Thursday, November 9, 2023

முதல்வர் ஸ்டாலின் அவர்களை நோக்கி தினமும் எனது ஒரு கேள்வி, பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கேள்விகள் தொடரும்

#*தினம் ஒரு கேள்வி, தமிழக முதல்வர் அவர்களே*...
(1)
————————————————————-
முதல்வர் ஸ்டாலின் அவர்களை நோக்கி தினமும்  எனது ஒரு கேள்வி, பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கேள்விகள் தொடரும்.

யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது சுயலாபம் கருதியோ இந்த கேள்விகள் முன்வைக்கப்படவில்லை..

மாறாக அரசியல் முக்கியத்துவம் 
(Political issue based ) வாய்ந்த விஷயங்களில் இந்த அரசின் புத்திசாலித்தனமற்ற நடைமுறைகள் மற்றும் தன்னைச் சுற்றி உள்ள ஜால்ராக்களை நம்பி தொலைநோக்கற்றுப் பேசும் முதல்வரின் தன்னிச்சையான போக்கு ஏன் இவ்வாறு இருக்கிறது என்பதை விவாதத்திற்கு உட்படுத்தவே இக்கேள்விகள் தினம் ஒன்றாக அவரிடம் முன்வைக்கப்படுகின்றன.

‘’இலங்கை மலையகத் தமிழர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியவை காணொளியில் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு  உண்மைதான்;சரி.… 
சரி. அதை வைக்கும் முதல்வருக்கு முதல் கேள்வி டெசோ என்ற அமைப்பில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் என்ன என தங்களுக்கு தெரியுமா? TESO…..? இதை மறந்து நாடாளுமன்றத்தில் திரு 


டி .ஆர். பாலுவும்  பேசுகிறார்’’

இலங்கை முள்ளிவாய்க்கால் பிரச்சினையில் திமுக மீது ஏகப்பட்ட அவதூறுகளை கூறியவர்கள் இன்று உங்களுடன்  செழிப்பாக இருப்பவர்கள் கூறியபோது டெசோ மாநாட்டைக் கூட்டி அனைத்து விளக்கங்களையும் கொடுத்து அதற்கு உறுதுணையாக வாதாடி நின்றவன் யார் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா?

இல்லை உங்கள் ஈழக்குழுத்தலைவர் செஞ்சி மஸ்தான் போன்றவர்களுக்கு, இலங்கைப் பிரச்சினையின் முழு பரிமாணமும் தெரியுமா? இதில் ஒரு துளி அளவு அவர்களுக்கெல்லாம் எப்போதேனும் பொறுப்பு இருந்திருக்குமா. ஈழம், பலஸ்தீன பற்றிய பிரச்சனை. முதலில் நாடு,அரசு என்றால் என்ன என படியுங்கள்.

உங்களுக்கு திமுகவில் ஆத்மார்த்தமாகவும், உடனிருந்து  பாதுகாத்து பல்வேறு வகையில் உதவி செய்தவர்களை புறக்கணிப்பது ஏன்? அன்று முதல் இன்று வரை திமுகவில் கட்சியின் அறிவு ஜீவிகளை புறக்கணித்து முகஸ்துதி பாடுபவர்களை அருகில் வைத்துக்கொள்வதன் மூலம் கட்சியின் எதிர்காலம் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதை என்றாவது உணர்ந்து இருக்கிறீர்களா?

எ. வ .வேலுகள்,  செந்தில் பாலாஜிகள், சேகர் பாபுகள் போன்றவர்கள் மட்டுமே கட்சியை காப்பார்கள் என நம்புகிறீர்களா?
என்ன சொல்ல……? 

செந்தில் பாலாஜியை இப்போதும் அமைச்சராக வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? கட்சியின் மீது என்ன விதமான விமர்சனங்கள் வெளியில் உள்ளது என்பதை அறிவீர்களா?

மக்கள், கட்சி தொண்டர்களும் மக்களும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் நாளை அடுத்த கேள்வியுடன்...

#ஈழம்_திமுக #ஈழம்_ஸ்டாலின்
#eelam_dmk
#தினம்_ஒருகேள்வி_முதல்வர்அவர்களே

(படம்-1980 களில், கோவில்பட்டியில் ……)

#தினம்_ஒருகேள்வி_முதல்வர்அவர்களே

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
9-11-2023.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...