிரசாரை ஒருங்கிணைக்கும் வகையிலும் அந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க இந்திரா காந்தி வந்தார். தியேட்டர் முன்பு அவருக்கு சேவாதள தொண்டர்களின் எழுச்சிமிகு அணிவகுப்பு நடந்தது. அதனை உற்சாகமாக ஏற்றுக் கொண்ட பிரதமர், ஊழியர் கூட்ட அரங்கிற்கு வந்தார். அவர் மிகவும் எளிமையாக இருந்தார். அவரை பார்த்ததும் காங்கிரசார் கைகளைத் தட்டியும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் அனைவரும் தலா 5 நிமிடங்கள் மட்டுமே பேசினர். அதன் பிறகு பிரதமர் இந்திராகாந்தி காங்கிரஸ் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி பேசினார். அப்போது, காமராஜர் முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து சிண்டிகேட் அமைத்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார்" 
இவ்வாறு கடந்த நிகழ்வுகளை கதிர்வேல் நினைவு கூர்ந்தார். 
https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/indira-gandhi-came-925925

#தூத்துக்குடி_சார்லஸ்_தியேட்டர்... #இந்திராகாந்தி... 
#வஉசி_பிறந்தநாள் விழா... #வஉசிகல்லூரி.... 
#செருப்பு_வீச்சுகள்... 

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
23-3-2023.

தொலைக்காட்சி விவாதங்கள்….

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி விவாதங்களுக்கு நான் செல்வதும் இல்லை. அதில் ஆர்வமும் இல்லை. 

புதுச்சேரி கம்பன் கலையரங்கில்  நாளை,24.03.2023 அன்று இரவு 7.00 மணிக்கு மாநில ஆளுநரைக் குறித்து நடைபெறும்  ‘புதிய தலைமுறை - வட்ட மேசை விவாதம்’ நிகழ்வுக்கு அவசியம் வர வேண்டும் என்று ஊடகநெறியாளர்திருஜி.எஸ்.வேங்கடப்
பிரகாஷ் அழைத்தார். மாநில கவர்னர்கள் குறித்து வரலாற்றுரீதியான பார்வையில் உங்களால்தான் பேச முடியும்; அவசியம் வர வேண்டும்  என்று   அவர் அழைத்த காரணத்தால் இந்த நிகழ்வில் அரசியலாளர் என்ற நிலையில் பங்கேற்கிறேன். 

என்னைப் பொருத்தவரை,தொலைக்காட்சி விவாதங்கள்,   அரசியல்ரீதியாக விழிப்புணர்வையும் எந்த தாக்கத்தையும் உருவாக்கப் போவதில்லை என்ற கருத்தில் தெளிவாக உள்ளேன். தினமும் நடக்கும் தொலைக்காட்சி    விவாதங்களில்  பங்கேற்பது இல்லை என நிலைப்படு உண்டு.

#கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
23-3-2023.

என்னைப்பற்றிய கதைகளை அவர்கள் காதுகள், வாய்கள் மூலம் எங்கெங்கோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்...KSR

என்னிடம் முகம் கொடுத்து பேசாத மனிதர்களும் உண்டு.
என்னை அவசியமற்று வெறுத்து ஒதுக்கும் மனங்களும் உண்டு.
அப்பட்டமாக மொழியும் என் சுயசரிதை  வார்த்தைகளை புறந்தள்ளிவிட்டு  என்னைப்பற்றிய கதைகளை அவர்கள்  காதுகள், வாய்கள் மூலம் எங்கெங்கோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.....


விஜயநகரசாம்ராஜ்யம்குறித்து சல்மான்ருஷ்டியின்_ஆங்கிலபடைப்பு

#விஜயநகரசாம்ராஜ்யம்குறித்து சல்மான்ருஷ்டியின்_ஆங்கிலபடைப்பு
#ஹம்பி #தமிழ்சொற்கள்

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
23-3-2023.

https://youtu.be/bjrgsT_q70w

Wednesday, March 22, 2023

#யாழ் ஆறுமுகநாவலர். Arumuga Navlar - Jaffna

இன்றைய (22-3-2023)தினமணியில்
#அறிஞர் பெருமான் ஆறுமுகநாவலர் என்ற எனது கட்டுரை வெளிவந்துள்ளது

#யாழ் ஆறுமுகநாவலர்.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழரசுக் கட்சி தலைவரும் நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சகோதர்ர்  மாவை சேனாதிராஜா  கடந்த வாரம் ஆறுமுக நாவலருடைய சிலையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, திருக்கேதீச்சரம், சம்பூர், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை வளாகம் ஆகிய இடங்களில் நிறுவியுள்ளதாக 01.03.2023 அன்று தெரிவித்தார். 

இருமுறை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள ஆறுமுக நாவலர் பூர்வீக வீட்டிற்கு நான் சென்ற போது, இடிபாடான முட்டுச் சுவர்களாகவே அது காட்சியளித்தது. அங்கே ஆறுமுகநாவலரை நினைவில் சொல்லக் கூடிய அளவில் அவருடைய முழு உருவப் படம் கூட இல்லாமல் இருந்தது வேதனையை ஏற்படுத்தியது. 

சைவமும் தமிழும் வளர்ந்த மண் ஈழம். அங்கு தற்போது 360சிறு, நடுத்தர, பெரிய சைவ கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை நானே நேரில் சென்றபோது அறிந்தேன்.

நாவலர் என்று சொன்னால், அது  யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்தான். இவருக்குப் பின் நாவலர் சோமசுந்தர பாரதி. இதற்கு பின் மற்றவர்கள்  தங்களை ஒப்புக்கு நாவலர் என்று போட்டுக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

இலங்கையும், இந்தியாவும் ஐரோப்பியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இலங்கையில் சைவ சமயம் அந்நிய ஆட்சியின்போது சிறிது நலிவுற்றிருந்தது. அந்த காலகட்டத்தில் தோன்றியவர் தான்  ஆறுமுகநாவலர். 

இலங்கைக்கு வணிக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர், தமது  அரசியலாதிக்கத்தை ஏற்படுத்தவும், தமது சமயக் கொள்கையை பரப்பவும் எண்ணம் கொண்டனர். அதற்காக அவர்கள் கல்வி வழிப் பிரசாரம் செய்தனர். அதில் ஈடுபாடு கொண்ட மக்கள் தங்களுடைய சமய, கலாசார வழிகளை மறந்து வாழத்  தலைப்பட்டனர். 

இந்த நிலையில் சைவத்தையும் தமிழ்க் கல்வியையும் மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்தவர்தான் ஆறுமுக நாவலர்.  

கிறித்துவப் பாதிரிகளின் கல்விக் கொள்கையில் கிறித்துவத்துக்கும் கல்விக்குமிருந்த தொடர்பைப் போலவே, சைவத்தையும் கல்வியையும் இணைக்க வேண்டும் என்று ஆறுமுக நாவலர் முயற்சி செய்தார். இதுவே அவருடைய வாழ்வின் முக்கிய பங்களிப்பாக இருந்தது. 

யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 - இல்  கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை. பூட்டன் இலங்கைக்காவல முதலியார், தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர் ஆகிய அனைவருமே தமிழ் அறிஞர்கள். எல்லாருமே அரசுப் பணியாளர்கள். நாவலரின் நான்கு மூத்த சகோதரர்களும் அரசுப் பணியாளர்களே.  

ஆறுமுக நாவலரின் தொடக்கக் கல்வி அவருடைய  ஐந்தாவது வயதில் வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். அவருடைய மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர் கல்வி கற்க அனுப்பப்பட்டார். 

தமிழ் இலக்கியம், இலக்கணம், சாஸ்திரங்கள், சிவாகமங்களைக் கற்றார்.  பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று புலமை பெற்றார். 

யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த  ஆங்கிலப் பாடசாலையான வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். 1841 ஆம் ஆண்டு அவருடைய 19-வது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்றார். 

சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரிய என்ற எண்ணமே ஆறுமுக நாவலருக்குள் முதன்மை பெற்று இருந்தது. 

இவரது முதல் சொற்பொழிவு வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொற்பொழிவு ஆற்றினார். இவரது சொற்பொழிவைக் கேட்டு நிறையப் பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர். அப்படி மாறி வந்தவர்களுள் ஒருவர்தான் கிங்ஸ்பரி என்பவர். பின்னாளில் அவர் சி.வை.தாமோதரனார் என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்னும் பெருமைக்குரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. இவர் மாநிலக்கல்லூரியின் தமிழ்ப் பேராசியராகப் பணிபுரிந்தார்.  பின்னர், நாவலரைப் போல் பதிப்புப்பணியிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் ஆகியவற்றை நீக்க முயன்றார். அதற்காக அவர் 1848- ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையைத் தொடங்கினார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்தார். அதற்காக செப்டம்பர் 1848 - இல் தமது மத்திய கல்லூரி 3 பவுன் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார். 

சைவப் பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆண்டு சென்னை சென்றார்.  திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையையும் அச்சில் பதிப்பித்தார்.   ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். 

தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர் ஆறுமுகநாவரே. திருக்குறள் பரிமேலழகர் உரை திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் நூல்களையும் பிழையின்றிப் பதிப்பித்தார். 

இவரது பணி, இலங்கையில் மட்டுமன்றி, தமிழ்நாட்டிலும் பரவியிருந்தது.  சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 ஆண்டு வெளியிட்டார். பெரிய  அச்சியந்திரம் ஒன்றை வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவினார். அங்கே பல நூல்களையும் அச்சிட்டார். 

சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களிலும் தங்கி சைவப் பிரசங்கங்கள் செய்தார். அதற்குப் பிறகு 1862 பங்குனி மாதம் யாழ்ப்பாணம் திரும்பினார்.

 அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையையும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர். 

1863 இல் மீண்டும் தமிழகம் சென்று, அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார்.  

1863 இல் சென்னை வந்தபோது தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்கு வருடங்கள் தங்கினார். 

குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தைப் பாராட்டி, தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர ஆறுமுக நாவலரைப் பல்லக்கில் ஏற்றித் சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். 1864-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவினார். சிதம்பரத்தில் இவரின் பணிகள் அதிகம். அங்கிருக்கும் நடராஜரை மிகவும் பூஜித்தார்.

1866 - இல் சிதம்பரத்திலிருந்து சென்னைக்குத்  திரும்பி சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.

ஆங்கிலேயர் நிறுவிய கல்விக்கூடங்களுக்குப் பதிலாக 1870-இல் நாவலர் கோப்பாயில் ஒரு தமிழ்ப்பாட சாலையைத் தொடங்கி தமது செலவில் நடத்தினார்.  ஆனால் மக்கள், ஆங்கில ஆட்சிப் பணிகளுக்கு தமிழ்ப் பாடசாலைகளில் படித்தால் வாய்ப்புக் கிடைக்காது என்று நினைத்ததால், தங்களுடைய பிள்ளைகளைத் தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்பவில்லை. 

ஆறுமுக நாவலருக்கும் வள்ளலாருக்கும் சிக்கல்கள் ஏற்பட்டு அது வழக்குமன்றம் வரை போன பிறகும் கூட, நாவலர் அதைப் பொருட்படுத்தாமல், வள்ளலாரின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.. 

1871 - இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றதற்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 - இல் தொடங்கி நடத்தினார். ஆனால் அந்த ஆங்கிலப் பாடசாலைக்கும் தங்கள் பிள்ளைகளை மக்கள் அனுப்பவில்லை. எனவே 1876 - இல் அதுவும் மூடப்படவேண்டியதாயிற்று. 

1872 ஆம் ஆண்டு யாழ்ப்பாணச் சமய நிலை என்ற நூலை எழுதி வெளியிட்டார்.  

ஆறுமுக நாவலர் 1874- ஆம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

1875- 1878 காலகட்டத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூல் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார். 

தமிழ் உரைநடை இவருக்கு முன் மிகக் கடினமாக எளிதில் புரிந்து கொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது. ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தல் குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவலரே என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக எழுத்தறிவு பெற்றுப் புத்தகவாசிப்பில் ஈடுபடுவோரை முன்னிலைப் படுத்தியே இலக்கணத்தையும் சைவசமயத்தையும் பற்றிய பல விளக்கநூல்களை எழுதிய சிறப்பு இவருக்கே உரியது. ஆறுமுக நாவலரை ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என்று தமிழறிஞர் மு.வரதராசனார் போற்றியுள்ளார். 

பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டார். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்தார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 

ஆங்கில நூல்கள் பதிக்கப்படுவதைப் போன்றே உள்ளடக்கம், பொருள் அடைவு, பாடவேறுபாடு, அடிக்குறிப்பு ஆகிய பகுதிகளோடு சிறப்பாகப் பதிப்புச் செய்தார். பதிப்புப்பணியில் இன்று ஈடுபடுவோருக்குக் கூட வழிகாட்டும் வகையில் இவரது பதிப்புகள் அமைந்துள்ளன. 

திருத்தொண்டர் புராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டார். இவருடைய வசன நடையைப் புகழ்ந்து ஆசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவ்விதம் கூறியுள்ளார். 

“பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையை விட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி பெற்றவர் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்” என்று கூறியுள்ள கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழில் மறுமலர்ச்சி என்பதே இவராலேயே ஏற்பட்டது என்றும் கூறி உள்ளார். 

திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் கீரிமலைச் சிவன் கோவில், மன்னார், திருமலை ஆகிய கோவில்களின் தொன்மைச் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறிப் பராமரிப்பு இன்றி இருந்த ஆலயங்களை மீண்டும் புனரமைத்து உரிய பணிகளை மேற்கொண்டார்.  

போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார்.

நாவலர், மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப் பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார் என்ற கருத்தும் கூறப்படுவதுண்டு.   

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879 ஆம் ஆண்டு 57- ஆவது வயதில் மறைந்தார்.

ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971- ஆம் ஆண்டு அக்டோபர் 29- இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது. 

ஆறுமுக நாவலரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தில் அடையாளரீதியாக இவரின் சிலை அல்லது இவரை நினைவுகூரும் வகையில் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

 #யாழ்_ஆறுமுகநாவலர்.

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

#KSR_Post
முகாம்-நாகர்கோவில்
22-3-2023.
யுகாதி நாள்.


Tuesday, March 21, 2023

#கலைவாணரின் நாகர்கோவில் வீடு

#கலைவாணரின்
நாகர்கோவில் வீடு
—————————————
இன்று கோவில்பட்டியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரியில் கலைவாணர் 1941 இல் கட்டிய(பிறந்த பூர்வீக)இல்லத்துக்குச் செல்லக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. 



 கலைவாணர் திராவிட இயக்கத்தின் தூணாக இருந்தவர். பெரியார், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர். மூத்த முன்னோடி. 






 
கலைவாணர் மறைவுக்குப் பிறகு இந்த வீடு ஏலத்துக்கு வந்த போது  எம்.ஜி.ஆர் அந்த வீட்டை மீட்டு கலைவாணரின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்தார். ஆனால் இப்போது கலைவாணரின் இந்த வீட்டைப் பராமரிக்கக் கூட யாரும் இல்லையே என்று வேதனை. கலைவாணரின் இந்த வீட்டைப் புதுப்பித்து நினைவில்லமாக ஆக்கக் கூட இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு மனதில்லை. 
 
கலைவாணரைப் பற்றி இப்போது யாரும் பேசுவதுமில்லை. நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியைப் பற்றியும் யாரும் பேசுவதும் இல்லை. இவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் தூண்களாக இருந்தார்கள். 
 
இதுதான் திராவிட மாடலா? திராவிட இயக்கத்தின் முன்னோடிகளை மதிக்கக் கூடிய பண்பாடா? என்ற கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

#கலைவாணர்
#நாகர்கோவில்
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்#
#KSR_Post
21-3-2023.

Sunday, March 19, 2023

#எனது சுவடு-14 -நான் முழுக்கவே தோற்றுவிட்டேன் என்று ஒத்துக்கொண்ட பிறகும் நான் ஏன் திரும்பத் திரும்பத் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன் என்று புரியவில்லை .KSR

#எனது சுவடு-14
—————————————
நான் முழுக்கவே
தோற்றுவிட்டேன் 
என்று ஒத்துக்கொண்ட பிறகும்
நான் ஏன் திரும்பத் திரும்பத்
தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்
என்று புரியவில்லை .

நான் துயருற
அவமானப்பட
இனி எதுவும் இல்லை
என்று நினைத்துக்கொள்வதும்
ஒருவித அகங்காரமா?
துக்க அகங்காரம்.

'ஒரு மனிதனிடமிருந்து
பறித்துக்கொள்ளப் பட 
எவ்வளவோ இருக்கிறது.
ஒரு பிச்சைக்காரனிடமிருந்து கூட.

ஒருவன் இறந்தபிறகும் கூட
அவனிடமிருந்து
எவ்வளவோ பறித்துக்கொள்ளப்படலாம்.
அவனது நற்பெயர்.
அவனது புகழ்.
அவனது சாதனைகள்.

இப்போதுள்ள மனநிலையில் உண்மையை சொல்லவேண்டுமாக இருந்தால் வாழ்க்கையை பிடிக்கிறதுக்கான பெரிய காரணமோ, உந்துதலோ எதுவும் இல்லை. அதே மனிதர்கள், அதே வாழ்க்கை, மாற்றமடையாத கட்டமைப்புகள் மிகுந்த அலுப்பை தருகிறது. தொழில், பணம், அதற்குள் போட்டி, பொறாமை, புகழ், அதிகாரம், நன்றியற்ற துரோகம் இதற்கான போட்டியுடன் இப்படிப்பட்ட மனிதர்களை மட்டுமே தொடர்ச்சியாக சந்தித்து சோர்வாக இருக்கிறது.

நான் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக, நானாகவே இருக்கிறேன் என்பதை கவனித்த போது உணர்கிறேன், பயணமும், எழுத்தும் மட்டுமே உயிர்ப்போடு வைத்திருக்கிறது. பயணத்தின் வழி கண்டடைந்த மனிதர்களும், கதைகளும்தான் இந்த வாழ்வு நகர்வதற்கான காரணமாக இருக்கிறது. பயண இலக்கியங்களை நேசிப்பதற்கும், அவை தொடர்பில் தொடர்ந்து இயங்குவதற்கும் இந்த மனப்பாங்கே காரணமாக இருக்கிறது.

https://youtu.be/jmYSwrVoYNc

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

ஆசிரியர் கதை சொல்லி, 
பொதிகை-பொருநை-கரிசல்.
19-3-2023.

#வஉசி சுப்பிரமணியசிவா திருநெல்வேலிசதி வழக்கு

#வஉசி 
சுப்பிரமணியசிவா
திருநெல்வேலிசதி வழக்கு 


வழக்கறிஞர் சாது கணபதி பந்துலு. 

————————————————————
வ.உ.சிக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் திருநெல்வேலி சதி வழக்கில் முறையே 40, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையைக் குறைக்க இவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் வழக்கறிஞர் சாது கணபதி பந்துலு. இவருடைய வீடு இன்றைக்கும் நெல்லை திருநெல்வேலி சந்திப்பு வரதராஜப்பெருமாள் கோவில் தெருவில் உள்ளது. இந்த வீட்டில் பாரதி சிறிது காலம் தங்கி தனது கவிதா உலகில் உலாவி, சில கவிதைகளையும் படைத்தது உண்டு. பந்துலு வீடு, ‘பசிப்பிணி நீக்கும் மருத்துவர் இல்லம் ’ போல. யார் சென்றாலும் உணவருந்தலாம் என்ற நிலை இருந்தது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தனது சொந்த செலவில் சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்கு பந்துலு அழைத்துச் சென்றார். நெல்லை நகர் மன்றத் தலைவராக இருந்தவர். அவருடைய படம் நெல்லை நகர் மன்றத்தில் வைக்கப்படவில்லை என்பது வேதனையான செய்தியாகும். நெல்லை எழுச்சி நாளுக்கு முதல் நாள் அதாவது, 12.03.1908 அன்று பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சாது கணபதி பந்துலு சதித்திட்டம் தீட்டினார் என்று ஆங்கில காவல்துறையின் அதிகாரி காவலர் குருநாத அய்யர் மூலமாக வழக்கும் புனையப்பட்டது, இன்றைக்கு இந்த பந்துலுவின் வீட்டில் பந்துலுவின் தம்பி மகன் டாக்டர் ராஜாராம் (வயது 82 ) குடியிருக்கிறார். வ.உ.சி., பாரதி, ‘சிவம் பேசினால் சவம் எழுந்திருக்கும்’ என்று தனது பேச்சால் புகழ்பெற்ற சுப்பிரமணிய சிவா, ஓட்டப்பிடாரம் மாடசாமி, செங்கோட்டை வாஞ்சிநாதன் போன்றோர் வந்து சென்ற வீடு இது. இந்த வீட்டை திருநெல்வேலியின் அடையாளமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும்.




#வஉசி
#சுப்பிரமணியசிவா
#திருநெல்வேலிசதி_வழக்கு #வழக்கறிஞர்_சாதுகணபதி_பந்துலு.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
#KSR_Post
19-3-2023.
நன்றி- படங்கள், R Narumpu Nathan
Tirunelveli (திருநெல்வேலி)

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...