#தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ்...
ஆளும்இந்திராகாங்கிரஸ்...
#சென்னை கடற்கரையில் காங்கிரஸ இணைப்பு விழா... 1976
#என்னுடைய மாணவர் காங்கிரஸ் அனுபவங்கள்…
அன்றைக்கு உண்மையாகவே இந்திராகாந்தியை ஆதரித்தவர்கள் யார் ? #Congress(o)Congress(r)merger in Tamilnadu,1976
—————————————
நேற்று,தூத்துக்குடி இந்திராகாந்தி பங்கேற்ற வ.உ.சி. குறித்தான நிகழ்வுகளை பதிவு செய்திருந்தேன். அதற்குப் பின் அவசரநிலை காலத்தை இந்திராகாந்தி அறிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் ஒன்று பட வேண்டும் என்று விரும்பினார். கோவை மேற்கு சட்டமன்றத் தேர்தலிலும், புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி இடைத் தேர்தலிலும் (1972 ) காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும், இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதும் உண்டு. அப்போது இந்திராகாந்தியும், காமராஜரும் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்ததெல்லாம் உண்டு. அரியாங்குப்பம் தொகுதியில் புருஷோத்தம ரெட்டியார் வெற்றி பெற்றார்.
பாலக்காட்டை சேர்ந்தவர் சங்கரநாராயணன். பிற்காலத்தில் மாகராஷ்டிரா ஆளுநராக ஆனவர். தமிழ்நாட்டில் அவர் யாருக்கும் அறிமுகம் இல்லை. ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்தவர்களும் இந்திராகாந்தி தலைமையில் உள்ள ஆளும் காங்கிரஸைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் இணைய விரும்புகிறார்களா என்ற கருத்தை அறிந்து வர பெருந்தலைவர் காமராஜர், சங்கர நாராயணனை தமிழகம் முழுவதும் அன்றைக்கு அனுப்பி வைத்தார். பொதுமக்கள், ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகிகள், ஆளும் இந்திரா காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அவர் விசாரித்து அறிக்கை தர வேண்டும். பலருக்கும் தமிழகத்தில் அறிமுகம் இல்லாத சங்கரநாராயணனுடன் சென்று சங்கரநாராயணன் அளித்த அறிக்கையில் இரு காங்கிரஸ் கட்சிகளும் இணைவதுதான் நல்லது என்று கூறியதும் உண்டு.
இச்சூழலில் காமராஜர் 1975 அக்டோபர் 2 - இல் காலமானார். அன்றைக்கு ஸ்தாபன காங்கிரஸில் (பழைய காங்கிரஸ் என்பார்கள்) பா.ராமச்சந்திரன் தலைவர், பழ. நெடுமாறன், குமரி அனந்தன், திண்டினவனம்ராமமூர்த்தி,தண்டாயுதபாணி மாநில பொதுச்செயலாளர்களாக இருந்தார்கள். ஆனால் இணைப்பை பா.ராமச்சந்திரனும் குமரி அனந்தனும், தண்டாயுதபாணியும் ஏற்றுக் கொள்ளாமல் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடர்ந்தார்கள்.
பழ.நெடுமாறன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து - திருத்தணியிலிருந்து கன்னியாகுமரி வரை - கிழக்கே நாகப்பட்டினம்- கடலூரிலிருந்து கோவை வரை - குறுக்கு வெட்டாகத் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் இணைப்புக்கு ஆதரவு திரட்டினார். சில இடங்களுக்கு திண்டிவனம் ராமமூர்த்தியும் வந்திருந்தார்.
அன்றைக்கு ஜி.கருப்பையா மூப்பனார் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் ஸ்தாபன காங்கிரசின் தலைவர். இவ்வாறு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரசாரத்தை மேற்கொண்டு பிப்ரவரி 15,1976 – இல் இரண்டு காங்கிரஸ் இணைப்பு விழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
இந்த இணைப்புக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பழ.நெடுமாறன், முன்னாள் பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன், ஏ.பி.சி.வீரபாகு, மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன், மகாதேவன் பிள்ளை ஆகியவர்களில் யாராவது ஒருவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சி.சுப்பிரமணியம், மரகதம் சந்திரசேகர் போன்றவர்கள் கருப்பையா மூப்பனார்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வர வேண்டும் என்று ஒரே பிடியாக இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜி.கருப்பையா மூப்பனார் பெயரை இந்திரா காந்தி அறிவிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தினார்கள். இதற்கு சிவாஜி கணேசனும் ஒரு காரணமாக இருந்தார்.
மேடையில் ஜி.கே.மூப்பனார் பெயரை அறிவிக்கும்போது, கவிஞர் கண்ணதாசன், ‘மூப்பனார் ராங்க் சாய்ஸ்’ என்று சொன்னதை அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நானும் கேட்டதுண்டு. அதையே ‘நான் பார்த்த அரசியல் ’ என்ற புத்தகத்தில் கண்ணதாசன் பதிவு செய்துள்ளார்.
அன்றைக்கு பழைய காங்கிரஸிலேயே தங்கிவிட்டவர்களாக பா.ராமச்சந்திரன், பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ஜி கருத்திருமன், முகமது இஸ்மாயில், குமரி அனந்தன், பொன்னப்ப நாடார், தண்டாயுதபாணி, ஜேம்ஸ் என பல தலைவர்கள் இருந்தார்கள்.
இந்திரா காங்கிரஸில் பழ.நெடுமாறன், திண்டிவனம் ராமமூர்த்தி, கருப்பையா மூப்பனார், செல்லப்பாண்டியன், ஆர்.வி.சுவாமிநாதன், தஞ்சை ராமமூர்த்தி, எம்.பி.சுப்பிரமணியம், வாழப்பாடி ராம்மூர்த்தி என பலர் உண்டு. ப.சிதம்பரம், சி.சுப்பிரமணியத்தின் தொடர்பால், இந்திரா காங்கிரசில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பிலிருந்தார். இப்படி ஒரு நீண்ட பட்டியல் உண்டு. ஈ.வெ.கி சம்பத்தும் இந்தப் பட்டியலில் முதன்மையானவர்.
அன்றைக்கு காமராஜர் பெயர் சொல்லி அழைத்தவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி எண்ணும்போது நெடுமாறன், குமரி அனந்தன், எஸ்.பாலசுப்பிரமணியம், பழ.கருப்பையா, தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ், நாமக்கல் சித்திக், மதுரை சிதம்பர பாரதி என்று ஒரு சிலரே நினைவுக்கு வருகின்றனர். இந்தப் பட்டியலில் அடியேனுக்கும் ஓர் இடம் உண்டு.
இந்திராகாந்தியின் ஆதரவு பெற்ற சஞ்சீவ ரெட்டி, 1969 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வி.வி.கிரி அவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு ஸ்தாபன காங்கிரஸுக்கும் இந்திரா காங்கிரஸுக்கும் முரண்பாடுகள் இருந்தன. அப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் இவ்வாறாக இணையும்நிலை ஏற்பட்டது. இவற்றைக் குறித்து விரிவாக எனது நினைவுகளைப் பதிவு செய்துள்ளேன்.
காங்கிரஸ் 1969 - இல் பிளவுபடும்போது காமராஜர், நிஜலிங்கப்பா, எஸ்.கே. பாட்டீல், அதுல்யா கோஷ், மொரார்ஜி தேசாய், தாரகேஸ்வரி சின்ஹா, பிஜு பட்நாயக் (பின் Utkal Congress) போன்றோர் இந்திராவைப் புறக்கணித்துவிட்டு ஸ்தாபன காங்கிரசில் தொடர்ந்தனர். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் பலமாக இருந்தது. இந்திரா தலைமையிலான காங்கிரசில் சி.சுப்பிரமணியம், பக்தவத்சலம், ஓ.வி.அழகேசன், மரகதம் சந்திரசேகர், தமிழக முன்னாள் அமைச்சர் ராமையா போன்ற ஒரு சில தலைவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த காலகட்டத்தையும் தமிழக காங்கிரஸையும் குறித்து 1974 இல் இருந்து 78 வரை தற்போதுயாரும் அதிகமாக பேசுவதுமில்லை. எழுதுவதுமில்லை. அதைப் பற்றிய தெரிதலும் புரிதலும் இல்லை என்பது வேதனையான செய்தியாகும்.
இவ்வாறு 1976 – இல் கடற்கரையில் நடந்த இணைப்பு விழாவைப் பற்றியும் அதன் முன் நடந்த திரைமறைவான நிகழ்வுகள் பற்றி எல்லாம் என்னுடைய நினைவுகளில் பதிவு செய்துள்ளேன். எப்படி கருப்பையா மூப்பனார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன். அவசரநிலை காலத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா தோல்வி அடைந்தார். அன்றைக்கு இந்திராவை ஆதரிக்க சி.சுப்பிரமணியம், ஜி.கே.மூப்பனார், சிவாஜிகணேசன் போன்றோருக்கு தயக்கம் இருந்தது.
டில்லியில் டிசம்பர் குளிரில் இந்திராகாந்தி மீது நம்பிக்கை கொண்டிருந்த அவருக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் இந்திராவை ஆதரித்த தீர்மானத்தை அண்ணன் பழ.நெடுமாறன்தான் முன்மொழிந்தார். இந்த நிகழ்வுக்கு அண்ணன் ஆர்.வி.சுவாமிநாதன், வாழப்பாடி ராமமூர்த்தி, எம்.சுப்பிரமணியம், அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி ஆகிய பலரோடும் நானும் கலந்து கொண்டேன். இன்றைக்கும் அவை நினைவில் உள்ளன. இந்திராவை ஆதரிக்கும் அந்த மாநாட்டைப் புறக்கணித்தவர்களில் கருப்பையா மூப்பனார், ப.சிதம்பரம் என பலருமுண்டு. இப்படியான மனிதர்கள்தான் அரசியல்கட்சிகளில் ஏதோ ஒரு வகையில் மேலும் கீழும் விழுந்து இடம் பிடித்து விடுகிறார்கள். இவ்வளவு உழைத்தும் 1979 இலேயே காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டோம் என்பது வேதனையான செய்தி.
1976 India Today Article on Indira Gandhi in Madras -
It was as if the entire population of the Madras metropolis had emptied itself on the sands of Marina Beach.
In a mammoth gathering, the likes of which the city has not seen in recent years, over one million people thronged Marina Beach here on the evening of 1976,February 15 to hear Prime Minister Indira Gandhi. The occassion was the Congress Unity Conference, a meeting jointly arranged by Tamil Nadu units of the Congress and Cong(O) to mark the merger of the two organizations in the state.
It was a vast sea of humanity and all one could see were swarms of people moving towards the specially erected platform from where Mrs. Gandhi addressed the crowds for over an hour.
Although the Prime Minister was due to address the crowd only at 6 p.m. the scores of enclosures that had been put up to accommodate people were full as early as mid-day. Unable to control the surging crowds, the police on more than one occassion had to, resort to a show of force.
An estimated ten thousand trucks and buses had brought thousands of people to the Marina from all over Tamil Nadu and neighbouring states.
The crowds repeatedly cheered the Prime Minister as she mounted the dias and waved to the mass of humanity that had assembled there. Flashing party flags and holding placards the million-strong crowd applauded the Prime Minister as she spoke of the misdeeds of the DMK government.
Mrs. Gandhi was lustily cheered as she referred to the efforts that have been under taken to implement the new economic programme announced following the imposition of the emergency.
As the meeting wound up, all that one could see was broken barricades, bits of torn paper and millions of foot prints on the sands of Marina.
#தமிழகத்தில்_ஸ்தாபன_காங்கிரஸ்...
#ஆளும்இந்திராகாங்கிரஸ்...
சென்னை கடற்கரையில் #காங்கிரஸ்_இணைப்பு_விழா... #என்னுடைய_மாணவர்_காங்கிரஸ்_அனுபவங்கள்…
அன்றைக்கு உண்மையாகவே #இந்திராகாந்தியை_ஆதரித்தவர்கள் யார் ?
#congress_o_congress_r_merger_in_tamilnadu_1976
#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
24-3-2023.
No comments:
Post a Comment