Thursday, March 16, 2023

தமிழகஅரசியல்

#தமிழகஅரசியல்
****
அரசியலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டுமா? வெற்றிகரமாக உலா வர வேண்டுமா? அதற்கு சில தகுதிகள் தேவை.  
 முதலில் கட்சி நடத்தும் குடும்ப சொந்த பந்தங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும். அவர்களில் வயது குறைந்தவர்களுக்கு செருப்பு, ஷூ தூக்கக் கூட வெட்கப்படக் கூடாது. கொத்தடிமை போல நடந்து கொள்ள வேண்டும். 
 இல்லையென்றால் ஜாதியை மையமாக வைத்து, கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.  கட்சியை வளர்த்து, குடும்பக் கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் திறமை வேண்டும். பொது வாழ்வு களப்பணிகள், மக்கள் நல அரசியல் என்பதை மறுத்து அது எல்லாம் waste என நினைக்கும் புரோக்கர்-வியாபார- பண பயர் அரசியல்…

இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலை உள்ள இக்காலத்தில் அண்ணல் காந்தியே வந்து தேர்தலில் நின்றாலும் ஜெயிக்க முடியாது. காந்தி படம் போட்ட நோட்டுகள் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். 

இங்கு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களும் சரி,  பத்திரிக்கையாளர் வேஷம் போட்டு இருப்பவர்களும் சரி, யாரும் புனிதர்கள் அல்ல.!? கடந்த 1990 களில் இப்படி கேவலங்கள் நடக்க ஆரபித்து விட்டன.

தரம், தகுதியற்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவர்கள்
முட்டுக்கொடுப்பவர்கள்
அரசியல் தொண்டரடிகள்...
நண்பர்கள் என்றாலும்                
எமக்கு தேவையும் இல்லை.
மனதளவில்…
இந் நிலையில் புன்னகைக்கும்
முகங்கள்
யாருக்கும் வெட்கமில்லை!
புதிது புதிதாக
முளைக்கிறது நியாயங்கள் (அநியாயங்கள்)!

 இதுதான் இன்றைய நிலை!  என்ன செய்ய ?

#KSR_Post
16-3-2023.
https://fb.watch/jiK9mN7xzF/

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...