Thursday, July 20, 2023

*ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்-டி.ஆர்.பாலு* *சரி, பல முறை திமுக மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது இதில் ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாமே…. ஏன் எடுக்க வில்லை*? #*பி.வி.ராஜமன்னார் குழு*

#*ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்-டி.ஆர்.பாலு* 
*சரி, பல முறை திமுக மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில்  இருந்த போது இதில் ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாமே…. ஏன் எடுக்க வில்லை*? #*பி.வி.ராஜமன்னார் குழு*

•••
அண்ணா கூறிய படி ஆளுநர் வேண்டாம் என உரத்த குரலில் திமுக சொல்ல வேண்டும். உங்களின் தேவை எனில்ராஜ் பவன் செல்லும்வாடிக்கையை கை விடுங்கள். 
கர்நாடக முன்னாள் முதல்வர் மறைந்த இராமகிருஷ்ண ஹெக்டே  கவர்னர் வேண்டாம் என தெளிவாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதுபோலவே வெளியிடுங்கள்.

பி.வி.ராஜமன்னார் குழு மாநில உறவுகளை ஆராய 1969இல் அன்றைய முதல்வர் கலைஞரால் மே 27, 1971 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், நீதிபதி சந்திரா ரெட்டி
இதன் முக்கிய பரிந்துரைகள்
நிதி ஆணையத்தை நிரந்தர அமைப்பாக மாற்றுதல்
திட்ட குழுவினை கலைத்தல்
அனைத்திந்திய பணிகள் கலைப்பு
சரத்து 356 மற்றும் 365 நீக்கம்
மத்திய பட்டியலில் உள்ள சில பகுதிகள் மாநில பட்டியலில் மாற்றம்
எஞ்சிய அதிகாரங்கள் மாநில பட்டியலில் சேர்ப்பு
கவர்னரின் விருப்பம் உள்ளவரை மாநில அமைச்சரவை பதவி வகிக்கலாம்  என்ற வாக்கியம் நீக்கம் என மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக. இக்குழுவின் பரிந்துரைகள் இருந்தது. இவை நடைமுறைக்கு வர; பல முறை திமுக மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில்  இருந்த போது ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாமே…. ஏன் எடுக்க வில்லை?@mkstalin @CMOTamilnadu @TRBaaluMP @tiruchisiva @DuraimuruganDmk 
@KanimozhiDMK 

#ஆளுநரை_டிஸ்மிஸ்_செய்ய
#பி_வி_ராஜமன்னார்_குழு
#திமுக #பிரிவு356
#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-7-2023.

No comments:

Post a Comment

#Reader's Digest UK Discontinues After 86 Years

#Reader's Digest UK Discontinues After 86 Years ஏப்ரல் 30, 2024 புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு சோகமான நாள்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் மூடப்பட்டுள்...