*மக்கள் விரக்தியடைவதற்கான காரணம் என்னவெனில் அவர்கள் தம் வாழ்நாள் முழுக்க ஓர் உலகளாவிய உண்மையைத் தேடி அலைகிறார்கள்*. *கடைசியில் சலித்துப்போய் எல்லாமே அபத்தம், தர்க்கமற்றவை, வெறுமை எனும் முடிவை அடைகிறார்கள். ஒற்றைப் பேருண்மையோ பிரபஞ்சம் முழுமைக்குமான உண்மையோ இவ்வுலகில் இல்லை. நம் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் தனித்த அர்த்தமுண்டு, தனித்த இடமுண்டு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நாவலோ நூலோ இருப்பதைப் போல. ஆகவே, வாழ்வுக்கான ஒட்டுமொத்தப் பொருளைத் தேடுவது அவசியமற்றது. ஒருவரின் வாழ்வுக்கு நம்மால் இயன்றவரை எந்தளவுக்கு மதிப்பைத் தர முடியுமோ அதைக் கொடுத்தாலே போதுமானது. எடுத்துக்காட்டுக்கு, உலகை உய்விப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எந்த அரசியல் இயக்கத்துக்கும் என்னை அர்ப்பணிக்கவில்லை. அவை அடிப்படைவாதமும் அநீதிகளும் நிரம்பியவை என்பதனால்! ஆனால் ஒவ்வொரு தனி மனிதனிடமும் நான் மனிதத்தன்மையோடும் ஜனநாயகபூர்வமாகவும் நடந்துகொள்கிறேன். சிறிய அலகுகளிலும் பூரணம் உள்ளது*.
- அனைஸ் நின்.
•••
*கடினமான நேரத்திலும் மோசமான சூழ்நிலையிலும் நீ இருக்கிறாய் என்றால் இது தான் உன் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இந்த நேரத்தில் நீ எடுக்கும் முடிவு மிக மிக அவசியமானது* .
*உன் முடிவில் நீ உறுதியாக இல்லை என்றால் உன்னை சுற்றி இருப்பவர்கள் உன் இலக்கையே மாற்றி விடுவார்கள்*
*உன்னை குறை சொல்பவர்களுக்கு உன் துணிச்சல் தெரியாது உன்னை ஏளனப்படுத்துபவர்களுக்கு உன் தைரியம் தெரியாது உன்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு உன் பலம் தெரியாது ஆனால் உன்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும் எதற்கும் தயாராக இரு*..
*I am not a consensus politician. I'm a conviction politician*.
#கேஎஸ்ஆர் போஸ்ட்
#ksrpost
6-11-2021.The
No comments:
Post a Comment