Tuesday, November 7, 2023

#*காவிரி- வைகை- குண்டாறு வாய்க்கால் இணைப்பு*

#*காவிரி- வைகை-
குண்டாறு வாய்க்கால் இணைப்பு*
 பணிகளை சீக்கிரம் செய்து முடிக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

மழைக்காலங்களில் காவிரியில் இருந்து உபரியாக வெளியேறும் நீரை கரூர், மாவட்டம் மாயனூர் தடுப்பனையிலிருந்து திருச்சி ,புதுக்கோட்டை ,சிவகங்கை விருதுநகர் மாவட்டங்கள் வழியாக
குண்டாற்றுடன் இணைப்பதன் மூலம் தென்பகுதி வறட்சி மாவட்டங்கள் யாவும் செழுமை பூத்து சிறப்பாக விவசாயம் மலர்ச்சி அடையும் என்பதைத் திட்டமாகக் கொண்டு காவிரியில் இருந்து தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறுகளை இணைக்க 14400 கோடி ருபாய் செலவில் 262 கிமீட்டர் நீளத்தில் கால்வாய் அமைப்பதாக தமிழக அரசு  ஒப்புதல் வழங்கி பணியை துவங்கியது.

2021ல் அதிமுக அரசு அதற்கான முதற்கட்ட பணியை விராலிமலையில் இருந்து துவங்கும் போது 6941 கோடி ருபாய் ஒதுக்கியதை இங்கு நினைவில் கொள்வது அவசியம்.

அதற்கப்பால் இரண்டு வருங்கள் கடந்த நிலையில்  மூன்றாவது கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் வேளையில் இதுவரை ஸ்டாலின் அரசு 2021- 2022 ஆண்டிற்கான பட்ஜெட்டில் 760 கோடியும் 2022-2023 ஆண்டிற்கான பட்ஜெட்டில் வெறும் 280 கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது இந்த பணியை மிகவும் தாமதப்படுத்துகிறது என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எது முக்கியம் என்று இவர்களுக்கு யார் சொல்லித் தரப் போகிறார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயத்திற்கு தயாராவதும் குளம் குட்டைகள் ஏரிகள் யாவும்  இந்த வாய்க்கால் இணைப்பு திட்டத்தால் கொள்ளளவு நீர் பெறவும் மற்றும் வறட்சியான இந்த மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படா வண்ணமும் இந்த மாபெரும் திட்டம் விரைவில் நிறைவேறுவதன் மூலமாகத்தான் நாட்டின் வளம் கூடும் என்பதால் அதற்கான பணியில் இன்றைய அரசு வேகம் காட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். 

வேகம் காட்டுவார்களா இழுத்தடிப்பார்களா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#காவிரி_வைகை_குண்டாறு_வாய்க்கால்_இணைப்பு_பணிகளை

#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
7-11-2023.


No comments:

Post a Comment

#கனவாகிப் போன கச்ச தீவை

இன்றைய (12-5-2024)தினமலரில்….