*இன்றைக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் திமுகவில் பதவியில் இருப்பவர்களுக்கு…
முதல்வர் ஸ்டாலின்,தொகுதி எம்பி, கனிமொழி பார்வைக்கு*….
—————————————
இன்றைக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் திமுகவில் பதவியில் இருப்பவர்களுக்கு,
,கடந்த காலத்தில் நடந்த கீழே குறிப்பிட்ட சம்பவங்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அப்படித் தெரியவில்லை என்றால் அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலாவது அவர்களுக்கு இருக்கிறதா? வாழ்க இன்றைய திமுக!
சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கல்வி கற்கும் உரிமை கோரி 1953 ஜுலை 14 ஆம் நாள் கிராமப் பள்ளிக் கூடங்களின் முன்பு திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.சென்னையில் ராஜாஜி வீட்டின் முன்பு தி.மு.க.வினர் மறியல் செய்தனர்
மறுநாள் 15-7-1953 அன்று #தூத்துக்குடியில் ரயில் மறியல் செய்த திமுக தொண்டர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி, 4 பேர் உயிரைப் பறித்தது 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் மீது வழக்கு போடப்பட்டு தூத்துக்குடி சதி வழக்கு என்ற பெயரில் விசாரணை நடந்தது. வழக்கை நடத்த நிதி திரட்டப்பட்டபோது எம்ஜிஆர் மதுரையில் ஒரு நாடகம் நடத்தி அந்த வருவாயிலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார். #கொக்கிரகுளம்_திருநெல்வேலி_மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது அண்ணாவும் இரா. நெடுஞ்செழியனும் வழக்கு மன்றத்தில் பார்வையாளராக வந்துஅமர்ந்திருந்தார்கள்.
சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று அன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள், ஊனமடைந்தவர்கள் போராடி களப் பலியானவர்கள் குடும்பத்தினரின் இப்போதைய நிலைமை பற்றி தெரிந்தவர்கள் யாரேனும் சொல்ல முடியுமா? இதுதான் இன்றைய திமுக.
#KSRPost
8-3-2023.
No comments:
Post a Comment