#தலைவர் கலைஞரிடம் 1979 - இல் இருந்தே என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நான் அறிமுகம். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது , திமுகவுக்கு ஆதரவாக பல பணிகள் புரிந்துள்ளேன். திமுக, கலைஞர் சிக்கல்களைச் சந்திக்கும்போது மட்டும் உடனிருந்து உதவியுள்ளேன்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது திமுகவுக்கு எதிராகப் பேசியவர்கள், இன்று ஸ்டாலின் அரசால் நியமிக்கப்பட்ட பதவிகளைப் பெற்றுள்ளார்கள். அன்று கலைஞருக்கெதிராக நடந்து கொண்டவர்கள் எல்லாம் இன்றைக்குகௌரவிக்கப்படுகிறார்கள். எந்தவிதப் பலனையும் எதிர்பாராது பணியாற்றிய என்னை போன்று பலர் உண்டு. அதை பற்றிய கவலை எமக்கு இல்லை. கலைஞரை பார்க்காத, உழைப்பற்ற நபர்கள் டில்லி வரை பதவி பெற்றவர்கள் கலைஞரை பற்றி பிழையாக புரிதல் ஏற்படும் வகையில் ட்வீட் போடுகிறார்கள். மல்லாந்து படுத்துக் கொண்டு இப்படி எச்சில் துப்புவது? எதற்கும் தகுதியும் தரமும் வேண்டும். அது இல்லாதவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்? இதை சொல்ல வேண்டிய கடமை எமக்கு உள்ளது.இது இன்றைய திமுக…
#தலைவர்_கலைஞர்
#KSR_Post
6-3-2023.
No comments:
Post a Comment