#பூர்விக வளர்ந்த பக்திதளம்…
———————————————————-
திரும்புற பக்கம் எல்லாம் மக்களோட பாசம், நேசம் எல்லாம் வானம் பார்த்த கரிசல் காட்டில் பொங்கி வழியும்..நம் வாழ்க்கையில் நாம் மறக்க நினைத்தாலும் சில நிகழ்வுகளை மறக்க முடியாது. நிகழ்வுகளை தாங்கி நிற்கும் நிஜங்களாக இருப்பதுதான் பிறந்த ஊர்,வீடு.வடிக்கைகள்…..
இயல்புகள்… இந்த இடம் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. இந்த இடத்தை பார்க்கும்போது
பெற்றோர் பாசம், விளையாடிய தாயம், hide and seek, foot ball, ராலே சைக்கிள்,கிணற்றில் நீச்சல்,
மார்கழி மாதம் திருப்பாவை -திருவெம்பாவை, முன்பனிக்காலம் சீநிவாசரகவன் பேச்சு வணக்கம் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமிஎன்ற குரல். சென்னை,திருச்சி, திருநெல்வேலி வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை வானொலி பெட்டியில்
கேட்ட ஒலிச்சித்திரம்,வழிமேல் விழி வைத்து ஞாயிறு அன்று பார்த்த சந்திரகாந்தா ஆக இருக்கட்டும்,, சிலோன் ரேடியோ தமிழ் திரை பாடல்கள் இரவு கண் விழித்து நகர்ந்த நாட்கள், கிணறு, மழை பெய்யும் போது தாழ்வாரத்தில் மழை நீரை சேமிக்க வைத்த பாத்திரங்கள், வீட்டு வாசலில் கயத்து கட்டிலில் கதை பேசிய அனுபவம், தீபாவளி காலத்தில் ஸ்வீட், அவற்றின் நெய் வாசம், தீபாவளி, தைபொங்கல் மூன்று நாட்கள் கொண்டாட்டம். தோட்டம் பம்பு செட்கள்- குளியல், குளங்கள் - ஓடைகள், நாவல் பழம் பறிப்பது,பனை மர நொங்கு வெட்டல். மா, வாழை,கொய்யா பழங்கள், கரும்பு, இளநீர் என முறுக்கு, சீடை, அதிரசம், முந்திரி கொத்து என வரிசையில்இருக்கும். அன்றைய பள்ளி பாட
புத்தகங்கள், பாடசாலை …. டெரிலின் சட்டைகள், வீட்டில் கருப்பு வெள்ளை புகைப்படம் எடுக்கும் கேமரா, மாதவையா தொடங்கி Mark twin என தமிழ் ஆங்கில கவிதைகள்,
கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், Readers Digest, the Hindu, Indian Express
தினமணி, சோவியத்நாடு, அமெரிக்கன் ரிப்போடர் சூழ தினமும்..கேரம் என பல…..
அரைப்படி, பட்ணம் படி, இதெல்லாம்பெரும்பாலான வீடுகளில் பித்தளையிலோ இரும்பிலோ. இருக்கும்.
கல்லுரலில் இட்லி மிளகாப்பொடி, போன்றவை இடிக்க மர பித்தளை பூன் உலக்கை,மாவு அரைக்க கல் உரல்.
ஊரடங்கிய ராத்திரியில் சிந்தன ஞானத்தோடு சாவகாசமாக. மாடுகள் அசைபோட்டபடி படுத்திருப்பது,நாயின் அன்பான சாகவாசம்.
நல்ல பசும் பால், கட்டி தயிர், நாட்டுக்கோழி,
எட்டயாபுரம் சந்தை வாங்கிய கிடா, தினமும் ஒரு வகை ரசம்,சின்ன வெங்காயம் மட்டுமே உணவுகளில்… கழுகுமலை செக்கில் தோட்டத்தில் விளைந்த எள்- நிலக்கடலை எண்ணெய்கள் , நிலத்தில் கிடைக்கும் காய்கறிகள், கீரைகள் என பல
மாதிரி வடிக்கைகள்…..இயல்புகள்….
இறுதி மூச்சு இருக்கும் வரை, நினைவுகளை அழிக்க முடியாது…
#கிராமவாழ்க்கை
#ஊர்மனம்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
5-11-2023#
அழகு! மண்ணின் மணம் வீசும்... நினைவுகளின் தடம் பேரழகு
ReplyDelete