Wednesday, July 26, 2023

#அன்றைய திமுகவில் இப்படி பலர்… உடுமலை நாராயணன்இன்று….?*

#*அன்றைய திமுகவில் இப்படி பலர்*…
#*உடுமலை நாராயணன்*
*இன்று….?*

—————————————
உடுமலை ப.நாராயணன் உடுமலைப்பேட்டை சேர்ந்தவர், உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி தொகுதியில் இல்லாத போதும்,  இருந்த போதும்   பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.திமுக களப்பணியாளர். அன்றைய ஒன்றுபட்ட ஈரோடு, திருப்பூர் அடங்கிய கோவை மாவட்ட திமுக மாவட்டசெயலாளர்.
எஸ்.ஜே.சாதிக்பாடசா இவரின் வழியில் திமுகவில் செயல் பட்டவர்.

இவருக்காக 1971 ல்  புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் ஒரு ஜீப்பை தேர்தல் பிரச்சாரத்திற்காக  வழங்கினார்.  அப்பொழுது  இந்தியாவில் யாரும் வெற்றி பெறாத மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடைசி வரை உடுமலைபேட்டையில்  சீனிவாச நாயக்கர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். மிதிவண்டியில் தான் உள்ளுரில் பயணம் செய்துள்ளார். யாராவது காரில் வந்து அழைத்துச்சென்றால்தான் உண்டு. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகும் சொந்தமாக வாகனம் வைத்துக்கொள்ளவும் இல்லை. வாங்கவும் இல்லை.

அண்ணா,சம்பத் ,நாவலர்,சி.பி.சிற்றரசு, கலைஞர்,எம்ஜிஆர் போன்ற பெரும் ஆளுமைகளின் தொடர்பில் இருந்தவர். 

இத்தனைக்கும் அவர் வட புலத்து
ராஜபுத்திர இனத்தைச் சார்ந்தவர்.

அவரின் பெயரில் உடுமலை நகரில் நாராயணன் காலனி இருந்தது. பெயர்ப்பலகை கூட இல்லை. ஆனால் பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில்  உடுமலை நாராயணன் பெயரில் ஒரு வீதிக்குப் பெயர் வைத்துள்ளனர். ஆனால் இன்றைய திமுகவில்…..?!

இன்று அவரின் நினைவு நாள் .
26-7-1971.

#இன்று……
கோவை சிங்காநல்லூர் முன்னாள் MLA மனம்விட்டு பேசியதாக பரவும் ஆடியோ, அதில் முதல்வர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சில ! 

✅முதல்வராக எந்த முடிவும் எடுப்பதில்லை, 10 அதிகார மையங்கள் உள்ளது 
✅அண்ணாநகர் கார்த்திக் டென்டர்களை கவனிக்கிறார், அவர் வீட்டில் தினசரி 200 பேர் காத்திருக்கிறார்கள்
✅ கோவைக்கு ஆண் மேயர் போட்டிருக்க வேண்டும், ஒருவேளை நான் மேயராகி விடுவேன என செந்தில் பாலாஜியின் பேச்சை கேட்டு பெண் மேயர் போட்டு விட்டார்கள். கவுன்சிலரை வைத்து அரசியல் செய்ய முடியாது, எம்எல்ஏ, எம்பி இல்லாத சூழ்நிலையில் வலுவான ஆண் மேயர் தேவை
✅அன்பில் மகேஷ் இன்னொரு அதிகார மையம், திருச்சியில் 2-3 வீடுகள் இருக்கிறது, தொண்டர்கள் யாரும் பார்க்க முடியாது
✅நேரு எதையும் புரிந்து கொள்ள மாட்டார் நுனிப்புல் மேய்வார்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
26-7-2023.


No comments:

Post a Comment

#Reader's Digest UK Discontinues After 86 Years

#Reader's Digest UK Discontinues After 86 Years ஏப்ரல் 30, 2024 புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு சோகமான நாள்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் மூடப்பட்டுள்...