Wednesday, March 15, 2023

#*மலரும் நினைவுகள்* #*ஸ்தாபன காங்கிரஸ்* #*சிவாஜி கணேசன்*

#*மலரும் நினைவுகள்*
#*ஸ்தாபன காங்கிரஸ்* #*சிவாஜி கணேசன்*
—————————————
1970-ம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நடிகர்திலகம்  சிவாஜி கணேசனின் 43 வது பிறந்தநாள் விழா சென்னை சென்ட்ரல் அருகே இருந்த எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் இரண்டு நாள் மாநாடாக, முதல் நாள் திரைக்கலைஞர்கள் பங்கேற்ற கலை விழாவாகவும், மறுநாள் ஸ்தாபன காங்கிரஸ் அரசியல் மாநாடாகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

கலை விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் . மலையாளம், மற்றும் இந்தி திரை உலக நடிகர், நடிகையர் திரளாக பங்கேற்றனர். விழாவில் நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி முதல் அப்போது ஓடிக்கொண்டிருந்த ராமன் எத்தனை ராமனடி வரை அத்தனை படங்களின் முழுப்பக்க ஸ்டில்லும், அது பற்றிய நடிகர் திலகத்தின் சுருக்கமான கருத்தும் அடங்கிய மலர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. பலருக்கு கிடைக்கவில்லை.




அரசியல் விழாவில் பெருந்தலைவர் காமராஜர், பழ.நெடுமாறன், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன், பா.ராமசந்திரன்,ராஜாராம் நாயுடு, குமரி அனந்தன், எஸ்.ஜி விநாயகமூர்த்தி, மணிவர்மா, திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட பல ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வாழ்த்திப் பேசினர். எழுத்தாளர்கள் படைப்பாளிகள் நா.பார்த்தசாரதி ஜெயகாந்தன்,அகிலன், தமிழ்வாணன், சின்ன அண்ணாமலை, ராஜவேலு  ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். பதிவு மற்றும் நிழற்படம் முகம்மது தமீம்.

படத்தில், விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மைக்கில் பேசிக் கொண்டிருக்க, மேடையில் தர்மேந்திரா, ஜெயலலிதா, தீலிப் குமார் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

#ஸ்தாபன_காங்கிரஸ்
#ksrpost
15-3-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...