Saturday, March 18, 2023

*யூ டியூபர்கள் sting operation*. எது *Investigative Journalism, Undercover Journalism* (யூ - ட்யூப்ல இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம், பெருமைன்னு நினைச்சுகாதிங்க….)

*யூ டியூபர்கள் sting operation*.
எது *Investigative Journalism, Undercover Journalism* 
(யூ - ட்யூப்ல இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம், பெருமைன்னு நினைச்சுகாதிங்க….)
https://youtu.be/bZAobGpcv-c—————————————
#யூ ட்யூப்ல இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம், பெருமைன்னு நினைச்சுகாதிங்க…. #StingOperation

பணத்தை கோடி கோடியா கொள்ளை அடிக்கிற அரசியல்வாதிகள் இருக்கும் கட்சிகளுக்கு முழு நேரமும் கொத்தடிமையா சொம்படிச்சிட்டு இருக்க ஆட்கள்லாம் -யூட்யூபர் ….? அப்பப்பா அம்மம்மா….. என்ன சொல்ல…
இந்தப் பிரபஞ்சத்தை 
இவங்கள்தான் வழி நடத்துகிறீர்கள் என்ற நக்கீரன் நினைப்பு வேறு. 

தமிழர்களின் நலன், தமிழ்நாட்டு உரிமைகள், தமிழக நீராதாரப் பிரச்னைகள் என உச்சநீதிமன்றம் வரை 1975 - இலிருந்து தொடுத்த  45க்கும் மேலான  பொதுநல வழக்குகள், ஈழத்தமிழர் நலன் களப்பணி ஆற்றிய தகுதி ஆகியவற்றின் அடிப்படையில், பாசாங்கு இல்லாமல் எதையும் மறைக்காமல் நான் நானாக இருந்து சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. சிலரைப் போல திரைமறைவு நோக்கமெல்லாம் அடியேனுக்குக் கிடையாது. கண்னில் பட்டதை சொல்கிறேன்.

நான்கைந்து யூ டியூபர்களை sting operation என்ற பெயரில் வெளிக் கொணர்ந்ததாகக் கூறிக்கொண்டும், அய்யோ இத்தனை நாளும் உங்களையா நம்பிக் கொண்டிருந்தோம்? என்று சிலர் புலம்புவதைக் காண முடிகிறது. அடுத்த வீட்டுப் படுக்கையறையில் என்ன நிகழ்கிறது? என்று அறிந்து கொள்ளும் உங்களது ஆர்வம்தான் இம்மாதிரியான ஆட்களை இந்த நாடு வளர்த்து விட்டிருக்கிறது.

“Most people are other people. Their thoughts are someone else’s opinions, their lives a mimicry, their passions a quotation,” said Oscar Wilde.

From the beginning, social media platforms have trumpeted that they have ‘democratised’ self-expression. In important ways, this is true. Social media platforms have facilitated the circumvention of elite and/or authoritarian gatekeeping and have brought new voices into the public sphere. This has had a decidedly mixed effect on the public sphere. However, the impact of social media on democratic discourse is a separate debate. The purpose here is to dig deeper into the premise that social media platforms have democratised self-expression.
Social media also forces brevity - due to its format and the larger eco system it has spawned which shows up not just as typographical errors and poor grammar but also constraints on the possibilities of what can be said.  This limits, instead of enhancing, the fullness of self impression.

"பெரும்பாலான மக்கள் மற்றவர்களைப் போலத்தான் வாழ்கிறார்கள். அவர்களின் சிந்தனைகள் வேறொருவரின் கருத்துகளாக இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கை ஒரு பிறரின் வாழ்க்கை போல வாழ்வதாக உள்ளது. அவர்களின் உணர்வுகள் ஏற்கெனவே உள்ளதன் உருவாக்கமாகவே உள்ளது ” என்று ஆஸ்கார் வைல்ட் கூறினார்.
 
பொதுவாக ராணுவத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தைதான் . உள்ளூரில் ஏதேனும் குற்றங்கள் புரிந்துகொண்டு வேறு மாநிலங்களிலோ வெளிநாட்டிலோ, இருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் செல்வது,  தேசத்திற்கெதிராய் சதி செய்யும் தீவிரவாதிகளைக் கண்காணித்து அவர்களை வளைத்துப் பிடிக்கவோ அல்லது அவர்களது திட்டங்களை முறியடிக்கவோ உளவு காரியங்களில் ஈடுபடுவதைத்தான் Sting Operation என்று கூறுவார்கள்.  இப்போது சமூக ஊடகங்களில் செயல்படுபவர்களின் மீதும்  Sting Operation  மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. 
ஊடகத்துறையில் இதுவொரு பெரிய விடயம்தான். இதழியலை  புலனாய்வு இதழியல் மற்றும் மறைமுக  இதழியல் (Investigative Journalism and Undercover Journalism) என்று இரண்டாகப் பிரிக்கலாம்.  இந்த Sting Operation  நடத்தப்பட்டது மறைமுக இதழியல் சார்ந்ததாகும்.
 தங்களின்  சொந்த கருத்து வெளியிடல்களை ஜனநாயகப்படுத்திவிட்டதாக சமூக  ஊடக தளங்கள்  தொடக்கத்திலிருந்தே தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன.  சில முக்கியமான வழிமுறைகளில் மட்டுமே இது உண்மை. பொதுவெளிகளில் மேட்டுக்குடியினரதும், அதிகார வர்க்கத்தினதுமான கருத்துகள் பரப்பப்படுவதற்கான சூழ்நிலைகள் மட்டும் இருந்ததை மாற்றி, அதோடு கூட புதிய குரல்கள் எழுவதற்கான  சூழ்நிலையை அதாவது எல்லா கருத்துகளும் ஒலிப்பதற்கான சூழ்நிலையை சமூக ஊடகங்கள் ஏற்படுத்திவிட்டன என்பதும் உண்மை. ஆனால் அவற்றின் மோசமான வெளிப்பாடுகளாகவே இந்த யூ ட்யூபர்களின் செயல்கள் இருந்திருக்கின்றன.
 ஜனநாயகரீதியிலான உரையாடல்களில்  சமூக ஊடகங்களின் தாக்கம் என்ன என்பது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயமாகும். 
 சுதந்திரமான, ஜனநாயகமான கருத்து வெளிப்பாடுகளுக்கு சமூக ஊடகங்கள் தளமாக இருக்கின்றனவா என்பதுதான் இப்போது ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயமாகும்.
 சமூக ஊடகங்களில் எதையும் மிக விரிவாகப் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக எதையும் அதற்குத் தேவையான அளவில் முழுமையாகச் சொல்ல முடியாமல் போய்விடுகிறது. இது சுய உணர்வுகளை வெளிப்படுத்துவதை  முழுமையடையச்  செய்து மேம்படுத்துவதற்குப் பதிலாக  சுய உணர்வுகளின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. என்றபோதிலும், சமூக ஊடகங்களில் எல்லாவற்றையும் வெளிப்படுத்த அனுமதிப்பது என்பது படுமோசமான, கீழ்த்தரமான பதிவுகளையும் அனுமதிப்பதிலும் முடிந்து போகிறது. அதுதான் இந்த Sting Operation செய்வதற்கான சூழலை உருவாக்கிவிட்டது.

பொதுவாக ராணுவத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தைதான் Sting Operation. உள்ளூரில் ஏதேனும் குற்றங்கள் புரிந்துகொண்டு வேறு மாநிலங்களிலோ வெளிநாட்டிலோ, இருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் செல்வது,  தேசத்திற்கெதிராய் சதி செய்யும் தீவிரவாதிகளைக் கண்காணித்து அவர்களை வளைத்துப் பிடிக்கவோ அல்லது அவர்களது திட்டங்களை முறியடிக்கவோ உளவு காரியங்களில் ஈடுபடுவதை மேற்கூறிய பதத்தை உபயோகிப்பதுண்டு. பத்திரிக்கையில் இதுவொரு பெரிய விடயம். இதில் இரண்டு வகை; 
Investigative Journalism and Undercover Journalism.  

Investigative Journalism  என்று பிளிட்ஸ்
வாரா இதழ்1990 வரை( Blitz was a popular investigative weekly tabloid newspaper or newsmagazine published and edited by Russi Karanjia from Bombay.Ceased publication: Mid 1990sFounder-Russi Karanjia
Language: English, Hindi, Urdu, Marathi )பல விடயங்களை எழுதியது. The Bofors (The Bofors scandal was a major weapons-contract political scandal that occurred between India and Sweden during the 1980s and 1990s) பற்றி ஆங்கில Hindu ஏடு புலனாய்வு முறையில் தொடர்ந்து எழுதி வெளியிட்டது.இப்படி பல நிகழ்வுகள்.

புலனாய்வு இதழியல் என்பது பத்திரிகையின் ஒரு வடிவமாகும் , இதில் நிருபர்கள் தீவிர குற்றங்கள், அரசியல் ஊழல்கள் அல்லது பெருநிறுவன தவறுகள் போன்ற ஆர்வமுள்ள ஒரு தலைப்பை ஆழமாக ஆராய்கின்றனர். ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒரு அறிக்கையை ஆராய்ந்து தயாரிப்பதில் மாதங்கள் அல்லது ஆண்டுகள் செலவிடலாம். பயிற்சியாளர்கள் சில சமயங்களில் "வாட்ச்டாக் ரிப்போர்ட்" அல்லது "கணக்கு அறிக்கையிடல்" என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலான புலனாய்வு பத்திரிகை பாரம்பரியமாக செய்தித்தாள்கள், கம்பி சேவைகள் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்களால் நடத்தப்படுகிறது . விளம்பரம் மூலம் வருமானம் குறைவதால், பல பாரம்பரிய செய்தி சேவைகள் புலனாய்வு பத்திரிகைக்கு நிதியளிக்க சிரமப்படுகின்றன, ஏனெனில் அது மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்வது மற்றும் விலை உயர்ந்தது. சர்வதேச அளவில் கூட ( பனாமா பேப்பர்ஸ் மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் போன்றது) இணைந்து செயல்படும் செய்தி நிறுவனங்களால் அல்லது இதற்கு முன் செய்தி வெளியீட்டாளர்களாக செயல்படாத மற்றும் ஆதரவை நம்பியிருக்கும் ProPublica போன்ற நிறுவனங்களால் பத்திரிகை விசாரணைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் தங்கள் பணிகளுக்கு நிதியளிக்க வேண்டும்.

1980களில் இருந்து அமெரிக்காவில் ஊடக நிறுவனங்களின் வளர்ச்சியானது புலனாய்வுப் பத்திரிகைக்கான வரவு செலவுத் திட்டங்களில்- வெட்டுக்களுடன் சேர்ந்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வு, "நாட்டின் வணிக அலைக்கற்றைகளில் இருந்து புலனாய்வுப் பத்திரிகை மறைந்து விட்டது" என்று முடிவு செய்தது.

யாராவது தனிமனிதர்கள் அல்லது ஒரு அமைப்பு சேர்ந்து மக்களுக்கெதிராகவோ, அல்லது ஒரு அரசு சமூகத்திற்கெதிராகவோ செயல்படும்போது அதைப் பத்திரிக்கையாளர்கள் மோப்பம் பிடித்து, நூல் பிடித்துப் போய் அதிலுள்ள உண்மைச் செய்திகளைக் கண்டறிந்து அதைச் செய்தியாக வெளிக்கொண்டு வருவார்கள். இதில் ஈடுபட்டு மாட்டி உயிரைக் கொடுத்த பத்திரிக்கையாளர்களும் வரலாற்றின் பக்கங்களில் வராமல் போன கதைகளும் ஏராளம். ராணுவமோ, காவல்துறையோ அல்லது வேறுபிற Defense  சார்ந்த துறைகளோ இம்மாதிரி sting operation ல் ஈடுபட்டு மாட்டிக் கொண்டால் அவர்களைச் சார்ந்த துறைகள் அவர்களைக் காப்பாற்றிவிடும்! ஆனால் பத்திரிக்கையில் அப்படியல்ல! ஆனால் இன்று sting operation என்னும் வார்த்தைக்கான அர்த்தம் கேலியும் கிண்டலுமாகக் கிடக்கிறது.

ஒரு குற்றத்தை நிழலாய்ப் பின்தொடர்ந்து சென்று அதைக் கண்டறிந்து விளைவுகளைச் செய்தியாக்குவதுதான் உண்மையான sting operation ஏ ஒழிய ஒரு குற்றத்தைச் செய்ய வைத்து அதைச் செய்தியாக்குவது என்பது ஒரு பெரும் குற்றம்! லஞ்சம் யார் யாருக்குக் கொடுத்தாலும் குற்றம்! அது போக ஒரு காரியத்தைச் செய்தவர்களை மிட அக்காரியத்தைச் செய்யத் தூண்டியவர்களே முதன்மைக் குற்றவாளிகளே….

மிசோரி பல்கலைக்கழக இதழியல் பேராசிரியர் ஸ்டீவ் வெய்ன்பெர்க் புலனாய்வு இதழியலை இவ்வாறு வரையறுத்தார்: "ஒருவரின் சொந்த முயற்சி மற்றும் பணி தயாரிப்பு மூலம், வாசகர்கள், பார்வையாளர்கள் அல்லது கேட்பவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் வெளிபடுத்தல்….."  பல சமயங்களில், ஆய்வுக்கு உட்பட்ட விஷயங்கள் வெளியிடப்படாமல் இருக்க வேண்டும் என்று அறிக்கையிடும் நபர்கள் விரும்புகிறார்கள். புலனாய்வு இதழியல் கற்பிப்பதற்கான பல்கலைக்கழகத் துறைகள் தற்போது பல உள்ளன. புலனாய்வு இதழியல் சில நேர்மைகள் வேண்டும். திட்ட மிட்டு ஏமாற்றி பழி போட்டு
ஒருவரை ஏமற்றி பொது உலகில் தவறாக பேசக் கூடாது.

மாட்டிகிட்ட பின்னாடி திருடன் சொல்ற கதைய தான் இந்த திருடர்களும் கையும் களவுமா மாட்டின பின் சொல்கிறார்கள்! 

கட்சிகள், அதன் தலைவர்களை லக்ஸ் சோப்பு கம்பேனி  போல விளம்பரம்,  promote செய்வது, ஓட்டுக்கு பணம் என்ற தரமற்ற நடவடிக்கைக்கு துணை போகிறது யூ ட்யூப் .
இந்த மொள்ளமாரிகள்..
காசுக்காக, சமூகவலைதள புகழுக்காக எதையும் தயக்கமில்லாமல் செய்ய இருக்கும் போது பத்திரிகா தருமம், அறம் சார்ந்த நெறிகள் என்பது  வெற்று பேச்சுதான்.

யூ - ட்யூப்ல இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம், பெருமைன்னு நினைச்சுகாதிங்க….

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
ஆசிரியர் கதை சொல்லி, 
பொதிகை-பொருநை-கரிசல்.

#ksrpost
18-3-2023.

No comments:

Post a Comment

2023-2024