Thursday, November 16, 2023

#*சஞ்சாய்காந்தி மேனகாதிருமணம்* #சோனியாவின் இந்தியகுடியரிமை கேள்விகுறியனது?



————————————
திமுகவின் மகளிர் உரிமை மாநாடு குறித்த எனது பதிவில் திருமதி சோனியா காந்தி அவர்களின் குடியுரிமை விவகாரங்கள் பற்றி எழுதி இருந்தேன்! அதுகுறித்து பலரும் என்னிடம் விவரம்  கேட்டார்கள். அதற்கான விளக்கமாய்  இப்பதிவு….

கடந்த 1969 இல் ராஜீவ் காந்தியை திருமணம் முடித்த திருமதி சோனியா காந்தி அவர்கள் 1983 வரை இந்தியப் பிரஜா உரிமை பெறாமல்  தொடர்ந்து தான் பிறந்த இத்தாலிய குடியுரிமையிலேயே தான் பாஸ்போர்ட் சகிதம் வாழ்ந்து வந்தார். நாட்கள் கடந்து வந்த  நிலையில் திருமதி இந்திரா காந்தி அம்மையாரின் வாரிசாக அறிவிக்கப்பட்ட சஞ்சய்காந்தி டில்லி பிளேயிங் கிளப்பில்  தனது பயிற்சியின் போது  விமான விபத்தில் உயிரிழந்தார்.



அப்போது திரு ராஜிவ் காந்தி அவர்கள் மனைவி சோனியா காந்தியும் சஞ்சய் காந்தியினுடைய மனைவி மேனகா காந்தியும் அவர்களுடைய குழந்தைகள் அனைவரும் இந்திரா காந்தி அம்மையாருடன் தான் தங்கி இருந்தார்கள்.

திருமதி இந்திரா காந்தி அம்மையாருக்கும் அவரது மருமகளான சஞ்சய்காந்தியின் மனைவி மேனகா காந்திக்கும் சஞ்சய் காந்தி விபத்தில் இறந்தவுடன் இருவருக்கும் இடையே சரியான நல் உறவுகளும் இல்லை. இந்நிலையில் மேனகா காந்தியும் பச்சிளம் குழந்தையாக இருந்த வருண் காந்தியும் நள்ளிரவில் வீட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். இத்தகைய கருணையற்ற மோசமான விளைவுகளுக்கான பின்னணியில்   சோனியாவின் வற்புறுத்தலும் இருந்தது என்றும் பேசப்பட்டது.

இப்படியான டாமினேட்டிங் ஃபோக்காக இருந்த சோனியா காந்தியையும் இந்திராவிற்கு பிடிக்காமல் மனம் கசந்து போய் இருந்ததெல்லாம் அன்றைய செய்திகள். மிக முக்கியமாக ராஜீவ் காந்தி சோனியா திருமணத்தில் உண்மையில் இந்திரா அம்மையாருக்கு எந்த விருப்பமும் இல்லை. அப்படியான சூழ்நிலையில் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப்பச்சனும் அவரது குடும்பமும் தலையிட்டு இந்திரா அம்மையாரை சமாதானப்படுத்தி சமரசமான முறையில் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

பிறகு இந்திரா அம்மையார் பிறப்பித்த மிசா கால அவசர சட்டத்தின் விளைவாக அப்போதைய நாடாளுமன்ற தேர்தலில் 
அவர் தோற்று ஜனதா கட்சிவெறறி பெற்றதும் மறைந்த மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில்  அக்கட்சி பதவிக்கு வந்ததும் நாடறிந்த உண்மை .

காங்கிரஸ் பதவியில் இல்லாதஅக்காலங்களில் எல்லாம் சோனியா காந்தி இத்தாலிக்கும் பிரிட்டனுக்கும் தனது குழந்தைகள் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் அடிக்கடி சென்று அங்கேயே தங்கியிருந்து நெடுநாள் கழித்து வருவது வழக்கமாக இருந்தது.
இது உண்மையில் இந்திரா காந்தி அம்மையாரை மிகவும் வேதனைப்படுத்தியது.

கணவருடன் இத்தாலி செல்லவும் வரவும் போகமாக இருந்த அவருக்கு  இந்திய அரசியலில்  எப்போதும் எந்தவிதமான கவனமும் இல்லை என்பது தான் உண்மை. இதுகுறித்து இந்திரா காந்தி அவர்கள் பலமுறை குடும்பத்தில் சரச்சித்ததும்  உண்டு. இதற்கிடையே ராஜீவ் காந்திக்கு கூட உண்மையிலேயே அன்றைய அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்பது தான் உண்மை.

மிகப்பெரிய இந்திய குடியுரிமை இல்லாமல் இந்திய அரசியல் குடும்பத்தின் மருமகள் என்பதன் பலனை மட்டுமே  சோனியாகாந்தி  இவ்வாறாக அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தார்.

சஞ்சய் காந்தி இறப்பிற்கு பின் தான் இந்திரா காந்தி ராஜீவ் காந்தியை அரசியல் அவதானத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார். சோனியாவிற்கு அதில் அவ்வளவு விருப்பம் இல்லை தனது குழந்தைகளையும் கணவரையும் தனது பாதுகாப்பின் கீழ் வைத்துக் கொள்வது தான் முறை என்று நினைத்தார். உண்மையில் இந்திய அரசியலில் அவருக்கு எந்த ஆரவமும் இல்லை. தன் கணவரோடும் பிள்ளைகளோடும் இத்தாலிக்கு சென்று அங்கு வாழலாம் என்று அவர் பிடிவாதம் பிடித்ததும் அது இந்திரா அம்மையார் குடும்பத்தில் மறுக்கப்பட்டதும் நடந்தது. இப்படியான சங்கடங்கள்  குறித்து அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த தேவராஜ்  அர்ஸ் அவர்கள் தனது நெருங்கிய சகாவான பழ நெடுமாறனிடம் கூறி வருத்தப்பட்ட காலமாகிய 1975 களில் நானும் அவர்களுடன் இருந்து அதற்கான மன உளைச்சல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். என்ன செய்ய?

சோனியாவின் குடும்பக் கவலைகளில் ஒன்றாகிய அது உண்மையாகிப் பின்னாளில் ராஜீவ் காந்தி அவரைத் துயரமான முறையில் விட்டுப் பிரிந்தார். ஏராளமான தவறான முன்னெடுப்புகள்.

 சஞ்சய் காந்திக்குப் பிறகுபிரதமர் இந்திரா காந்தி அவருக்குப் பிறகு ராஜீவ் காந்தி மூவரின் இறப்பிற்கு பிறகு சோனியா காந்தியை காங்கிரஸ் தலைவராகவும் பிரதமர் பதவிக்கும் அதன் காரிய கமிட்டி முன்மொழிந்தது .  

ராஜீவ் காந்தியின்  போபாஸ்  ஊழல் விவகாரத்தை அம்பலப்படுத்தி எழுதிய  ஒருவரான ஆங்கில  சண்டே ஏட்டில் குல்தீப் நய்யார்; அது எப்படி சோனியா காந்தி ராஜீவ் காந்தியை1969இல் திருமணம் செய்து கொண்டு  இந்தியா வந்த பின்பும்  1984 வரை ஏன் இந்திய பிரஜையாக ஆகாமல்  பிரதமர் வீட்டில் மருமகளாக இருந்தார் என்று கேட்டு முதன் முதலில் எழுப்பிய கேள்விவெளியான சண்டே பத்திரிக்கை இதழை நான்  வைகோ அவர்களிடம் கூட கொடுத்தேன். இலங்கை பிரச்சனைகள் தலை எடுத்து தீவிரமாகிக் கொண்டிருந்த 1983 களின் காலத்தில் அதை ஆதாரமாக வைத்து  கொண்டு கூட்டி வைகோ பல இடங்களில் பேசினார். அப்படி அவர்  பேசிய  காணொளிகள்  இன்னும் இருக்கின்றன.


ஜெயபிரகாஷ் நாராயண், பிஜூ பட்நாயக், ஜனதா, சிபிஎம்,ஏஜிபி போன்ற கட்சிகள் சோனியா இந்திய குடியரிமை  ஏன் பெறவில்லை என அன்று கேள்விகள் எழுப்பினர். தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா போன்ற ஏடுகள் சோனியாவை அன்றைக்கு கேள்விகளை கேட்டன.

இன்று இந்திய கூட்டணி என்றெல்லாம் மார்தட்டுகிறார்கள்.
பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் சரத்பவார் மற்றும் நவீன் பட்நாயக் எல்லாம் சோனியா பிரதமராவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அவ்வேளையில் காஷ்மீர் பரூக் அப்துல்லா மீது காங்கிரஸ் தரப்பில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் ஒரு பிரிட்டிஷ் பெண்ணைத் திருமணம் செய்தவர். அப்படியான  திருமணத்தைச்செய்தவர்  இங்கு எப்படி காஷ்மீருக்கு முதலமைச்சர் ஆக முடியும் என்று அன்றைய 1983 காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கேட்டது. அவர் சோனியா காந்தி  இந்திய பிரஜையாக  இல்லாமல் பிரதமர் இந்திராவின் மருமகளாக அவரின் இல்லத்தில் வாழ்கிறார் என பரூக் அப்துல்லா கேள்வியை எழுப்பினார்.  இது பற்றி, ஏற்கனவே- முன்பே பருக் அப்துல்லா 14 11 1977-ல் தன் பதிவு செய்துள்ளார். 

சங்கமா சோனியா காந்தி பிரதமர் ஆவதற்கு மறுப்பு தெரிவித்தவரில் முக்கியமானவர். அக் காலகட்டத்தில்  அதற்காகவே காங்கிரஸில் இருந்து வெளியேறிய
வி பி சிங் கும்  அதற்கு மறுப்புத் தெரிவித்தார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதமர் சந்திரசேகர் போன்றவர்களெல்லாம் எதிர்த்தார்கள். வங்காள முதல்வர் ஜோதி பாசும் சோனியா காந்தி பிரதமர் ஆவதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இவர்களின் வாரிசுகள் தான் இன்று இந்திய கூட்டணியில் தொடர்கிறார்கள்  சோனியா காந்தி உடன் கை கொடுக்கிறார்கள் இந்த சந்தர்ப்பவாத கூட்டணியில் தன்னை எதிர்த்தவர்களுடனும் தன்னை பிரதமராக ஆக விடாதவர்களிடம் தான் இன்றைக்கு சோனியா பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இவர்கள் வெறுமையைத்தான் பரிசளிப்பார்கள் என்பது கூட அவருக்குப் புரியவில்லை. இந்த கூட்டணியின் திட்டங்களில் சோனியா வைத்திருக்கும் நம்பிக்கை அல்லது சோனியாவை இணைப்பது மூலமாக இந்த கூட்டணி கொண்டிருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் உள்ளுக்குள் இருக்கும் பலவிதமான தந்திரக்காரர்களுடன் இணைந்து எப்படி நீடிக்கும் என்பதை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். எல்லோருக்கும் பிரதமர் ஆசை இருக்கிறது. 

 ஒரு காலத்தில் காஷ்மீரச் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட ஷேக் அப்துல்லா இறந்த பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா ஆட்சிக்கு வருகிற போது இந்திரா காந்தி அம்மையாரின் காங்கிரஸ் காரிய கமிட்டிகள்  பிரிட்டிஷ் பெண்ணை மணந்த ஒருவர் எப்படி காஷ்மீருக்கு முதலமைச்சராக முடியும் என்று கேட்டதன் மறுவிளைவாக  அமைந்தது.

இன்று ஊழ்வந்து உறுத்தூட்டும் என்பது போல் அதே சிலப்பதிகாரத்தில்   அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம் என்பதாய் சோனியா காந்திக்கு வந்து முடிந்ததை நாம்  யாருக்கும் புரிய வைக்க முடியுமா? தன்வினை தன்னைச்சுடும்.

இத்தாலிக்காரர் என்பதால் அவருக்கு பிரதமர் பதவி மறுக்கப்பட்டது. போக 1969ல் திருமணமாகி 84 வரை இந்திய பிரஜையாக இல்லாமல் ஒதுங்கிப்  பட்டு படாமல் இருந்துவிட்டு இப்பொழுது இந்திய கூட்டணியில் பங்கு பெறுவது பற்றி அந்த கூட்டணியில்  உள்ளவர்கள் தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று சொல்லுகிற சோனியா காந்தி அவர்கள் மக்கள் முன்னிலையில் யார் பிரதமர் என்று ஏன் இன்னும் சொல்லவில்லை?  பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காத நிலையில் இந்த இந்தியக் கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டு வருவது எந்த அளவில் போய் முடியும் என்றும் தெரியவில்லை.
இப்படி சோனியாவின் இந்திய குடியரிமை, பிரதமர் ஆவது கேள்விகுறியனது?

On 29th September 1974, in a private civil ceremony, Sanjay Gandhi, b. 14 December 1946, married Maneka Gandhi, b. 26 August 1956, at the home of Mohammad Yunus in New Delhi. In attendance were a handful of close family and friends that included Sanjay's mother Indira, who was then the Prime Minister of India. Lajwanti Mohammed Yunus, the wife of Mohammad Yunus made all the arrangements for the wedding including the photographs for the occasion. Yunus Mohammad was one of the witnesses to the marriage. In the picture alongside he is shown signing the papers as a witness. 

Maneka Gandhi, in an interview with Simi Grewal revealed that it was Sanjay who took the initiative to reach out to her on seeing her at his friend's wedding. This friend was also Maneka's cousin. 

Sanjay then asked the permission of Smt. Amateshwar Anand, Maneka's mother, to meet her. Mrs. Anand, the wife of  Lt. Colonel Tarlochan Singh Anand, retired, objected that Maneka, at just 17 years of age, was too young. Sanjay's persistence and good conduct, however seemed to have won her over and Maneka was allowed two visits from Sanjay every week. Maneka summed  up her relationship with Sanjay in the following words: "I don't know if it was love, I think it's something even stranger. It was as if I had come home. It was as if I had met my other half, the Ardhnareshwar, and he felt the same way". 

It was after four months that Sanjay decided to have Maneka meet with his mother, the prime minister of India. On that occasion he was too tongue tied to speak. So, Maneka recalls, Mrs. Gandhi took the initiative. "After about 10 minutes, my mother-in-law said, "Well, Sanjay is not going to introduce us. Would you like to tell me your name?"

#congress

#சஞ்சாய்காந்தி_மேனகாதிருமணம்
#சோனியாவின்_இந்தியகுடியரிமை_கேள்விகுறியனது? #SoniaGandhi_indiancitzenship
#IndiraGandhi #RajivGandhi #indirafamily
#SanjayGandhi #MenakaGandhi #Emergency1975

K.S.Radhakrishnan 
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-11-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...