#தமிழகத்தில் அன்றைய
ஏரிகள் குளங்கள் நிர்வாகம்.
இந்த ஆண்டில் ரூ.100 கோடி செலவில் 123 #ஏரிகள் புனரமைப்பு…. வெட்டி, முட்டாள், மடையர்.
—————————————
வெட்டி, முட்டாள், மடையர்!
****
ஒவ்வொரு காலகட்டங்களிலும் சில வேலைகள் இழிவானதாக மாறும்பொழுது அதை செய்தவர்கள் கேலிப்பொருளாகி விடுகின்றனர். பின்னர் அதுவே வழக்காடலாக மாற்றம் பெறுகிறது அப்படித்தான் இன்று பல பெயர்கள் இகழ்ச்சிக்குரியவனாகி காலங்கடந்து அதன் பொருளறியாமல் போய்விட்டன. இப்படி சில பெயர்களை அன்றைய நடைமுறைகளை கொண்டு பார்த்தால் ஆச்சரியம் அடைவீர்கள். கீழே சில வசவுமொழிகள் கடந்து வந்த பாதையை காணும் பொழுது நகைப்புத்தான் நம்மறியாமலேயே வருகிறது.
வெட்டி, முட்டாள், மடையர் இவைபற்றி கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகள்
வெட்டி
======
நாம் ஒரு பணியைச் செய்து அதற்கு கூலி வழங்கப்பட்டால் அது வேலை ஆகும்.
மன்னர்கள் காலத்தில், குளம் ஆறு போன்றவற்றின் கரையை அடைத்தல் போன்ற பணிகளை நாட்டின் நலன் கருதி இலவச சேவையாக செய்து தரும் பணி வெட்டி எனப்பட்டது. இதற்கு கூலி வழங்கப்படுவதில்லை.
முட்டாள்
=======
நாட்டின் நலன் கருதி சேவையாக செய்து தரும் பணியை வசதியானவர்கள் வயதானவர்களால் செய்ய இயலாதபோது அவர்களுக்குப் பதில் அந்த வேலையை செய்து தரும் நபரை முட்டுக்குப் போன ஆள் என்ற பொருளில் முட்டாள் என குறிக்கிறார்கள். அந்த நபர்களுக்கு உணவு அல்லது பணம் பொருள் போன்றவற்றை வழங்குவார்கள். திருவிளையாடல் புராணத்தில் வயதான பாட்டி செய்ய வேண்டிய ஆற்றின் கரையை அடைக்கும் பணியை பிட்டுக்காக சிவன் செய்வதாக குறிப்பிடப் படுவதை நினைவில் கொள்ளுங்கள்.
மடையர்
=======
ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றின் மடையை திறந்து மூடும் பணி செய்தவர்களை மடையர் என்பர்
****
பிரதமரின் வேளாண்நீர்பாசன திட்டத்தின் கீழ், 22 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டி ல், 123 ஏரிகள் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதை அறிவித்தார்.
• கடலுார், திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகள், 58.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
• அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி , மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 17 அணைகளின் பழைய இரும்பு கதவுகள், மின்தொடர்புச் சாதனங்கள், 34.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
• கோவை, திண்டுக்கல், பெரம்பலுார், சேலம், திருச்சி , திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலுார் ஆகிய மாவட்டங்களில், 15 இடங்களில் புதிய தடுப்பணைகள், 70.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டட் ப்படும்.
• பிரதமரின் வேளாண்நீர் பாசன திட்ட த்தின் கீழ், வேலுார், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், கடலுார் உள்ளிட்ட 22 மாவட்டங்களில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 123 ஏரிகள் புனரமைக்க ப்படும்.
• அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்தில் கிடைக்கும் உபரி நீரை, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி , திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல், நத்த ம் தொகுதிகளில் உள்ள குளங்களுக்குக் கொண்டு செல்வதற்கு சாத்திய கூறு அறிக்கை, ஒரு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.
• கன்னியாகுமரி, தோவாளை அடுத்த ஞாலத்தில், தடவையாற்றின் குறுக்கே நீர்தேர்க்கம் அமைக்க , விரிவான திட்ட அறிக்கை, மூன்று கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.
• நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு பொய்கை நல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்,சோமநாதபட்டி னம் ஆகிய இடங்களில் கடல் நீர்ஊடுருவதை தடுக்கும் வகையிலான கடைமடை கட்டமைப்புகள், 13.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
• கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில், நான்கு இடங்களில் சிறிய ஆறுகளின் குறுக்கே, பாலங்கள், தரைப்பாலங்கள், கரைகளில் சாலை, நடைபாதை அமைக்கும் பணிகள், 49.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
• தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், மூன்று புதிய கால்வாய்கள் அமைக்கும் பணிகள், 12.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
_
இவ்வாறு, நேற்று சட்ட மன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்அறிவித்தார்.
#தமிழகத்தில்_அன்றைய_ஏரிகள்_குளங்கள்_நிர்வாகம்
#ஏரிகள்புனரமைப்பு
#வெட்டி, #முட்டாள், #மடையர்.
கே எஸ் இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #KS_Radhakrishnan, #கேஎஸ்ஆர்,
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
29-3-2023.
No comments:
Post a Comment