#கலைவாணரின்
நாகர்கோவில் வீடு
—————————————
இன்று கோவில்பட்டியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரியில் கலைவாணர் 1941 இல் கட்டிய(பிறந்த பூர்வீக)இல்லத்துக்குச் செல்லக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
கலைவாணர் திராவிட இயக்கத்தின் தூணாக இருந்தவர். பெரியார், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர். மூத்த முன்னோடி.
கலைவாணர் மறைவுக்குப் பிறகு இந்த வீடு ஏலத்துக்கு வந்த போது எம்.ஜி.ஆர் அந்த வீட்டை மீட்டு கலைவாணரின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்தார். ஆனால் இப்போது கலைவாணரின் இந்த வீட்டைப் பராமரிக்கக் கூட யாரும் இல்லையே என்று வேதனை. கலைவாணரின் இந்த வீட்டைப் புதுப்பித்து நினைவில்லமாக ஆக்கக் கூட இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு மனதில்லை.
கலைவாணரைப் பற்றி இப்போது யாரும் பேசுவதுமில்லை. நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியைப் பற்றியும் யாரும் பேசுவதும் இல்லை. இவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் தூண்களாக இருந்தார்கள்.
இதுதான் திராவிட மாடலா? திராவிட இயக்கத்தின் முன்னோடிகளை மதிக்கக் கூடிய பண்பாடா? என்ற கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
#கலைவாணர்
#நாகர்கோவில்
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்#
#KSR_Post
21-3-2023.
No comments:
Post a Comment