#நான் வந்தேரி அல்ல.
———————————-
சமூக ஊடகங்களில் வரலாறு, என்னை அறியாமல் என்னைப் பற்றி தவறான செய்திகளைப் பதிவிடுபவர்களுக்காக இந்தப் பதிவு .
தமிழ், தமிழர்களுக்கான அரசியல்என வரும்போது - இயல்பாகவே எதிர்கின்றோமா? நான் தெலுங்கு பேசும் தமிழன்தான். வந்தேரி அல்ல.தமிழர்க்கு, தமிழ்நாட்டிற்கு தான் போராடுகிறேன். ஆந்திராவுக்கோ, தெலுங்கானாவுக்கோ அல்ல.
என்னுடைய 52 ஆண்டு கால அரசியல் வாழ்வில், தமிழர்களின் நலன், தமிழ்நாட்டு உரிமைகள், தமிழக நீராதாரப் பிரச்னைகள் என உச்சநீதிமன்றம் வரை 1975 - இலிருந்து தொடுத்த 45க்கும் மேலான பொதுநல வழக்குகள், ஈழத்தமிழர் நலன் களப்பணி பல செயல்பாடுகள் ஆற்றிய தகுதி ஆகியவற்றின் அடிப்படையில், பாசாங்கு இல்லாமல் எதையும் மறைக்காமல் நான் நானாக இருந்து சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. சிலரைப் போல நடிப்பு,திரைமறைவு நோக்கமெல்லாம் அடியேனுக்குக் கிடையாது.
‘எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னைஇடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலேஅத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா’ என என் அணுகுமுறை.
" கன்னடமும் , களி தெலுங்கும் , கவின் மலையாளமும்
உன் உதிரத்தே உதித்து
எழுந்து ஒன்று பல ஆயிடினும் "இம்மொழியாளர்கள் அனைவரின் வேர் மொழி தமிழ் ஆகும். இவர்களின் ஆதி இனமும் ஒன்று.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
#ksr_post, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
5-3-2023
No comments:
Post a Comment