Tuesday, July 25, 2023

சுகமான சுமைகள் நாம் கற்றக வேண்டிய பாடங்கள். துன்பத்திற்குத் துன்பம் கொடுக்க வேண்டும்.

#துன்பத்திற்குத்துன்பம்கொடுக்க வேண்டும். 

வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும். 

துவக்கத்தில் வீட்டை விட்டு வந்து கல்லூரி விடுதியில் தங்கி படித்த காலத்தில் ஊருக்கு போக வேண்டும் என்பது எப்போதும் ஒரு தாகம் போல் இருந்தது.முன்பு வீட்டிற்கு போன உடன் அம்மா அப்பா மட்டும் அல்ல... வீட்டின் சுவர்களும் தோட்டமும் துரவுகள், மோட்டர் பம்பு செட் கிணர்கள் , விவசாய பயிர்கள் ஏதோ எனக்காகவே காத்துக் கொண்டு இருந்தது போல் தோன்றும்.
ஆனால் மனம் ஏற்காமல் அடம் பிடிக்கிறது.
பிறந்து வளர்ந்த ஊரின் மீது இருப்பது வெறும் விருப்பம் இல்லை...!
அதன் பேரன்பும் உயிரோட்டமான ஈர்ப்பு என்பது இப்போது மிகத் தெளிவாய் புரிகிறது!

திட்டமிட்ட கடும் உழைப்பு, பணிகள் இருந்தாலும் சிலரின் தடையால் நமது இலக்கை எட்ட முடியவில்லை…..
இப்படி பல விடயங்கள…..
*****

சில நாட்களாகவே.. இல்லை சில மாதங்கள் என்று கூட சொல்லலாம். மனதை ஒரு நிலைப்படுத்தி எந்தவொரு செயலிலும் ஈடுபடுத்தமுடியவில்லை. ஆழ்மனதில் படுத்துறங்கும் ஏதோவொன்றை துரத்தும் முயற்சிகள் தோற்றுப்போகின்றன., சில பணிகள் - காலங்கள் காலாவதியாகி
விட்டன. “ முன்புபோல் ஏன் ஆக்டிவ்வாக இல்லை” என்று  கேட்பவர்களுக்கு பதிலே எழுதுவதில்லை.இனி மெல்ல மீள்வேன்..

ஏதாவது ஒன்று  முடியும்  போது தான் இன்னொன்று ஆரம்பிக்க முடியும். ஏதாவது ஒன்று என்பது சோம்பலும், மற்றவர்களின் மூலம் நாம் அடையும் பாடுகள்,ரணங்கள் ….
எல்லாமே சிறிது காலம் தான்.
விரைவில் மீண்டு தெம்புடன் வர... 
நாம சந்தோஷமாக இருக்கிறது மட்டும் தான் நம்மை வழிநடத்தும். 
எதைப்பற்றியும் நினைத்து கவலைப்பட கூடாது. 

கவலைப்பட்டு எதுவுமே ஆகப்போவதில்லை. 
பிறகு எதுக்கு கவலைப்படுவான். 
எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு நிம்மதியாக இருங்க. 
படிக்கவும், நல்லா தூங்கவும். எல்லாம் சரியாகும். சுகமான சுமைகள் நாம் கற்றக வேண்டிய பாடங்கள்.
துன்பத்திற்குத் துன்பம் கொடுக்க வேண்டும்.
- அரசியலார்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#K_S_Radhakrishnan
25-7-2023


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...