Wednesday, March 8, 2023

மகளிர் தினம்-மங்கை

இன்று மகளிர் தினம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இலக்கியம், அரசியல், மொழிபெயர்ப்பு சார்ந்த முக்கியமான நூல்களை வெளியிட்டு வந்த நிறுவனம் ‘சக்தி காரியாலயம்’. இந்நிறுவனம் 1940களில் பெண்களுக்காக ‘மங்கை’ என்ற மாதஇதழினை வெளியிட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் ‘குகப்ரியை’ என்பவர். இந்த இதழில் வெளிவந்த கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் முழுக்க முழுக்க பெண்களே எழுதியுள்ளனர். ஒவ்வொரு இதழிலும் பெண் சிந்தனையாளர்கள், பெண் விடுதலை வீராங்கனைகள் முதலியோர் குறித்தும் வெளிநாட்டுப் பெண்கள் குறித்தும் அறிமுகங்கள் வெளிவந்துள்ளன. புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களும் இதில் எழுதியுள்ளனர். பல்சுவை கலந்ததாக இந்த இதழ் வெளிவந்துள்ளது. அக்குறிப்பிட்ட காலத்தில் பெண்களுக்கான பொதுவெளியாகச் செயல்பட்டதில் ‘மங்கை’ இதழுக்கும் முககியப் பங்குண்டு எனலாம். 




Thanks- Roja Muthiah library


No comments:

Post a Comment

Telugu Speakers In India

#telugu Telugu Speakers In India As per saw this map I think 2 most speaking language in india.but North India peoples not agreeing. #ksrpos...