Wednesday, November 15, 2023

*தோழர் சங்கரய்யா* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -CPM

#*தோழர் சங்கரய்யா*
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டவர்
தமிழ் மாநில செயலாளராக செயல்பட்டவர்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். நெல்லை ம.தி. தா. இந்து கல்லூரியில் படித்த இவர்  தூத்துக்குடி மாவட்ட ஆத்தூரில் பிறந்தார். இவரின் தந்தை நரசிம்மன அவர்கள் கோவில்பட்டியில் பணியில் இருந்த 
போது அங்கு பள்ளியில் படித்தார்.

முதலில் மாணவர்கள் போராட்ட காலத்தில், 1970 இல் சந்திப்பு
பின், மதுரை மண்டையன் ஆசாரி சந்தில் (சாரதா மெஸ் அருகே) இருந்த சிபிஎம்
அலுவலத்தில் வைத்து அறிமுகம். சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே  தேரடி தேரடி தெருவில் இருந்த மாநில சிபிஎம் அலுவலுகத்தில் அன்றைய செயலாளர் நல்லசிவன் உடன் பார்த்தது உண்டு. மதிமுக- சிபிஎம் கூட்டு இயக்க காலத்தில்;
அன்று சங்கரய்யா சிபிஎம் மாநில செயலாளராக இருந்த போது அடிக்கடி சந்தித்து விரிவாக அரசியல் விடயங்களை 
விவாதித்ததுண்டு. என் நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்றார். என் திருமண விழாவுக்கும் வந்து வாழ்த்தினார்

அது உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவர்
சுதந்திர போராட்ட தியாகி தோழர் சங்கரய்யா மறைவு நமக்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய பேரிழப்பாகும்
தோழருக்கு வீரவணக்கம்
செவ்வணக்கம்!

#தோழர்_சங்கரய்யா #Sakariaha
#CPM #சிபிஎம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-11-2023.


No comments:

Post a Comment

Kerala