Tuesday, November 28, 2023

*மாவீரர் நாளில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வி துவாரகாவின் உரை தமிழ் -English * *Dwaraka, the daughter of LTTE chief Velupillai Prabhakaran- speech*

*மாவீரர் நாளில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வி துவாரகாவின் உரை தமிழ் -English *

*Dwaraka, the daughter of LTTE chief Velupillai Prabhakaran- speech* 
————————————
எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
 
இன்று மாவீரர் நாள்.
 
தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில் உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பு அளித்திருப்பதை மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றேன்.






 
இப்படி ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையே ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்படுகின்றேன். அதே போல் என்றோ ஒரு நாள் தமிழீழத் தாயகம் திரும்பி, அங்கு எமது மக்களோடு கூட இருந்து அவர்களுக்காகப் பணி செய்வதற்குக் காலம் வாய்ப்பளிக்கும் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.
 
எனது அன்பார்ந்த மக்களே,
 
முழு உலகமுமே வியப்படையும் வகையில் களமுனைகளில் சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். தனித்து நின்று எம்மோடு போர்புரியத் திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளைத் தன் பக்கம் வளைத்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நிய சக்திகளிடமும், சக்திவாய்ந்த நாடுகளிடமும் மண்டியிட்டு யாசகம் புரிந்தது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீது உலகின் பல நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டு எமது வளங்கள் முடக்கப்பட்டன. தமிழீழ தாயகத்திற்கான விநியோகப் பாதைகள் மூடப்பட்டன. சிங்களப் படை இயந்திரத்தை எமது தேச சுதந்திர இயக்கம் பலவீனப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சக்திவாய்ந்த நாடுகள் தலையிட்டு சிங்களப் படை இயந்திரத்திற்கு உயிர்ப்பூட்டின. உலகின் ஒரு மூலையில் தனித்து நின்று, எமது மக்களின் ஆதரவில் மட்டும் தங்கி நின்று போராடிய எமது தேச விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போனதற்கு இதுவே காரணமாகும்.
 
ஆனாலும் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம் முற்றுப் பெறவில்லை. தமிழீழம் என்ற அரசியல் வேணவா கருக் கொள்வதற்குக் காரணமாக இருந்த புறநிலை சூழல்கள் இன்றும் கூட அப்படியே தான் இருக்கின்றன. தமது தாயக பூமியில் தமது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையோ, தத்தமது சமய வாழ்வையோ, மொழிப் பாதுகாப்பையோ பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்குப் பண்பாட்டுச் சீர்கேடுகளை ஊக்குவித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகளை மேற்கொள்வதோடு, சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை சிங்கள அரசு முழு மூச்சுடன் முன்னெடுத்து வருகிறது.
 
இவை போதாதென்று ஈழத்தீவில் முற்று முழுதாகச் சிங்களப் படையாட்சிக்கு உட்பட்ட ஒரேயொரு மாநிலமாகத் தமிழீழ தாயகத்தைச் சிங்களம் மாற்றியமைத்துள்ளது. அனைத்து சுதந்திரங்களும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாகத் தமிழீழத் தேசம் திகழ்கின்றது. சட்ட ஆட்சி மறுக்கப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என எந்நேரமும் இராணுவப் பேயாட்சியைச் சிங்களம் திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்ட ஒரு மக்களாகவே ஈழத்தீவில் எமது மக்கள் வாழ்கிறார்கள்.
 
மறுபுறத்தில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால், அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றலாம் எனப் போர் நிகழ்ந்த காலப்பகுதியில் ஆசைவார்த்தை கூறி, நம்பிக்கையூட்டிய
உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இற்றை வரைக்கும் எமது மக்களுக்கு ஒரு காத்திரமான அரசியல் தீர்வைத் தானும் வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது போர்க் குற்றம் என்றும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல் என்றும் கடந்த பதினான்கு ஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐ.நா. மன்றமும், இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றிய சக்தி வாய்ந்த நாடுகளும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழீழத் தேசத்திற்கு இற்றை வரைக்கும் ஒரு பரிகார நீதியைத் தானும் பெற்றுத் தரவில்லை.
 
இவை தான் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணிகளாகும். சமஸ்டி அரசு கோரி 1950களில் எழுச்சி கொண்ட எமது தேசத்தின் அகிம்சைப் போராட்டம், 1960களில் ஆயுத வலுக் கொண்டு சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. இதன் விளைவாகவே 1970களில் போர்க்குணம் கொண்ட இளைய தலைமுறை தோற்றம் பெற்றது. சிங்கள ஆயுதப் படைகளையும், அதன் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தையும் எதிர்த்து வீரம்செறிந்த ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத் தலைவரும் எனது தந்தையுமாகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் அணிதிரண்ட எமது இளைஞர்களும், யுவதிகளும் ஈழத்தமிழினம் ஓர் வீறுகொண்ட, மண்டியிடாத வேங்கையினம் என்பதை நிறுவினார்கள். இந்த நிலையை உருவாக்கித் தந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம்செய்த மாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றும் எம் மனக்கோவிலில் வைத்துப் பூசிப்போம்.
 
எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமது சுதந்திரத்திற்கான, எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு, எமது தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் எமது மக்களும், அரசியல் தலைவர்களும், எமது தேச விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்த போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான யதார்த்த சூழமைவில் மக்கள் என்றும், புலிகள் என்றும் ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும் யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிமாணமாகும்.
 
ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் பயணிக்க வேண்டிய கடப்பாடு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும் உண்டு. கருத்து வேறுபாடுகள் எமக்கிடையே நிலவலாம். ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதே தேசத்தின்
அரசியல் உரிமைகள் என்று வரும் போது ஒரே கோட்டின் கீழ் பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும் இருக்கின்றோம்.
 
அதே நேரத்தில் தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எமது மக்களினதும், கடந்த காலங்களில் தம்மையே அர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களின் பொருண்மிய வாழ்வை மேம்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டவர்களாக எமது தேசத்தின் வளம்கொண்ட தரப்பினர் இருக்கின்றார்கள். குறிப்பாக இதற்கான பொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எம் இன உறவுகள் அனைவரையும் பொறுப்பேற்று உதவி புரிந்தால் அந்நியர்களிடம் எமது தேசம் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படாது.
 
இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி, பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழக உறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத் தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது இனம் கடந்து இந்தியாவிலும் மற்றும் உலகநாடுகள் எங்கும் எமக்காகக் குரல் கொடுத்து துணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையோடு பற்றிக்கொள்கிறேன். தமிழீழ தேசத்திற்குப் பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழக உறவுகளும், உலகத் தமிழர்களும் எமது மக்களுக்கு உறுதுணையாக நின்று, எமது மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்தும் நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
 
எனது அன்பார்ந்த மக்களே,
 
நாம் வரித்துக் கொண்ட இலட்சியமும், இதற்காக எமது மாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் புரிந்த ஈகங்களும், சந்தித்த இழப்புகளும் அளப்பரியவை. இவை ஒரு நாளும் வீண்போகாது. நெருக்கடி மிகுந்த காலங்களில் எல்லாம் எமக்குத் தூண்களாக நின்றவர்கள் எமது மக்களாகிய நீங்களே. இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களாக எமது விடுதலையை வென்றெடுக்க ஒன்றுசேர வேண்டுமென்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றேன்.
 
மாற்றம் கண்டுள்ள உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அரசியல் வழியில், அறநெறி நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லா வகையான போராட்டங்களிலும் அரசியல் போராட்டம் மிகவும் கடினமானது. இவ் வகையான போராட்டத்திற்குப் பொறுமையும், நம்பிக்கையும், இலட்சிய உறுதியும் அடிப்படையானது. இதனை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை.
 
தமிழீழத் தனியரசே எமது தேசத்தின் இறைமையையும், தன்னாட்சி உரிமையையும் உறுதி செய்யும் என்பது எனது அசையாத நம்பிக்கை. இதுவே எமது தேசியத் தலைவரின் நிலைப்பாடும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எமது மக்கள் தமது தாயக பூமியில் அவர்களது மொழியையும், பண்பாட்டையும், தத்தமது சமய வாழ்வையும், பொருண்மிய வளங்களையும் பேணிப் பாதுகாத்து, மேம்படுத்தக் கூடிய வகையிலும், சனநாயக விழுமியங்களுக்கு இசைவாகவும், தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் பேணக் கூடிய விதத்திலும், சட்ட ஆட்சி கொண்ட மக்களாட்சியாகத் "தமிழீழம்" என்ற தனியரசு அமைவதற்கான புறச்சூழலை காலம் ஒரு நாள் கட்டவிழ்க்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு.
 
அதேநேரத்தில் தமிழீழ தாயகத்தில், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஒரு தேசமாகத் தமிழீழ மக்கள் வாழ்வதற்கு வழிசமைக்கக் கூடிய வகையில் உலகம் முன்வைக்கக்கூடிய அரசியல் தீர்வுகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு எமது தேசம் தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் உணராமல் இல்லை.
 
சிங்கள மக்களுக்கும் இந்நேரத்தில் ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சிங்கள மக்களுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்கு எதிரிகளும் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட்டதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்கள இனவெறிகொண்ட அரசு இயந்திரத்தாலும் சுயநலம் கொண்ட சிங்கள அரசியல்வாதிகளினாலும் திட்டமிட்ட வகையில் பொய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டு அப்பாவிச் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதையும் நான் அறிவேன். எனவே எம்மினத்தின் தார்மீக உரிமைகளையும் எமது மக்களின் உணர்வுகளையும், எமது அறத்தின்பாற்பட்ட போராட்டத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
 
எனது அன்பார்ந்த மக்களே,
 
எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று “எமது பாதைகள் மாறலாம், ஆனால் ஒரு போதும் எமது இலட்சியம் மாறப் போவதில்லை.” சத்தியத்தின் சாட்சியாக நின்று எமது மாவீரர்களின் தியாகமும், மாண்டு போன மக்களின் ஈகங்களும் எமது தேசத்திற்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று, என்றோ ஒரு நாள் நாம் எமது இலட்சியத்தை அடைந்தே தீருவோம்.
 
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

My beloved and esteemed people of Tamil Eelam, Today we mark Great Heroes’ Day.
I consider it a great privilege that time has provided me the opportunity to make an appearance on this sacred day when we commemorate in the temples of our hearts the defenders of our nation who laid down their precious lives to achieve our eminent goal of Tamil Eelam.
 
I had never anticipated such an opportunity will arise in my lifetime. I am making this appearance after having surmounted numerous dangers, obstacles, challenges and betrayals. At the same time, I have inexorable faith that time will one day provide me the opportunity to return to my homeland, Tamil Eelam, where I can live with my people and serve them.
 
 
 
My beloved people,
 
Our Great Heroes achieved many unimaginable feats on battle fields, making the entire world look at them in amazement. The Sinhala state which lacked the will to confront us on its own rallied powerful nations behind it. Whenever the Sinhala state was on the verge of defeat, it bowed down to alien forces and powerful nations and sought their support. Our national liberation movement was proscribed in many countries and our resources were frozen. All supply routes to our homeland, Tamil Eelam, were shut down. On every occasion that our national liberation movement weakened the Sinhala military machinery, powerful nations intervened and resuscitated it. This was the reason why the armed struggle spearheaded independently by our national liberation movement in the corner of the world, and depending solely on the support of our people, was silenced in Mullivaikal.
 
Yet, our struggle for political independence is far from over. The political conditions that led to the emergence of our aspiration for Tamil Eelam remain very much alive today. The Sinhala state has embarked on a full-scale Sinhala-Buddhisation programmes in our
homeland, and encourages the disorientation of our culture, thereby making it difficult for our people to safeguard their language, cultural values and their religious ways of living.
 
To make matters worse, Tamil Eelam is the only region in the island of Eelam where the Sinhala state has imposed total military rule. Tamil Eelam has become a nation that has been deprived of all freedoms and human rights. The Sinhala state has deprived our people the rule of law and constantly imposes Satanic rule in the form of counter-terrorism and emergency laws. Our people live in the island of Eelam with their voices silenced.
 
On the other hand, the powerful nations that promised our people and made them believe during the armed conflict that if the armed struggles came to an end our people will be able to realise their aspirations through political means have not delivered a constructive political solution. Neither the UN that filed reports within the past fourteen years that the atrocities inflicted against the Tamil people in the island of Eelam to be war crimes and crimes against humanity, nor the powerful nations that passed resolutions at the UN Human Rights Council, have taken steps to deliver remedial justice to the Tamil nation that became a victim of genocide.
These are the reasons why our struggle for political independence continues to remain alive. The non-violent struggle launched by our nation in the 1950s to create a Tamil federal state was crushed in the 1960s by the Sinhala state through military violence. It was against this backdrop that the valiant youth emerged in the 1970s. Our youth resisted, through a valiant armed struggle, the Sinhala armed forces and the oppressive state machinery. Our men and women, who rallied in their tens of thousands under the leadership of my father, our National Leader Hon. Velupillai Pirapaharan, demonstrated that the Eelam Tamils are a nation of
tigers. It was our Great Heroes who sacrificed their lives in the Tamil Eelam national liberation war who made this possible. Our Great Heroes have transcended time. Let those great, revered ones be honoured in eternity in the temples of our conscience.
 
 
 
Although the armed struggle has come to an end, our political struggle to realise our aspirations and achieve national independence continues to remain alive because of our people, political leaders, and cadres and activists who served in our national liberation movement, both in our homeland and abroad. Our struggle for independence continues with vigour. Under these circumstances, it would be meaningless to differentiate Eelam Tamils as the people and the Tigers. Our political struggle has evolved to the stage where the people and the Tigers have become one entity.
 
Yet, we must move forward our political struggle more effectively and achieve our political rights. Every Tamil, both in our homeland and abroad, has the duty to transcend party differences and differences between various organisations, and work in unity and efficacy to realise the political aspirations of the nation of Tamil Eelam and deliver justice to our loved ones who were subjected to genocide. We may have differences of opinion. Despite the differences, when it comes to the subject of our people’s political rights, we all must travel along the same path in unity.
 
At the same time, the wealthy sections of our nation have the duty uplift our people at home living below the poverty line, and build the lives of our former cadres who selflessly fought
in the past. In particular, this duty falls on Eelam Tamils living abroad. We do not have to rely on the aid of foreigners if we take responsibility for all of our loved ones living below the poverty line.
 
I thank our loved ones and political leaders in our mother Tamil Nadu, and the global Tamil Diaspora for acting as our voice and their unwavering support for many years. I also extend my hand of love to the non-Tamils in India and other parts of our world who voice for us and support us. I have inexorable faith that the people of Tamil Nadu and the Global Tamil Diaspora will stand by our people and voice for them so that they would be able to achieve their rights.
 
 
 
My beloved people,
 
Our goal is of high esteem, and the cost borne by our Great Heroes, the sacrifices made by our nation and the loses we sustained were innumerous. These will never go to waste. You, the people, were the ones who stood as our pillars during difficult times. I urge you all to come together as a people united by our goal so that we would be able to achieve our independence.
In accordance with the norms of the current global order we will continue our struggle through just and political means. Out of all struggles, a political struggle is the most difficult one. Patience, faith and resilience in our goal are the foundations of this form of struggle. I am not ignorant of this.
 
I have inexorable belief that only the creation of an independent state of Tamil Eelam would ensure the sovereignty and the right to self-determination of our nation. You all know very well that this is also the stance of our National Leader. I have inexorable faith that time will one day generate the conditions to establish the state of Tamil Eelam which will respect democratic norms, the rule of law, civil liberties and human rights, and which will allow our people to preserve, protect and develop their language, culture, their own religious ways of living, and economic resources in our motherland.
 
At the same time, I am not unaware of the fact that our nation should be willing to explore any political solutions that may be presented by the world to pave the way for the people of Tamil Eelam to live in the Tamil Eelam homeland as a nation with the right to self- determination.
 
At this conjuncture, I would like to also make a statement to the Sinhala people. We have never been against the Sinhala people. Nor are the Sinhala people our enemies. You are aware that we have never acted against the Sinhala people. I am aware that innocent Sinhala people were turned against the Tamil people by selfish politicians and the racist state machinery that planted malicious ideas in their minds. I therefore have faith that you will recognise the moral rights of our people and our just struggle.
 
My beloved people,
 
To cite our National Leader, “Our paths may change but our goal will always remain the same.” The sacrifices made by our Great Heroes and our people who lost their lives will bear witness to the truth and guide our nation. We will continue our journey on this path of truth and realise our goal one day.
 
“Tigers Yearn for the Tamil Eelam Homeland


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...