Monday, November 27, 2023

உறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழகத்தில் பிறந்து தமிழீழத்துக்காக உயிர் துறந்த மாவீரர்களின் விபரங்கள் சில…

உறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழகத்தில் பிறந்து தமிழீழத்துக்காக உயிர் துறந்த இந்திய
மாவீரர்களின் விபரங்கள் சில…
———————————————————
 நீண்ட காலமாக தொடர்ந்த ஈழ விடுதலை போராட்டத்தில் பிரபாகரனுடைய  தலைமையானது ஒரு புனிதப் போருக்கான அதற்கு இணையான அரபு நாடுகளில் ஓமர் முக்தார் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேகுவாரா போன்ற துணிச்சல் மிக்க தேசிய வீர வரலாற்றுகளின் தொடர்ச்சியில் முக்கியமான ஒரு தேசிய இன போராட்டமாக தான் வரையறுக்க முடியும்.



அத்தகைய ஈழ விடுதலைப் போராட்டத்தில்  நமது தாய் தமிழகத்திலிருந்து பல இளைஞர்கள் இலங்கைக்கு சென்று  பயிற்சி எடுத்து ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று வீர மரணங்களும் அடைந்தார்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கும் சேர்ந்துதான் இந்த மாவீரர் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது அல்லது கொண்டாடப்பட வேண்டும்.




இன்றைக்கு உலகமெங்கும் இந்த தீபத்திருநாளில் மாவீரர் நாள் கொண்டாடப்படுவது வலியுடன் சேர்ந்த ஒரு வீர வரலாற்று காவிய மரபு தான்.

எழுச்சி தீபங்கள்!

விடியலை நோக்கிய
வீரத்தின் எழுச்சியை
மரணந் தழுவிய 
மாவீரர்களின் சுவாசத்தை
விதைக்கப்பட்ட வீரர்களின் 
தியாகத்தின் வண்ணத்தை
இதழ்களில் ஏந்தி இறுமாப்புடன்
இதழ்நகை முகிழ்க்கின்றன
செங்காந்தள் மலர்கள்! 

குண்டுகள் துளைத்த
அன்னவர்களின்
குருதிப் பிசுபிசுப்பை
உலர்ந்து போகாத
உதிரத்து உணர்வுகளை 
அதரங்களில் ஏந்தி
ஆராதனை செய்கின்றன
செங்காந்தள் மலர்கள்!

கார்த்திகை மாதத்தின்
கந்தக வாடையை
காரிருள் சூழ்ந்த
துயரத்தின் ஓலத்தை 
வெடிகளில் சிதறிய
உயிர்களின் வலிகளை
வண்ணங்களில் ஏந்திய
எழுச்சி தீபங்களாய்
விழிநீரில் மிதக்கின்றன
செங்காந்தள் மலர்கள்!

- வானதி சந்திரசேகரன்

அதற்கான சர்வதேச காரணிகள் என்னவாக இருந்தாலும் உலக வரலாற்றில் தமிழர்களுக்கென பிறந்த ஒரே  தலைவன் மேதகு பிரபாகரன் தான்.

பல்வேறு நேரங்களில் 1979 இல் இருந்து அவர் என்னிடம் சொன்னதை எல்லாம் நான் நினைவில் கொண்டிருக்கிறேன். ஒரே உலகம், ஒரே சூரியன்,ஒரே கனம், ஒரே பிறப்பு, ஒரே பாதை,ஒரே உயிர்... என பல சிந்தனைகள்..

நினைத்துப் பார்க்கவே முடியாத அளவில் உலகத் தமிழர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து தேசம் மொழி இனம் என்கிற வகையில் போராடிய மாவீர்ர்கள் வீர சரிதம் நவம்பர் 27 ல் நினைவு கூறப்படுவது முக்கியமானது.
•••
கருக்கொண்ட வானம் 
இடைவிடாது பொழிகின்ற கார்த்திகை அடைமழையில் 
சாலையைக் கடக்கின்ற தாயின் 
கண்ணீர்க்கோடு 
கரைந்து மறைகின்றது, 
தோண்டி எறியப்பட்ட கல்லறைகளில் இருந்து
சிதறி விழுந்த மணற் துளிகள் 
மழையில் கரைந்து அழுகின்றன, 
அன்றொருநாள் தூவப்பட்ட பூக்களின் நினைவுகளில் 
வேலியோரப் பூவரசு இலைகளைச் சொரிந்து 
தன் கிளைகளை அசைக்கின்றது,
மூடிய வாய்களுக்குள் பேசப்படும் வார்த்தைகளும்
இசைக்கப்படும் கீதங்களும் 
உள்ளங்களில் தீபம் ஏற்றுகின்றன, 
அடித்தும் உடைத்தும் வீசப்பட்ட 
சிதிலங்களில் 
தெரிகின்ற முகங்களில் 
சிந்தப்படும் புன்னகையில்
உயிர்க்கிறது காலப்பெருவெளி..
-சர்மிளா திருநாவுக்கரசு.
••••
உறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழகத்தில் பிறந்து தமிழீழத்துக்காக உயிர் துறந்த எமது மாவீரர்களின் விபரங்கள் சில…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்  சில
தமிழக இளைஞர்கள் 
“ஒரு மார்தட்டும் பதிவு”
ஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றுக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்; அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை; எனக்குக் கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன். வீரமரணம் அடைந்தோருக்கு விடுதலைப் புலிகள் வழங்கும் ‘மாவீரர்’ பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண்போராளிகள் உட்பட 14பேரின் விபரங்கள்,

பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

…………………..
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
………………………..
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
………………………..
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
……………………..
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
…………………………..
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
………………………..
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர்



ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர்
மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
…………………………………
பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
……………..
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
……………………………..
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
………………………..
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
…………………………..
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
……………………..
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
……………………..
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்
மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
………………………..
போலிகளை பாலூற்றும் இளைஞரைப்பற்றிப் பேசிக் களைப்படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்.

ஒரு சொட்டுக் கண்ணீரும்
ஒரு திரி தீபமும்
ஏற்ற முடியாத தேசத்தில்
கார்த்திகை தோறும்
கண் விழிக்கின்றன காந்தள் மலர்கள்,
விழி மூடி உறங்கியவர்களுக்காய்
ஒருபிடி குழிமண்ணிட்ட கைகள்
தேடித் திரிகின்றன
சிதைக்கப்பட்ட கல்லறைகளின்
உயிர்த் தடங்களை
எல்லாமும் தீர்க்கப்பட்டதாக
சொல்லப்படும் இக்காலத்தின் தீபத்திருநாளில்தான்
தன்பிள்ளைக்கொரு தீபம் ஏற்றுகிறாள்
குழிமண்ணிட்ட தாய்.


"கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே" 

#மாவீரர்நாள் 
#மாவீரர்நாள் #நவம்பர்27

#Tamil #Eelam #EelamTamils #WorldwideTamils
#தமிழ்நாட்டில்_பிறந்த_ மாவீரர்கள்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...