Saturday, November 11, 2023

#*திருநெல்வேலி* #*மிட்டா*(*திருவனந்தபுரம்-நாகர்கோவில்- சிருங்கேரி*) #*தூத்துக்குடி நினைவலைகள்*

#*திருநெல்வேலி*
#*மிட்டா*(*திருவனந்தபுரம்-நாகர்கோவில்- சிருங்கேரி*)
#*தூத்துக்குடி நினைவலைகள்*
————————————
1.கிருஷ்ணன் வெங்கடாசலம், சி. சங்கர நாராயணன் ஆகிய இருவரின்
புனைவு(நாவல்) ’#மிட்டா’ 
2முத்துக்குமார் Muthukumar Sankaran Tuticorinதூத்துக்குடி நினைவலைகள் இது மந்திர நகரம்’
இவற்றை சந்தியா பதிப்பகம் சந்தியா பதிப்பகம்வெளியிட்டுள்ளது. கையில் கிடைத்தது. படிக்க வேண்டியது…




இந்த படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள்

உழைப்பு மகத்தானது. உழைப்பையே மூலதனமாகக் கொண்டு சமூகத்தில்  உச்ச நிலையை அடைந்தவர்தான் ’மிட்டா’ என்ற இந்த வரலாற்றுப் புதினத்தின் நாயகன் வேம்பன். கி பி 1876இல் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டு 56 லட்சம் மக்கள் மாண்டு போனார்கள் என்பது சரித்திரம் . அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடும் பெரும் பஞ்சம் ஒன்றை எதிர் கொள்ள நேரிட்டது. அந்தக் காலகட்டத்தில் பதிநான்கு வயதுச் சிறுவனாகத் தன்னந்தனியாக திருநெல்லவேலி மாட்டம்  இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்பநேரி என்ற குக்கிராமத்திலிருந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.  கடும் உழைப்பினால், திருவிதாங்கூரின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக மாறிய வேம்பனின் வரலாற்றை 1884இல் காலத்தில் ஆரம்பித்துப் பேசுகிறது உண்மையும் கற்பனையும் கலந்த இந்த வரலாற்றுப் புதினம்'மிட்டா'.
 நாகர்கோவில்,  திருநெலவேலி,சிருங்கேரி என கதை களம் விசாலமாக செல்கிறது. அன்றைய வாழ்க்கை முறை, பண்பாடு (கலாச்சாரம் அல்லது கலாசாரம்) என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும்  இந்த படைப்பில் பார்க்கலாம்.அருமையான
கதையாடல் மிட்டா.

முத்துக்குமார்  படைத்த ‘தூத்துக்குடி நினைவலைகள் இது மந்திர நகரம்’
Thoothukudi Ninaivalaikal
Muttukkumār

சங்க காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம், தூத்துக்குடியைப் பற்றி குறிப்பிடுகிறது.

தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.

கி.மு.123இல் தாலமி என்ற கிரேக்கப் பயணி, தனது பயண நூலில் "சோஷிக் குரி"(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான், 'தூத்துக்குடி' என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை, ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்" என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
கி.பி.80இல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் 'தூத்துக்குடி' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி, முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துறையைப் பற்றி, சென்னை அரசாங்கத்திற்கு, தான் சமர்ப்பித்த அறிக்கையில், தோத்துக்குரையாக மாறி இறுதியில் 'தூத்துக்குடி' என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி என்ற பெயர், ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று, 'தூட்டிகொரின்' ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் விளக்கம் அளித்துள்ளார்.

சிறை ஏகும் முன்பு வ.உ.சி. விட்டுச் சென்ற விடுதலைக் கனலை ஏந்தி வளர்த்தவர் தூத்துக்குடி ரொட்ரீக்ஸ். வெடிகுண்டு தயாரித்த தீவிரவாதி என்று அவரை, ஆங்கிலேய அரசின் ஆவணம் சொல்கிறது. அவரது மகன்தான் எம்.ஜி.யாருக்கு இணையாகச் சம்பளம் வாங்கிய நடிகர் சந்திரபாபு. நாட்டுக்காக நகை பொருள் வீடு எல்லாம் இழந்து தியாகிகளுக்கான சலுகைகளையும் ஏற்க மறுத்தவர் தூத்துக்குடி எம்.சி. வீரபாகுபிள்ளை. ‘சட்டிக் கொட்டு தொண்ட’ராகயிருந்து தூத்துக்குடி சட்டசபை உறுப்பினராகி மக்கள் பணி ஆற்றுகையில் நடுரோட்டில் உயிர் நீத்தவர் சாமுவேல் நாடார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. வாழ்ந்த தூத்துக்குடி ஆளுமைப் பட்டியலின் நீட்சிக்கு எல்லை இல்லை. இவர்களோடு சூலமங்கலம் ராஜலட்சுமியின் பாடல்களோடு மட்டும் வாழ்ந்த சீதையக்காவும் தாழம்பூ வைத்துப் பின்னிய சடையை வளவில் ஒவ்வொரு வீடாகப் போய்க் காண்பித்துவரும் சிறுமியும் கூட இந்த நூலில் வந்து போகிறார்கள். தூத்துக்குடிக்கு திருமந்திர நகரம் என்றொரு பெயர் உண்டு. இதன் வரலாறும் நம்மை வசியம் செய்கிறது.

இதை போல ஐந்தாவது பதிப்பாக ( முதல் பதிப்பு 2003)இரண்டு தொகுப்பாக எனது நிமிர வைக்கும் நெல்லை விரைவில் வருகிறது.

#திருநெல்வேலி #tirunelveli #nellai
#மிட்டா
#தூத்துக்குடிநினைவலைகள் #thuthukudi #tuticorin
#நிமிர_வைக்கும்_நெல்லை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-11-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...